ஷெய்கு தாவூத் வலியுல்லாஹ்.
Posted by islamiyailakku on 8:48 AM
முத்துப்பேட்டையில் வாழும் மகான் வைத்தியக்கலாநிதி ஷெய்கு தாவூத் வலியுல்லாஹ் அவர்களது நினைவு நாளை கௌரவித்து இலங்கை நாட்டில் வாழும் சங்கைக்குரிய ஷம்சும் உலமா கலாநிதி ஜவ்ஹருள் அமல் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்களால் இயற்றப்பட்ட புனித கசீதாகள் எமது இஸ்லாமிய இலக்கின் அன்பளிப்பாய் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
மகான் ஷெய்கு தாவூத் வலியுல்லாஹ் அவர்கள் தன்னை நேசிப்போருக்கு பல்வேறு வகைகளிலே உதவிகள் செய்திருக்கிறார்கள்.
இவர்களது வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது அதிகமான அற்புதங்கள் நிறைந்திருக்கக் காணலாம். அதிலும் விசேடமாக இவர்கள் வைத்தியத்துரையிலே மாபெரும் கலாநிதியாக போற்றப்படுகிறார்கள். இவர்களை இன மத பேதம் இன்றி மக்கள் நாடி வந்து நிவாரணம் பெற்றுச் செல்கிறார்கள்.
இதை அறியாமை இருள் சூழ்ந்த சிலர் மறுப்பார்கள். மறுப்பவர்கள் மறுத்துக் கொண்டே இருக்கட்டும். நாம் அவ்லியாக்கள் விடயத்தில் உறுதியானவர்கள்.
எமது ஈமான்; எது யார் மூலம் நடந்தாலும் அது இறை செயல் அன்றி வேறில்லை. இருப்பதெல்லாம் அவனாக இருக்கும் போது எங்கனம் பிறரிலிருந்து செயல்கள் பிறக்கும். எம் கண்கள் காண்கிறதே என்றால் அது வெறும் மாயையே அன்றி வேறில்லை.

உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபாம் உண்டாவதோ
என்று கூறப்பட்டது போல.
சூரியன் நாடு வானில் இருக்கும் சமயம் ஒரு கண்ணாடியில் சூரியனை பார்த்தல் ஒரு சூரியன்தான் தெரியும். அதே கண்ணாடியை ஆயிரம் துண்டுகளாக உடைத்துப் பார்த்தல் ஆயிரம் சூரியன் தெரியும். இதை பார்த்து சூரியன் ஆயிரம் இருக்கிறது என்று ஒருவன் வாதாடுவான் எனில்; மடையன் என்பதை தவிர வேறெந்த சொல் அவனுக்கு சொல்ல முடியும். இதுதான் இவ்வுலகவும் அதில் தென்படுபவையும்.
சங்கைக்குரிய ஷம்சும் உலமா கலாநிதி ஜவ்ஹருள் அமல் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்களால் இயற்றப்பட்ட புனித கசீதாகள்