-தூய்மை- உன்னுடன் ஒரு நிமிடம்!
Posted by islamiyailakku on 8:00 AM
ஒரு கணம் சிந்தித்துக் கொள்! உன் பார்வை, உன் பேச்சு, உன் உணர்வு, உன் இதயம், அதன் எண்ணம் இவற்றை நீயே நீயாய் ஓர்
கேள்வி கேள்! அதன் தூய்மை தன்மையை
அறியும் வண்ணம்.
கடல் அடியில் முத்துக்களும் இருப்பதுண்டு பெரும் பாறைகளும் கிடைப்பதுண்டு. எதை நீ பார்பதெனினும் ஆழத்தில் சென்றால்தானே முடியும் கரையில்
தத்தளிக்கும் உனக்கு எவ்வாறு உணர
முடியும்
ஆழ்மனதில் உள்ளது எது என்று.
கோபம், பொறாமை, வஞ்சகம்,
கபடம், எரிச்சல் இவ்வாறு உன் மனதை ஆட்கொண்ட பிணிகளை,
கெட்ட நோய்களை
சுகப்படுத்தி தூய்மைப் படுத்தும் வழியை தேடாமல் அதை
வளர்க்கும் படியே நடக்கிறாயே!
ஹஜ் கடமைக்காய்
இன்று பயணம் செய்வதை விட நீ நாடு சுற்றவும் வியாபார
நோக்கத்திலுமே பறக்கிறாயே உன்
உள்ளம் தூய்மை
என்று நீ திரும்பும்போது உணர்கிறாயா?
அன்று பிறந்த
பாலகன் என்றுதானே ஹஜ்ஜு செய்யும் உன்னை அல்லாஹு
நாயன் கூறியுள்ளான். இதனால்
உன்னிடம் ஓர்
கேள்வி! அன்று பிறந்த பாலகன்
தன்மை என்னவென்று
உனக்கேதும் புரிகிறதா?
ரூஹானியத்
தொடர்புகள், தன்மைகள் கொண்டதுவாய் திரைகள் ஏதுமின்றி அப்பாலக்னின் நிலை இருக்கும் அல்லாஹ்வின்
வாக்கு ஒரு நாளும் பொய்ப்பதில்லை
என்பது உனக்கு
தெரியும்தானே! அப்படி என்றால் நீ உன்னைக் கேள்! உன் நிலையை பார். நீ யார் என்று உனக்குத் தெரியும்.
அன்பனே இறை காதல்
உன்னில் ஏற்படவில்லையா? அவன் தூதரை நீ உன் உயிரை விட உன் உடமை உறவுகளை விட நேசிக்கவில்லையா? எந்த நம்பிக்கை உன்னை வாழ வைக்கிறது.
மரணம் உன் கால் செருப்பைவிட நெருங்கி இருக்கிறது என்பதை
நீ மறுக்காதவன்தானே! அடுத்த நொடி
நீ உயிருடன்
இருப்பாயா இல்லையா என்பதை நீ உணர்வாயா?
எவ்வாறு நீ உலகாசை பிடித்து பைத்தியமாய் அலைகிறாய்! காலத்தை
வீணே கழித்தபின் மறுமையில் ஓர்
நன்மைக்காய்
அலைவதை பெருமையாய் எண்ணுகிறாயா?
முதலில் நான் என்ன
செய்வதென்று கேட்கிறாயா! உன் எண்ணங்களை தூய்மை
படுத்து, மௌனமாய் இரு, நீ யார்
என்பதையும் நீ
செல்லும் பாதையையும் நீ உணர்ந்துகொள்வாய். அப்போது ஓர் சம்பூரணமான இறை நேசர் ஒருவரை தேடிச்சென்று. அவரிடம் பைஅத் ஒப்பந்தம் செய்து கொள். மீதமான பாதையினை அவர் காட்டுவார்.
-முஸ்தகீம்-