வலீமார்களின் ஆற்றல் .

Posted by islamiyailakku on 6:00 PM


அல்லாஹுத்  தஆலா "அவ்லியாஉல்லாஹ்" எனப்படுகின்ற அவனது நேசர்கலான, அவனது நண்பர்களான, அவனது அதிகாரிகளான அந்த மகான்களுக்கு எல்லா சக்திகளையும் கொடுத்திருக்கிறான். அவன் அவ்லியாக்களுக்கு கொடுத்திருக்கின்ற சக்திகளை யாராலும் மட்டிட முடியாத அளவு வழங்கி இருக்கிறான். அவர்கள் அல்லாஹுத்தஆலாவால் செய்யப்படும் எல்லா வேலைகளையும் அவ்லியாக்கள் செய்வார்கள். இவ்வாறுதான் சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த நாங்கள் நம்ப வேண்டும். இவ்வாறு நம்புவதால் ஒருபோதும் அல்லாஹ்வுக்கு இணை ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுடைய சக்தி "عطائي" அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டவைகள். அவர்களுக்கு சுயமாக உண்டானவை அல்ல. ஆனால் அல்லாஹ்வுடைய சக்தி "ذاتي " அதாவது அவனுக்கு யாராலும் வழங்கப்படாத தனக்குத் தானே உண்டான சக்தி ஆகும்.





இந்த விடயத்தை அவ்லியாகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மகான் சொன்ன கூற்றை வைத்து இவ்விடயத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.

நீங்கள் அறிந்திருப்பீர்கள் காயல் பட்டணத்திலே வாழ்ந்த மாதிஹுர் றசூல் செய்யிதுனா சதகதுல்லாஹில் காஹிரீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் அவ்லியாக்களுடைய அரசராகிய முஹ்யித்தீன் அப்துல்  காதிர் ஜீலானி அவர்களை விளித்து ஒரு கவி இயற்றி இருக்கிறார்கள். அதற்கு யா  குத்பா என்று சொல்வார்கள். இது உலகெங்கும் வாழும் மாக்களால் அன்று தொட்டு இன்றுவரை ஓதப்பட்டு வருகின்ற ஒரு புகழ் பெற்ற பாடலாகும். இவ்வுயரிய இந்தப்பாடலை முக்காலத்தில் வாழ்ந்த உலமாஉகள் அறிஞர்கள் மேதைகள் பள்ளிவாயல்கள், வீடுகளில் ஒதிவந்தார்கள். இன்று ஒரு சிலராவது இந்த யா குதுபாவை ஓதிவருகிறார்கள்.

இந்தப் பாடலில் அவ்லியாக்களுக்கு எதை செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என்ற கேள்விக்கு பதில் சொல்வதை போன்று மாதிஹுர் றசூல் சதகதுல்லாஹில் காஹிரீ அவர்கள் எழுதி உள்ளார்கள். இதில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அன்னவர்களை பார்த்து சொல்கிறார்கள்.
اذكنت للقادر المختار عبدا اطاع - اعتاك من قدرة ماشئت من مستطاع
فانت مقتـدر في خلقـــه ومطاع    - انت الوكيل له يا محــيي الديــن 

 நன்றாக சிந்தையோடு வசித்தால் மாத்திரமே விளக்கம் கிடைக்கும்.  முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும்  அடிபணிந்த அவனது மெய்யடியாரகிவிட்ட காரணத்தினால்; அல்லாஹு தஆலா நீங்கள் நினைத்தவற்றை செய்யக்கூடிய சக்தியை உங்களுக்குத்தந்துவிட்டான். அல்லாஹ்வுடைய சகல படைப்புகளிலும் அதிகாரம் செய்யக்கூடிய சக்தியை உங்களுக்களித்தான் என்று சொல்கிறார்கள் மதிஹூர் ரசூல் சதகதுல்லாஹில் காஹிரீ அன்னவர்கள்.

எனவே இதுலிருந்து  அவ்லியாக்கள் தாங்கள் நினைத்ததை செய்வார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு அது இதுவென பகுபாடுகளோ தடைகளோ கிடையாது எதை வேண்டுமானாலும் செய்வார்கள் இவ்வாறே சுன்னத்வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் வாழும் நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இதை அல்குர்ஆனை கொண்டே உங்களுக்கு தெளிவுபடுத்தமுடியும். அல்லாஹ் அவனது அருள் மறையிலே கூறுகின்றான்.
وهو خير الرازقين
"அல்லாஹ் (ரிஸ்கு) உணவு கொடுக்கக் கூடியவர்களில் மிக மேலானவன்" என்று அல்லாஹ் கூறுகிறான். 

சகோதரர்களே  அல்லாஹ்வுடைய படைப்புகளுக்கு வஜீபனம் கொடுப்பது அல்லாஹ் என்றுதான் நாம் நம்பி இருக்கிறோம். இதில் மாற்றம் கிடையாது. 

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلا عَلَى اللَّهِ رِزْقُهَا
இந்தப்பூ உலகிலுள்ள அத்துணை வஸ்துக்களுக்கும் அல்லாஹுத்தஆலாதான்  உணவளிக்கிறான்.

இவ்வாறு  கூறிய அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் (وهو خير الرازقين ) என்று கூறுகிறான். அதாவது "உணவளிப்பவர்களில் அல்லாஹ் சிறந்தவன்" என்று  அவனே கூறுகிறான்.  அப்படியாயின் கருத்தென்ன அல்லாஹ்வைப் போல உணவு கொடுக்கக் கூடியவர்கள் உலகில் அநேகர் உண்டு அதிலே அவன் மேலானவன் என்று அவன் கூறுகின்றான். உலகிலே அல்லாஹ் மாத்திரம் உணவு கொடுப்பதில்லை رازقين உணவு கொடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அல்லாஹ் மாத்திரமே உணவு கொடுக்கிறான் அவனது சிருஷ்டிகளால் உணவு கொடுக்க முடியாது அவ்வாறு கூறுவது ஷிர்க் என்றால் அல்லாஹ் அவனது அருள் மறையில் கூறியுள்ளது ஷிர்கா? அல்லாஹ் ஷிர்கைச் சொல்கிறானா. நன்றாக சிந்தித்து பாருங்கள். 


ஆகவேதான் சகோதரர்களே நீங்கள் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும் அல்லாஹுத் தஆலா தனது றிஸ்களித்தல் என்ற ஸிபத்தினை தனது அவ்லியாக்களுக்கு வழங்கி இருக்கிறான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இறை நேசர்கள் என்ற தனது வெளிப்பாட்டின் மூலமாக அல்லாஹ் உணவு கொடுக்க விரும்புகிறான் என்ற உண்மையை நீங்கள் பார்க்க விரும்பினால்; இந்தியாவுக்குச் சென்று அவ்லியாக்களுடைய தர்காக்களுக்குச் சென்று பாருங்கள். உதாரணமாக அஜ்மீர் ஷரீப், நாகூர் ஷரீப், ஏர்வாடி தர்ஹா, முத்துப்பேட்டை போன்ற இடங்களுக்குப் போனால் அவ்ளியாக்களில் காதல் கொண்டு அவர்களை நாடி அங்கேயே தஞ்சம் அடைந்த அல்லாஹ்வின் அடியார்களுக்கு அந்த நாதாக்கள் எவ்வாறு உணவு கொடுக்கிறார்கள் என்பதன் மூலம்  رازقين என்று அல்லாஹ் ஏன் குறிப்பிட்டான் என்பதை நன்றாக உணர்ந்துகொள்ளமுடியும்.


அதே போன்று
 

 فالله خير حافظا وهو أرحم الراحمين

"அல்லாஹ் அன்பு காட்டக் கூடியவர்களில் மிக அன்பு காட்டக் கூடியவன்". ஆகவே இந்த உலகிலே அல்லாஹ்வைப்போல அன்பு காட்டக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை راحمين என்ற சொல் உணர்த்தி நிற்கிறது. இதிலே அல்லாஹ் குறிப்பிடுவது அவனது அவ்லியாக்களையே ஆகும். 
وهو خير الناصرين
"உதவி செய்யக் கூடியவர்களில் அல்லாஹ் மிகச்சிறந்தவன்".
نصرت "உதவி செய்தல்" என்றால் என்ன ஒரு மனிதனுடைய நோயைக் குணப்படுத்துவதும் உதவிதான். கடன்பட்டவனுக்கு பணம் கொடுத்து உதவி செய்வதும் உதவிதான். ஆகவே அல்லாஹ்வின் கூற்றுப்படி உதவி செய்யக்கூடியவர்களும் பலர் இருக்கவே செய்கிறார்கள். 
அல்லாஹுவே உதவி செய்யக் கூடியவர்கள் என்று எமக்கு சொல்லித்தந்திருக்கின்ற  அவ்லியாக்களிடத்திலே உதவி கேட்டால் எந்த வகையில் ஷிர்க் ஆகும் அன்புக்குரிய சகோதரர்களே. அவ்வாறு அவ்ளியாகளிடத்திலே உதவி தேடுவது ஷிர்க் என்றால் இந்த வசனமும் ஷிர்க் ஆகிவிடுமல்லவா? அல்லாஹ் ஷிர்கைப் போதிப்பானா? ஆகவே சகோதரர்களே பயப்படவேண்டாம் அவ்லியாக்களிடம் சென்று உதவி கேளுங்கள். அல்லாஹ்வே சொல்லிவிட்டான் வேறென்ன அனுமதி வேண்டும் உங்களுக்கு. அல்லாஹ் அவனது ஹசானவை திறந்து தந்துவிட்டான். தயக்கமே இல்லாமல் அழைக்கவோ கோரிக்கைகளை முன் வைக்கவோ தேவைகளை கேட்கவோ பணத்தை கேட்கவோ முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவ்லியாக்களுக்கும் நாடியதை செய்யும் ஆற்றல் உண்டு. 

இன்னும் சில விளக்கங்கள் தந்தால் மேலும் உங்களுக்கு இன்னும் தெளிவாகும் எனக்கருதுகிறோம்.
 

மக்களுக்கு பிள்ளை செல்வத்தை கொடுப்பது யார்
? அல்லாஹ்தான் கொடுக்கிறான் இதுதான் எமது நம்பிக்கை. இதிலே சந்தேகம் கிடையாது. 

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاء يَهَبُ لِمَنْ يَشَاء إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاء الذُّكُورَ * أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاء عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ

அல்லாஹுத்தஆலா எவ்வாறு சொல்கிறான்

  1.     يهب لمن يشاء اناثا அல்லாஹ் தான் நாடியோருக்கு பெண் குழந்தைகளை (அருட்கொடையாகக்) கொடுக்கின்றான்.

     ويهب لمن يشاء الذكور  மேலும் அந்த அல்லாஹ் தான் நாடியோருக்கு ஆண் குழந்தைகளைக்  கொடுக்கிறான்.

3.     او يزوجهم ذكرانا واناثا மேலும் தான் நாடியோருக்கு ஆண் குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் கொடுக்கிறான்.

4.     ويجعل من يشاء عقيما தான் விரும்பியவர்களை குழந்தைச்செல்வம் இல்லாத மலடிகளாக மலடர்களாக அல்லாஹ் ஆக்கிவிடுகின்றான். 

இது யாருடைய கூற்று அல்லாஹ்வுடைய கூற்று. அவன் இந்த வசனம் மூலமாக நான்கு விதத்திலே வகைப்படுத்திக் காட்டுகின்றான். இதிலே ஒரு விடயத்தை கவனிக்கவேண்டும். முதலில் அல்லாஹ் பெண் குழந்தைகளைத்தான் சொல்கிறான். ஏனெனில் திருமணம் முடித்த தம்பதிகளுக்கு முதலில் பெண்குழந்தை கிடைப்பதுதான் "பறகத்" அருள். அதனால்தான் அல்லாஹு நாயன் முதலிலே பெண் குழந்தையைக் குறிப்பிட்டுக் கூறுகின்றான். பின்னர்தான் ஆண் குழந்தையைக் கூறுகிறான். இதை வைத்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சஹீஹான ஹதீஸ் 

البنت بركت

"பெண்குழந்தை கிடைத்தால் அது பறகத்" அதன் மூலம் வாழ்கையில் சிறப்பும் அருளும் உண்டாகும். இது பரவலாக நீங்கள் விளங்க வேண்டிய விடயம். அதை இங்கே வந்ததற்காக சுட்டிக்காட்டிவிட்டு விடயத்துக்கு வருகிறேன். 

بهب என்ற வார்த்தையைத்தான் அல்லாஹ் பிரயோகித்திருக்கிறான் 
يهب என்றால் நன்கொடையாக கொடுக்கிறான் என்றுதான் பொருள் வரும் அல்லாஹ்வுக்கு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு குழந்தைச்  செல்வத்தைக் கொடுக்க வேண்டும் என்பது அவனுக்குக் கடமை கிடையாது அவன் அவர்களுக்கு அன்பளிப்பாகத்தான்  கொடுக்கிறான்.

ஆகவே மேலே சொன்ன வசனத்தின் படி பிள்ளைச் ஹ்செல்வத்தைக் கொடுப்பது யார்? அல்லாஹ்தானே அவன்தானே அதைச் சொல்லி இருக்கிறான். ஆனால் அதே அல்லாஹ் அதே குர்ஆனில் ஈஸா நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்த செய்தியைக் குறிப்பிடுகையில் கூறுகின்றான். 

قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلامًا زَكِيًّا

ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் பைத்துல் மக்திஸிலே தவமிருந்த மரியம் (அலை) அவர்களை நோக்கி "உங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை நான் தருவதற்காக அலாஹ்வின் தூதராக வந்திருக்கிறேன்" என்று ஜிப்ரயீல் (அலை) அவர்கள் சொன்னதாக அல்லாஹ் சொல்கிறான். 

சகோதரர்களே நேர்மை என்ற கண்ணைக்கொண்டு பாருங்கள் எந்த பக்கச் சார்புமின்றி சிந்தியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு தெளிவு படுத்துவான். 

ஏற்கனவே சொல்கிறான் يهب அவன் கொடுக்கிறான் என்று ஜிப்ரயீல் (அலை) சொல்கிறார்கள் لاهب நான் கொடுப்பதற்கு என்று. அவர்கள் எவ்வாறு சொல்லிருக்கவேண்டும் அல்லாஹ் உங்களுக்கு குழந்தையைத் தரப்போகிறான்  அதற்கு உதவியாய் நான் வந்திருக்கிறேன். இவ்வாறுதான் சொல்லிருக்கவேண்டும் மாறாக நான் தரவந்திருக்கிறேன் என்று கூறுகிறார்கள் .

உதாரணமாக ஒருவர் சொல்கிறார் அப்துர் ரஷீத் தங்கள் எனக்கு ஒரு குழந்தையைத் தந்துவிட்டார்கள் என்று சொல்கிறார் என்றால் உடனடியாக இதை மறுப்பவர்கள் மிகப்பெரிய ஷிர்கை செய்துவிட்டார்  என்று  சொல்வார்கள். இதே விடயத்தை ஜிப்ரயீல் (அலை) சொன்னதாக அல்குர்ஆனிலே அல்லாஹ் கூறுகிறானே அது எந்த வகை? அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது அப்துர் ரஷீத் தங்களும் அல்லாஹ்வின் படைப்புதான் ஜிப்ரயீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வின் படைப்புத்தான். 

அந்த ஜிப்ரயீளுக்கு அந்த மலக்குக்கு அல்லாஹ்வை சம்மந்தப் படுத்தாமல் நான் என்று சொல்லும் அதிகாரத்தை யார் கொடுத்தது அல்லாஹ்தானே கொடுத்தான். அவ்வாறில்லாமல் அது ஷிர்க் என்றால் அல்லாஹ் அதை வேறு அல்குர்ஆனிலே எடுத்துரைத்திருப்பானா. அவ்வாறான ஒரு ஆற்றலை ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு கொடுத்த அல்லாஹ் ஏன் அவ்லியாக்களுக்கு கொடுக்கமாட்டானா? அவன் எம்மைப்போல கஞ்சத்தனம் உள்ளவனா? தாராளன் கொடுத்தான். எத்தனையோ வலீமார்கள் மார்தட்டிக் கூறி இருக்கிறார்கள் தங்கள் குழந்தைச் செல்வம் தருவதாக. உங்களுக்கு குழந்தைப் பாக்கியமில்லையா இறை நேசர்களிடம் சென்று தயங்காமல் கேளுங்கள் 

يا ولي الله حبلي غلاما

அல்லாஹ்வின் அதிகாரியே எனக்கு குழந்தை தாருங்கள் என்று கேளுங்கள். நிச்சயம் தருவார்கள். ஒரு நாளும் அதில் ஷிர்கு ஏற்பட்டுவிடாது.

ஷாகுல் ஹமீத் நாயகம் அவர்களது வரலாறு ஒன்றைக் கூறலாம். நானூறு பகீர்களோடு ஷாகுல் ஹமீது நாயகம் அவர்கள் பல நாடுகளுக்கும் சென்றார்கள் அந்த பகீர்களில் யாரும் ஒரு நாளும் குறைந்ததில்லை. அவர்கள் அனைவருக்கும் ஷாகுல் ஹமீது நாயகம் அவர்களே உணவு வழங்கினார்கள். 

ஒரு நாள் இவர்கள் பாகிஸ்தானிலுள்ள லாகூர் எனும் ஊருக்கு தௌஹீதை போதிப்பதற்காக  சென்றார்கள். அங்கே ஒரு பெரிய "காழி" மாக்கள் மதிப்பை பெற்ற மார்க்க மேதை நீதிபதி ஒருவர் இருந்தார்கள். அவரைப் பற்றி யாரும் குறை கூறமுடியாது.  அவர்களது பெயர் நூருத்தீன். அவர்களுக்கு எல்லாவிதமான செலவங்களுமிருந்தது. ஆனால் குழந்தைச் செல்வம் மாத்திரம் இல்லை. திருமணம் செய்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. எத்தனையோ மருந்துகள் செய்தார் எதுவுமே பலனளிக்கவில்லை. அப்போது அங்கே வந்திருந்த ஷாகுல் ஹமீத் பாதுஷா அன்னவர்களின் சபைக்குச் சென்று அவர்களிடம் விடயத்தை கூறினார்கள். அந்த நேரம் ஷாகுல் ஹமீத் நாயகம் வெற்றிலை போட்டு மென்று கொண்டிருந்தார்கள். அந்த நூருதீனை அழைத்து ஷாகுல் ஹமீது நாயஹம் அவர்கள் வாயை திறக்கச் சொல்லி தன் வாயிலிருந்த வெற்றிலையை துப்பிவிட்டார்கள். சொன்னார்கள் இன்றிலிருந்து உங்களுக்கு பத்து மாதத்திற்குள்ளாக ஒரு குழந்தை பிறக்கும். அதற்கு யூசுப் என்று பெயர் வையுங்கள். அதத்குப்பிரஹு மூன்று ஆண்குழந்தைகள் பிறக்கும் உங்களுக்கு பெண் குழந்தைகள் கிடையாது. மொத்தம் உங்களுக்கு நான்கு குழந்தைகள் கிடைக்கும் என்று எதிர் காலம் நடக்க இருப்பதை சொல்கிறார்கள் ஷாகுல் ஹமீத் பாதுஷா அன்னவர்கள். அதில் முதலாவது குழந்தைக்கு ஐந்து வயதாகும் போது அதை எனக்குத் தந்துவிடவேண்டும் என்றும் கூறினார்கள். அதுபோன்றே குழந்தைகள் கிடைத்தது. முதலாவது குழந்தைதான் யூசுப் வலியுல்லாஹ் அவர்கள். இவர்களை ஷாகுல் ஹமீத் நாயகத்தின் இடது பக்கத்திலே அடக்கம் செய்திருக்கிறார்கள். 

இப்போது விடயத்துக்கு வாருங்கள் நூருத்தீனுக்கு பிள்ளை கொடுத்து யார்? ஆகவே அல்லாஹ்வால் செய்யக்கூடியதை வலிமார்களால் செய்ய முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மேலும்; உயிருள்ள ஒருவரை மரணிக்கச் செய்வதும் மரணித்த ஒருவரை உயிர்பிக்கச் செய்வதும் அல்லாஹ்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. எப்போதாவது அல்லாஹ்வே நேரடியாக வந்து மரணிக்கச் செய்திருக்கின்றானா? உயிர் எடுத்திருக்கின்றானா? மாறாக மலைக்குள் மௌத் என்ற ஒருவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். அப்படியாயின் அல்லாஹ் எவ்வாறு சொல்லவேண்டும் மலக்குல் மௌத்தினூடாக ஒரு ஆத்மாவை மரணிக்கச் செய்கிறான் என்றுதானே சொல்லவேண்டும். 

ஆனால் அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான் 

قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون

 "நபியே நீங்கள் சொல்லுங்கள் மலக்குல்மௌத்து உங்களை மரணிக்கச் செய்கிறார்."சூரது சஜ்தாவிலே வருகிறது ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சுபஹுத் தொழுகையிலே முதல் ரக்அத்திலே எல்லோரும் ஓதுகிறார்கள். அவ்லியாக்கள் மரணிக்கச் செய்வார்கள் என்பதை மறுப்பவர்கள் இந்த வசனத்தை எப்படி ஓதமுடியும் மனச்சாட்சி இல்லையா? இதே இடத்தில் இன்ன வலியுல்லாஹ் மரணிக்கச் செய்தார்கள் என்று யாராவது சொன்னால் உடனே தௌபா செய்து கொள் என்று சொல்வார்கள். ஆனால் மலக்குல் மௌத் மரணிக்கச் செய்கிறார் என்று வரும் வசனத்தை ஓதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

ஹாஜா நாயகத்தின் மூத்த மகனார் ஹாஜா பக்ருத்தீன் சிஷ்தீ மரணிக்கச் செய்திருக்கிறார்கள். அல்லாஹ் மௌத்தாக்குதல் என்ற சிபத்தைக் கொண்டு ஹாஜா பக்ருத்தீன் சிஷ்தீ அவர்களிலே வெளியாகி இருக்கிறான். 

ஆரம்பத்தில் இவர்களை ஹாஜா நாயகத்தின் சியாரத்துக்கு 6 அடிக்கு அப்பால்தான் அடக்கம் செய்தார்கள். அங்கு வந்த ஒரு மனிதரது ஆண்குழந்தை ஹாஜா பக்ருத்தீன் சிஷ்தீ அவர்களது தர்காவிலே சிறுநீர் கழித்துவிட்டது. உடனே கப்ரிலிருந்து கை வந்து அந்தகே குழந்தையை அடித்தது குழந்தை மரணித்துவிட்டது. இதிலிருந்து என்ன விளங்குகின்றது. ஹாஜா பக்ருத்தீன் என்ற இறை நேசரிலே அல்லாஹ் மரணிக்கச்செய்தல் என்ற அவனது சிபத்தைக் கொண்டு வெளிப்பட்டிருக்கின்றான். 

  குர்ஆனை ஓதுவதோடு அதன் போதனையையும் விளங்கவேண்டும். அதன் படி ஈமான் கொள்ளவேண்டும். அல்லாஹ் வல்லோன் எம்மை பொருத்தருளட்டும்.

Categories: ,