வேறில்லை.
Posted by islamiyailakku on 6:42 AM
------------------------------------------------------------------------------------
அகந்தனில் இலங்கிய ஆதியை கண்டிட
ஆஷிகே நீரும் ஆசைவைப்பீர்
ஜோதி இலங்கிய துய்யோனைக் கண்டிட
தொகுத்து நீ என்பதை அழித்துடுவீர்
--------*---------
கல்பதன் காட்சியை கண்டு தரிசிக்க
ஜதுபெனும் இஷ்கை ஏற்றிடுவீர்
ஜாமிஉல் அஸ்மாவை ஞாபகம் உடன் கல்பில்
காமிலிடம் கேட்டு தெரிந்திடுவீர்!
--------*---------
காணலை நேரொத்த மாய துன்யாவினில்
காலத்தை வீணிலே தள்ளிடாதீர்
மாயுமும் மாய்ந்து மஹ்பூபைச் சேர்ந்து நீர்
மாறா அமிர்தத்தை அருந்திடுவீர்!
--------*---------
ஆலத்தில் இலங்கிடும் அஹதெனும் பொருலதை
அனுதினம் அஹந்தனில் நினைத்திடுவீர்
கோலத்தில் அதுநின்று குறிப்பாயிலன்கிடும்
ஹூ என்பதை அன்றி வேறில்லையே !
இஸ்லாமிய இலக்குக்காக - ஆஷிகுல்லாஹ்-
Categories: Poyetry