நபி மார்கள் சிலர்.

Posted by islamiyailakku on 10:14 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் வாசகர்களே. அல்லாஹ் உலகிலே மக்களை நேர்வழிப்படுத்த 124000 நபிமார்களை அனுப்பினான். அவர்கள் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு இடங்களிலும் மார்கத்தை மலரச் செய்தார்கள். அவர்களுக்கு வேதங்களும் சுஹுபுகளும் வழங்கப்பட்டது. 

நபிமார்கள் அனைவருக்கும் முத்திரையாக இறுதியாக உலகில் தோன்றியவர்கள் எம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாவார்கள். 

அவ்வடிப்படையில் அல்குர்ஆனிலே 25  நபிமார்களை பற்றி அல்லாஹ் கூறிக்காட்டி இருக்கிறான். 

எமக்கு கிடைக்கப் பெற்ற நபிமார்களில் ஒரு சிலரின் அடக்கஸ்தலங்களின் புகைப்படங்களை உங்களுக்காய் வழங்குகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

 நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம்


எம் உடலின் தந்தையும் இவ்வுலகில் முதல் மனிதருமான நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம். அவர்களுடைய காலாடித்தடம் இது இலங்கையில் பாவா ஆதம் மலை என்று முஸ்லீம்களாலும் இந்துக்களால் சிவனொளி பாதமலை என்றும் அழைக்கப்படும் ஒரு மலையின் மீது உள்ளது. இதை பல்லின மக்கள் சென்று பார்வை இட்டு வருகிறார்கள்.

ஹவ்வா அலைஹஸ்ஸலாம்




இது எமது தாயாரும் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அருமை மனைவியாருமான ஹவ்வா அலைஹஸ்ஸலாம்  அவர்களுடைய அடக்கச்தலத்துக்கான நுழை வாயில் உள்ளே அவர்களது அடக்கஸ்தலம் இருக்கிறது. இவர்கள் ஒரு நபி அல்ல இருப்பினும் எம் அனைவருக்கும் அன்னை என்பாதால் அவர்களையும் இங்கு நினைவு கூறுகிறோம்.

ஹாபீல் அலைஹிஸ்ஸலாம்.





இது நபி ஹாபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அடக்கஸ்தலமாகும். இவர்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களுக்கும் பிறந்தவர்களாவார்கள். அந்த கால கட்டத்திலே ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களுக்கு இரண்டு இரண்டு பிள்ளைகளாக அல்லாஹ் கொடுத்தான். அதிலே ஒன்று ஆணும் மற்றது பெண்ணுமாக இருக்கும். அவ்வாறு பிறக்கும் ஆணை அடுத்து பிறக்கும் இரட்டை குழந்தைகளில் பெண் குழந்தைக்கும் முதலில் கிடைத்த பெண்ணை அடுத்து கிடைக்கும் ஆணுக்கும் மனம் செய்து வைத்தார்கள்.

இவ்வாறு பிரந்தவர்கள்தான் காபீல் மற்றும் ஹபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும். காபீலோடு பிறந்த பெண்ணை ஹாபீல் அலை அவர்களுக்கும்; ஹாபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு பிறந்த பெண்ணை மகன் காபீலுக்கும் மனம் முடித்துக் கொடுத்தார்கள்.

காபீல் ஹாபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மனைவியை தன்வசமாக்க விரும்பினர் இதனால் அல்லாஹ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக ஹாபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்டான்.

ஹாபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை காபீல்  கொலை செய்தார். கொன்றதன் பின் என்ன செய்வதென்று அறியாத நிலையில் தவித்த பொது காகங்கள் இரண்டை அனுப்பி ஒன்று ஒன்றை கொள்ளுமாறு செய்து மற்ற காகம் கடலில் குளிப்பாட்டி அடக்கம் செய்வதை காட்டிக் கொடுத்தான். பின்னர் ஹாபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அதே போல காபீல் அடக்கம் செய்தார்.

நூஹ்  நபி அலைஹிஸ்ஸலாம்.

    


இது நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது அடக்கஸ்தலமாகும். இவர்கள் தனது உம்மத்துக்கு 950 ஆண்டுகள் உபதேசம் செய்தார்கள் அம்மக்கள் அவர்களை எதிர்த்து பாரிய அழிச்சாட்டியங்களை செய்தார்கள் இதனால் அல்லாஹ் அம்மக்களுக்கெதிராக போர் தொடுத்தான். தூபான் வெள்ளப் பேருக்கு மூலம் பேரழிவை உண்டாக்கி. இவர்களையும் இவர்களை ஏற்றுக் கொண்டவர்களையும் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் கட்டப்பட்ட கப்பல் மூலம் காப்பாற்றினான்.


 ஹூத் அலைஹிஸ்ஸலாம்.

இவர்கள் ஆத் கூட்டத்துக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அந்தக் கூட்டம் அல்லாஹ்வின் கொபாத்துக்கு உள்ளானதால் சொரசொரப்பான காற்றைக் கொண்டு சோதிக்கப் பட்டார்கள். இவர்கள் 150 வது வயதிலே இறையடி சேர்ந்தார்கள்.


 ஸாலிஹ் நபி அலைஹிஸ்ஸலாம்.


இவர்கள் தமூத் கூட்டத்துக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். இவர்கள் ஷாம் தேசத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து பலஸ்தீனுக்கு சென்றார்கள் அங்கிருந்தும் பிரிந்து மக்காவுக்கு சென்று அல்லாஹுத்தஆலாவை வழிபட்டவண்ணம் மக்காவிலேயே மரணிக்கும் வரை தங்கி இருந்தார்கள். அங்கே 120 வருட காலம் வாழ்ந்தது மக்களை இஸ்லாத்திற்கு அழைத்துக் கொண்டே இருந்தார்கள்.



 நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்.





இவர்கள் நம்ரூத் என்ற கொடுங்கோல் அரசன் ஆண்ட காலத்தில் பிறந்தவர்கள். இவர்களது தீன் பணியை தடுக்க பாரியாய் நெருப்புக் கிடங்கிலே இவர்களை நம்ரூத் போட்டான் அந்த நெருப்பை அல்லாஹ் இவர்களுக்கு பூஞ்சோலை ஆக்கி வைத்தான். சுப்ஹானல்லாஹ்.

இவர்களது அருமை மனைவி மற்றும் அருமைக் குழந்தையின் வாழ்கையை பிரதி பலிப்பதே புனித ஹஜ் யாத்திரை ஆகும். அவர்களாலும் அவர்களது அருமை மகனார் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களாலும் கட்டப்பட்டதே புனித கஃபா ஆகும்.

இவர்கள் 200 வருட காலம் உலகிலே வாழ்ந்தார்கள். தியாஹம் என்றால் அதன் மறுபெயர் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் என்பார்கள். தன் மகனையே அல்லாஹ் கட்டளை இட்டதற்காக அறுத்துப் பலியிட துணிந்த தியாகி. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று யாருமற்ற, நீரற்ற பாலை மணலில் பச்சிளம் பாலகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், தனதருமை மனைவி ஹாஜரா அலைஹஸ்ஸலாம் அவர்களையும் தனியே விட்டுவிட்டு அல்லாஹ்வை பொறுப்பாகி சென்ற அந்த உன்னத நிலை அல்லா மீது கொண்ட அன்பு, காதல் வார்த்தைகளால் வருணிக்க முடியாதவை.


நபி லூத் அலைஹிஸ்ஸலாம்.

இவர்களது சமுதாயம் பாரிய அட்டூழியம் புரிந்தார்கள். ஓரினச்சேர்கை செய்தார்கள் இதனால் கோபாமுற்ற அல்லாஹ் அவர்கள் வாழ்ந்த அந்த இடத்தையே தலை கீழாக புரட்டி விட்டான். இன்று அந்தப்பகுதி செத்த கடல் (Death Sea) என்று அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் அந்தக்கடலிலே எந்த உயிரினமும் இல்லை. அந்த பகுதியில் அதிக நேரம் தமதிப்பதையும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடுத்திருக்கிறார்கள்.  

நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்.
இவர்கள் 180 வருடங்கள் வாழ்ந்தார்கள். மறைவின் பின் இவர்கள் அவர்களது தந்தையான நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது அடக்கஸ்தலத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இது பலஸ்தீனிலே ஹப்ரூன் என்ற இடத்தில் இருக்கிறது. 

நபி எஃகூப் அலைஹிஸ்ஸலாம்.
 இவர்கள் 147 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். இவர்கள் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தந்தையாவார்கள்.


நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம்.
பொறுமைக்கு உதாரணமாக இவர்களை சொல்லப்படும். அல்லாஹ் இவர்களை பல்வேறு விதத்தில் அதிகமாக சோதித்ததாகவும் இவர்கள் அனைத்தையும் தாங்கி நின்று அவனது சோதனையில் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தொடரும்....






Categories: ,