Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Monday, December 26, 2011

இரு நிலை உள்ள றசூல்.

தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்
-கடந்த 13  நவம்பர்  2011  அன்று வெளியான ஆக்கத்தொடர்-
நபீ (ஸல்) அவர்களுக்கு இரு நிலைகள் உள்ளன.

  1. தங்களை உயர்த்திப் பேசும் நிலை.
  2. தங்களை தாழ்த்திப் பேசும் நிலை. பணிவை வெளிப்படுத்தும் நிலை.   
  இவ்விரு நிலைகளில் தங்களை உயர்த்திப் பேசும் நிலையை "ஜலால்" என்றும், தாழ்த்திப் பேசும் நிலையை "ஜமால்" என்றும் சுருங்கச் சொல்லலாம்.


நான் உங்கள் போன்ற மனிதனே என்று சொன்ன நாபீகள் கோமான்.
انا سيد ولد ادم
(நான் ஆதமுடைய மக்களுடைய தலைவன் ) என்றும்,

انا اول من ينشق عنه القبر
(மறுமையில் கப்ருகளிலிருந்து முதன்முதலாக வெளியாகுபவன் நான்தான்) 

என்றும் கூறியுள்ளார்கள் என்பதை இங்கு சிந்தனைக்கெடுத்துப் பார்க்கவேண்டும்.மேலே எழுதிக் காட்டிய நபீகள் கோமானின் ஜலால் ஜமால் என்னும் இரு நிலைகளும் அல்லாஹ்விலும் உண்டு. 

Sunday, December 25, 2011

தெளிவு.

இன்று வஹ்ஹாபிகள் மறுக்கும் விடயங்களையும் குழம்பியுள்ள இளைஞர்களின் மனங்களையும் தெளிவு படுத்தும் வகையில் அழகிய உபதேசம் வழங்குகிறார்கள் இந்திய நாட்டைச்சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ சலீம் சிறாஜீ அவர்கள்.

அண்ணல் நபி ஒரு ரஹ்மத்.


இன்று நாம் சபர் மாதத்திலே இருந்து கொண்டிருக்கிறோம். இந்தமாதம் சுன்னத்வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளிலும் பள்ளிவாயல்களிலும் வியாபாரஸ் தளங்களிலும் பூமான் நபீ புகழ் கூறும் புனித வித்ரிய்யாஹ் ஷரீபை ஓதி வருவது அன்று தொட்டு இன்று வரை மாறாத ஒன்றாக இருந்துவருகிறது. இடையில் தோன்றிய புதுமைவாதிகள் குழப்பங்களை உண்டு பண்ணுவதையும் பெருமானாரின் அகமியம் அந்தரங்கம் அறியாமல் கொக்கரிப்பதையும் நாம் பார்க்கிறோம். அகிலத்திற்கே அருட்கொடையான அந்த முத்து நபிமீது நாம் என்றும் சலவாத்து சாலாம் கூறி. அவர்கள் புகழைப் பாடி மறுமை நாளின் அன்னார் ஷபாஅத்திற்கு உரித்துடையவர்களாகுவோமாக. கசீததுள் வித்ரிய்யாஹ் டவுன்லோட் செய்ய அந்த அடிப்படையில் அண்ணல் நபி ஒரு ரஹ்மத் என்னும் தலைப்பில் இலங்கை நாட்டைச்சேர்ந்த Dr. அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள் ஆற்றிய உரையினை உங்களுக்காய் வழங்குகின்றோம். . 

Saturday, December 24, 2011

வேறில்லை.





------------------------------------------------------------------------------------
அகந்தனில் இலங்கிய ஆதியை கண்டிட 
ஆஷிகே நீரும் ஆசைவைப்பீர் 
ஜோதி இலங்கிய துய்யோனைக் கண்டிட 
தொகுத்து நீ என்பதை அழித்துடுவீர்
 --------*---------

கல்பதன் காட்சியை கண்டு தரிசிக்க 
ஜதுபெனும் இஷ்கை ஏற்றிடுவீர் 
ஜாமிஉல் அஸ்மாவை ஞாபகம் உடன் கல்பில் 
காமிலிடம் கேட்டு தெரிந்திடுவீர்!
 --------*---------

காணலை நேரொத்த மாய துன்யாவினில் 
காலத்தை வீணிலே தள்ளிடாதீர் 
மாயுமும் மாய்ந்து மஹ்பூபைச் சேர்ந்து நீர்
மாறா அமிர்தத்தை அருந்திடுவீர்!
     --------*---------

ஆலத்தில் இலங்கிடும் அஹதெனும் பொருலதை
அனுதினம் அஹந்தனில் நினைத்திடுவீர்
கோலத்தில் அதுநின்று குறிப்பாயிலன்கிடும்
ஹூ என்பதை அன்றி வேறில்லையே !

இஸ்லாமிய இலக்குக்காக - ஆஷிகுல்லாஹ்- 

Thursday, December 22, 2011

நபி மூசா அலைஹிஸ்ஸலாமும் ஹளிர் வலீயும்.

அல்குர்ஆனில் அல்லாஹ் அவ்லியாக்களுக்கு இருக்கும் ஆற்றல்களை புரியாதவர்களும் புரியும் படி சாட்சி பகரும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஹளிர் வலீ அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சம்பவத்தினை அழகிய முறையில் உபதேசமாய் விளக்குகிறார்கள் இலங்கை நாட்டைச்சேர்ந்த Dr. அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள்.

Tuesday, December 20, 2011

அவ்லியாக்களின் பாதை.

இலங்கையில் சுன்னத்வல் ஜமாஅத்தின் மாபெரும் தூண்களில் ஒருவராய் இருந்து இஸ்லாத்தை தெளிவுற எடுத்துரைத்த. மார்க்க விரோதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட. சங்கைக்குரிய மர்ஹூம் மௌலவீ MSM பாரூக் காதிரீ அன்னவர்காளால் "அவ்லியாக்களின் பாதை" எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது. (அன்னாரின் பிழைகளை அல்லாஹு நாயன் பொருத்தருளட்டும்.)

Saturday, December 17, 2011

கல்பின் தொழுகை.

திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் இரண்டு வசனங்கள் வருகிறது. அவ்விரு வசனங்களுக்கிடையிலும் தொடர்பிருக்கிறது. அத்தொடர்பினை உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக இக்கட்டுரையை எழுதுகிறோம். அல்லாஹுத்தஆலா அவனது அருள்மறையிலே கூறுகிறான்.
 حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموالله قانتين  
"நீங்கள் தொழுகைகளின் மீதும் நடுத் தொழுகையின்மீதும் பேணுதலாக இருந்துகொள்ளுங்கள்" என்று கூறுகிறான்.

صلوات என்ற சொல் صلاة என்ற சொல்லின் பன்மைச்சொல்லாகும். صلوات  என்று சொல்லுவதன் மூலம் ஐந்து நேர தொழுகைகளையும் உள்ளடங்கி விடுகின்றது. حافظوا على الصلوات என்று சொன்ன அல்லாஹ் பின்னாலே   والصلاة الوسطى என்று   சொல்லுகிறான்.  நாம் சிந்திக்க வேண்டியது இந்த இடத்திலேதான்.

Thursday, December 15, 2011

வஹ்ஹாபிச வழியும் வான் நபி மொழியும்.


இன்று உலகின் பயங்கர நோயாகிப் பல்கிப்பெருகிவரும் வஹ்ஹாபிச நோய் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துகிறார்கள் இலங்கை நாட்டைச்சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ Dr. அஷ் ஷெய்க் அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள். 

Tuesday, December 13, 2011

நான் எனும் நீ !

நான் எனைத்தேடியத்தில்
 நானின்றிப் போனேனே
வான் மறை ஒன்றின்றேல்
கானலாய் இருப்பேனே

கண்டவன் என்றப்பே! கண்
கண்டதும் என்றப்பே!
யாரிடம் சொல்லுவது
கண்டவர் யாருண்டு!

கற்களாய் முட்களாய்
செடிகளாய் மரங்களாய்
வஸ்துவாய் தெரிந்ததெல்லாம்
இன்று...

ஹக்கனாய் றப்பனாய்
ஆதியாய் நீதியாய்
பூர்வீக ஜோதியாய்
கண்டுகொண்ட இன்பநிலை
எதைக்கொண்டு உணரவைப்பேன்!

Sunday, December 11, 2011

இறை அருள்.

இஸ்லாமிய உலகில் பிரபல்யம் பெற்றவர்களும் சூபிசக்கலையில் (Phd.) கலாநிதி பட்டம் பெற்றவர்களும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களும் கத்தார் பல்கலைக்கழக பீடாதிபதிகளில் ஒருவருமான சங்கைக்குரிய Dr. மௌலவீ தீன் முஹம்மத் அல் அஸ்ஹரீ அவர்களால் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது.

மனித உருவில் இறைவன்.

சூபிசத்துவத்தை பட்டவர்த்தனமாகவும் தெளிவாகவும் பேசி இறை அறிவை மறைவின்றிக்காட்டும் இலங்கை நாட்டைச்சேர்ந்த அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் "மனித உருவில் இறைவன்" எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம்மகிழ்வடைகிறது.

Wednesday, December 7, 2011

உதவி தேடுதல்.

  அன்பின் வாசகர்களே!
உலகிலுள்ள எந்த வஸ்துவுக்கும் பெறுமதி கூறமுடியும். ஆனால் இரண்டு விடயங்களைத்தவிர
  1.          அறிவு 
  2.          நேர்வழி (ஹிதாயத்)
 நபியுல்லாஹி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை எமனுக்கு  ராஜ பிரதிநிதியாக அனுப்பியபோது لان يهدي اللهبك رجلا  خير لك من الدنيا وما فيها முஆதே நீங்கள் எமனுக்கு  செல்கிறீர்கள். எமனிலுள்ள மக்களில் ஒருவரை அல்லாஹு தஆலா உங்களைக் கொண்டு நேர்வழிப் படுத்துவது இந்த உலகமும் உலகில் உள்ளவைகளும் உங்களிடம் இருப்பதைவிட சிறந்தது. என்று சொன்னார்கள் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள். அப்படியானால் ஹிதாயத்தின் மதிப்பை நாம் வரையறை செய்ய முடியுமா? இந்த உலகும் அதிலுள்ள அனைத்தும் இருந்தாலும் அதன் பெறுமதிக்கு ஈடாகுமா? ஆகவே நேர்வழிக்கு பெறுமதி கூறி மட்டிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Monday, December 5, 2011

இனிய இஸ்லாமிய கீதங்கள்

நெஞ்சை விட்டகலா இனிய இஸ்லாமிய கீதங்களை உங்களுக்காய் வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது.

Sunday, December 4, 2011

சிறந்த படைப்பு.


இலங்கை நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஷம்சுல் உலமா அஷ்ஷெய்க் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் சிறந்த படைப்பு எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது.

Friday, December 2, 2011

சங்கையான மாதங்கள்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய கலாநிதி ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அன்னவர்களால் புனித ஆசூரா தினத்தில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குகின்றோம்.

Friday, November 25, 2011

பிஸ்மில்லாஹ்வின் சிறப்பு

இந்திய நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலவி அவர்களால் பிஸ்மில்லாஹ்வின் சிறப்பு எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குகின்றோம் our thanks to- Muhieddeen TV

Saturday, November 19, 2011

வலீமார்களின் ஆற்றல் .



அல்லாஹுத்  தஆலா "அவ்லியாஉல்லாஹ்" எனப்படுகின்ற அவனது நேசர்கலான, அவனது நண்பர்களான, அவனது அதிகாரிகளான அந்த மகான்களுக்கு எல்லா சக்திகளையும் கொடுத்திருக்கிறான். அவன் அவ்லியாக்களுக்கு கொடுத்திருக்கின்ற சக்திகளை யாராலும் மட்டிட முடியாத அளவு வழங்கி இருக்கிறான். அவர்கள் அல்லாஹுத்தஆலாவால் செய்யப்படும் எல்லா வேலைகளையும் அவ்லியாக்கள் செய்வார்கள். இவ்வாறுதான் சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த நாங்கள் நம்ப வேண்டும். இவ்வாறு நம்புவதால் ஒருபோதும் அல்லாஹ்வுக்கு இணை ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுடைய சக்தி "عطائي" அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டவைகள். அவர்களுக்கு சுயமாக உண்டானவை அல்ல. ஆனால் அல்லாஹ்வுடைய சக்தி "ذاتي " அதாவது அவனுக்கு யாராலும் வழங்கப்படாத தனக்குத் தானே உண்டான சக்தி ஆகும்.


Thursday, November 17, 2011

இறை இறக்கம்.

இணைய அபிமானிகளே சன்மார்கத்தை தெளிவுற எடுத்துரைக்கும் சங்கைக்குரிய சிறப்பான உபதேசங்களை தேர்ந்தெடுத்து அதை உங்களுக்கு வழங்குகின்றோம். இவ்வடிப்படையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த கலாநிதி சங்கைக்குரிய ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் புனித சஹீஹுல் புஹாரீ நிகழ்வின்போது. இரவின் பிற்பகுதியில் அல்லாஹுத் தஆலா கீழ் வானுக்கு இறங்குகிறான்" என்ற நபிமொழிக்கு அளிக்கப்ட்ட சிறந்த விளக்கத்தினை உங்களுக்காய் வழங்குவதில் இஸ்லாமிய இலக்கு மகிழ்வடைகிறது.

அதன் தொடரில் இலங்கையில் வாழும் மற்றுமொரு சங்கைக்குரிய மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களால் ஆற்றப்பட்ட உரையின் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டிருந்தது அதன் பயன் கருதி அதையும் உங்களுக்காய் வழங்குகின்றோம்)

Wednesday, November 16, 2011

அவ்லியாக்கள் விடயத்தில் தெளிவு.

இலங்கையைச் சேர்ந்த சங்கைக்குரிய மர்ஹூம் மௌலவீ பாறூக் காதிரீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்காய் வழங்குகின்றோம்.அன்னாரை அல்லாஹுத்தஆலா பொருத்தருளட்டும்.ஆமீன்

Tuesday, November 15, 2011

காரூண்ய நபீ நாதரின் உலக வாழ்வின் இறுதி நிமிடங்கள்...


இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவதாவது:

நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் சாய்ந்திருந்தார்கள். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து ஆம்!என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.

Sunday, November 13, 2011

தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்.

-கடந்த 12 ஒக்டோபர் 2011  அன்று வெளியான ஆக்கத்தொடர்-

திருக் குர்ஆனில் நபீ (ஸல்) அவர்கள் பல இடங்களில் அழைக்கப் பட்டிருந்தாலும் எந்த ஓர் இடத்திலாவது அவர்கள் முஹம்மத் என்ற பெயர் கொண்டு அழைக்கப் படவில்லை.

மாறாக யா அய்யுஹன் நபிய்யு, யா அய்யுஹல் முஸ்ஸம்மிலு, யா அய்யுஹல் முத்தத்திரு என்று சிறப்புப் பெயர்கள் கொண்டு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார்கள். முஹம்மத் என்ற சொல் திருக்குர்ஆனில்  ஓர் இடத்தில் மட்டும் கூறப்பட்டிருந்தாலும் அது றசூல் என்று அவர்களை மக்களுக்குச் சொல்வதற்காகவே கூறப் பட்டுள்ளதே அன்றி அவர்கள் அழைக்கப்படவில்லை.

Friday, November 11, 2011

அழியாத தத்துவங்கள்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த அஸ் ஷெய்க் கலாநிதி ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் அழியாத தத்துவங்கள் என்னும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்காய் வழங்குகின்றோம்.

Wednesday, November 9, 2011

-தூய்மை- உன்னுடன் ஒரு நிமிடம்!


ஒரு கணம் சிந்தித்துக் கொள்! உன் பார்வை, உன் பேச்சு, உன் உணர்வு, உன் இதயம், அதன் எண்ணம் இவற்றை நீயே நீயாய் ஓர் கேள்வி கேள்! அதன் தூய்மை தன்மையை அறியும் வண்ணம். 

கடல்  அடியில் முத்துக்களும் இருப்பதுண்டு பெரும் பாறைகளும் கிடைப்பதுண்டு. எதை நீ பார்பதெனினும் ஆழத்தில் சென்றால்தானே முடியும் கரையில் தத்தளிக்கும் உனக்கு எவ்வாறு உணர முடியும் ஆழ்மனதில் உள்ளது எது என்று. 


கோபம், பொறாமை, வஞ்சகம், கபடம், எரிச்சல் இவ்வாறு உன் மனதை ஆட்கொண்ட பிணிகளை, கெட்ட நோய்களை சுகப்படுத்தி தூய்மைப் படுத்தும் வழியை தேடாமல் அதை வளர்க்கும் படியே நடக்கிறாயே! 

Friday, October 28, 2011

பெருமானாரின் இறுதி உபதேசத்தில் உண்டான மக்களுக்கான முக்கிய கட்டளைகள்.


1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….பெருமானார்(ஸல்) அவர்கள் அறபா  பெருவெளியில்  உரை நிகழ்த்தினார்கள் :-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.(
மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது)
இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.(
மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல..,
அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ, பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

Monday, October 24, 2011

இறைவனும் மன்னிப்பும்.

இலங்கை நாட்டின் ஆன்மீக மணி மகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி அவர்களால் ஆற்றப்பட்ட உரை.

Sunday, October 23, 2011

காமிலான ஷெய்கின் இலட்சணங்கள்.

  1. பெருமானார் (ஸல்) அவர்கள் வரை சென்றடைகின்ற ஸில்ஸிலாவை  (ஞான குருமார் சங்கிலித் தொடரை)க் கொண்ட நல்ல ஒரு ஷெய்கிடம் ஞான தீட்சை பெற்று ஞானத்திலும் அறிவிலும் சாம்பூரணத் தன்மையிலும் மற்றவருக்கு அருள் பாலிக்கின்ற விசயத்திலும் நல்ல பக்குவம் அடைந்திருப்பதுடன் தான் தீட்சை வழங்குவதற்கு இஜாஸாவும் (அனுமதி) பெற்றிருப்பவராக இருப்பார்.
  2. மார்க்க சட்டக் கலையிலும் கொள்கை சித்தாந்தத்திலும் ஞானக் கலையிலும் ஆழ்ந்த அறிவு (இல்மு) உள்ளவராக இருப்பதுடன் அதன்படி அமல் செய்கின்றவராயும் இருப்பார். அவ்வாறு இல்லை எனின் மனிதர்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்கிக் கொள்வார்கள். (அந்த மடையர்களான தலைவர்கள்) தானும் வழி கெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்துவிடுவார்கள் என்ற பெருமானாரின் சொல்லுக்கு இலக்காக நேரிடும்.
  3. முரீதுகளின் மூலம் ஏதேனும் பொருட்களையோ பணம் காசுகலையோ கிஞ்சிற்றும் எதிர்பார்க்காமல் அல்லாஹ்வுக்காக கடமையாற்றுபவராக  இருப்பதுடன்  முரீதுப் பிள்ளைகள் மனமுவந்து தூய்மையான எண்ணத்துடன் ஏதேனும் ஹதியாக்கள் தந்தாள் மட்டுமே ஒப்புக்கொள்பவராகவும் இருப்பார். 
  4. ஏதேனும் சருகுதல்கள் எட்பட்டுவிடின் உடனடியாக தவ்பா செய்து மீண்டு விடுவார்கள். (அத் தஸவ்வுப்- பக்கம் 90 )
  5. முரீதுப் பிள்ளைகளை ஒப்புக் கொள்வதன் மீது பேராசை கொள்ளாமல் ஞானப் பாட்டையும் நுட்பத்தையும் முக்கியத்துவத்தையும் கடின முறையைக் கையாளாமல் அவர்களுக்கு இதமாக போதிப்பவராகவும் இருப்பார்.
  6. தனது முரீதுப் பிள்ளை தன்னல்லாத மற்ற ஞான குருமார்களை விடுத்து தன்னை மட்டுமே பற்றிப் பிடிப்பவராக இருக்கிறாரா? என்பதைப் பரீட்சித்துப் பார்த்து உண்மையானவராகவும் அதில் ஆசை கொண்டவராகவும் மனத்தூய்மை உள்ளவராகவும் இருப்பதாக பெற்றுக் கொண்டால் அவரை மனமுவந்து ஏற்று ஒரு எஜமான் ஒரு அடிமையை எவ்வாறு கவனித்துக் கொள்வாரோ அது போன்று கவனித்துக் கொள்வதுடன் தன சொந்த மகனை வளர்ப்பது போன்று வளர்த்து வருவதுடன் ஒழுக்க முறைகளையும் கற்பிப்பவராக இருப்பார்.
  7. முரீதுக்கு ஏற்படுகின்ற சிறு குற்றங்களை பெரிது படுத்தாமல் இருப்பார் மறதியாகவோ அல்லது போடு போக்காகவோ ஏற்பட்டுவிட்ட தவறுகளை உடனடியாக பிடித்து விடாமல் சற்று விட்டுப் பிடிப்பவராக இருப்பார். ஆனால் தாம் ஏவிய கட்டளைக்கு மாறுபடுதலின் பால் சேர்த்து வைக்கின்ற வகையிலோ அல்லது தமது சொல், செயல்களின் மீது குறுக்கீடு தெரிவிப்பது அளவில் சேர்த்து வைக்கின்ற வகையிலோ முரீதின் செயல் அமைந்திருக்குமாயின் உடனடியாக அவனை கண்டிப்புடன் எச்சரிக்கை செய்வார் அந்த செயல்களில் இருந்து நீங்கி பிழை பொறுக்கத் தேடி அதற்காக கவலையும் கொண்டால் திரும்ப அது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று நிபந்தனை இடுபவராக இருப்பார். (ரூஹுல் பயான் பாகம் 05 பக்கம் 278 )
  8. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்றாடம் இரவு நேரங்களில் தனித்திருந்து தியானத்தில் ஈடுபடுவது போல ஒவ்வொடு நாளும் தஹஜ்ஜுத் மற்றும் இறை வணக்கங்களை நிறைவேற்றி வருவார்.

Thursday, October 20, 2011

ரூஹின் தந்தை!

இலங்கை நாட்டின் ஆன்மீக மணி மகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி அவர்களால் ஆற்றப்பட்ட உரை.

Tuesday, October 18, 2011

ஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா?

கேள்வி:

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்கிறபோது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் நாடியவற்றை இறைவனிடம் கேட்பது சுன்னத்தா? அல்லது முதுகை கிப்லாவின் பக்கம் ஆக்கி மண்றையை முன்னோக்கி நின்று துஆ செய்வது சுன்னத்தா?
பதில் சொல்பவர்: (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி என்ற அமைப்பின் அடிப்படை உறுப்பினரும், முன்னாள் எகிப்து முப்தியுமான பெரியார் ஹுஸைன் முஹம்மது மக்லூப் அவர்கள்)

மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ராவிகளில் ஒருவரான இப்னு ஹமீது என்பவர் மூலமாக கிதாபுஷ்ஷிபா என்ற நூலில் காழி இயாழ் அறிவிக்கிறார்கள்:

அபூஜஃபர் மன்ஸூர் நாழிர் என்பார் பெருமானாருடைய பள்ளிவாசலை பரிபாலனம் செய்து வந்தார். அவருக்கு மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொன்னார்கள், 'அமீருல் முஃமினீன்! இந்த பள்ளிவாசலில் உமது சப்தத்தை உயர்த்த வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் ஒரு கூட்டத்துக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும்முகமாக இவ்வாறு கூறுகின்றான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சப்தத்தை விட உங்களுடைய சப்தத்தை உயர்த்த வேண்டாம். உங்களில் சிலர், சிலரிடம் சப்தமிட்டுப் பேசுவதைப் போன்று அண்ணலாரிடம் சப்தமுயர்த்திப் பேச வேண்டாம். அப்படிச் செய்தால் உங்கள் அமல்கள் அழிந்து விடும். அதனை நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்கள்' (அல்-குர்ஆன் 49:2) என்றும்,

ஒரு கூட்டத்தினரை புகழும்முகமாக இறைவன், 'நிச்சயமாக எவர் அல்லாஹ்வுடைய தூதரின் முன் மரியதைக்காக தங்களது குரலைத் தாழ்த்திக் கொள்கின்றனரோ அத்தகையோருடைய இதயங்களை பரிசுத்தப்படுத்துவதற்காக இறைவன் சோதனை செய்தான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு' (அல்-குர்ஆன் 49:3) என்றும்,

Comment.