தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்.
Posted by islamiyailakku on 11:00 PM
-கடந்த 12
ஒக்டோபர் 2011 அன்று வெளியான ஆக்கத்தொடர்-
திருக் குர்ஆனில் நபீ (ஸல்) அவர்கள் பல இடங்களில் அழைக்கப் பட்டிருந்தாலும் எந்த ஓர் இடத்திலாவது அவர்கள் முஹம்மத் என்ற பெயர் கொண்டு அழைக்கப் படவில்லை.
மாறாக யா அய்யுஹன் நபிய்யு, யா அய்யுஹல் முஸ்ஸம்மிலு, யா அய்யுஹல் முத்தத்திரு என்று சிறப்புப் பெயர்கள் கொண்டு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார்கள். முஹம்மத் என்ற சொல் திருக்குர்ஆனில் ஓர் இடத்தில் மட்டும் கூறப்பட்டிருந்தாலும் அது றசூல் என்று அவர்களை மக்களுக்குச் சொல்வதற்காகவே கூறப் பட்டுள்ளதே அன்றி அவர்கள் அழைக்கப்படவில்லை.
இப்னு அப்தில் வஹ்ஹாப் மேற்கண்டவாறு கூறியுள்ளது அவர் நபிகள் கோமானை ஒரு "Postman" தபாற்காரன் என்ற அளவுதான் அறிந்துள்ளார் என்பதையும், நபீகள் கோமானை ஒரு கோமானாக காட்டாதிருக்க அவர் கையாண்ட யுக்திதான் அது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
நான் உங்கள் போன்ற மனிதன் என்று சொல்வதற்கும், நான் உங்கள் போன்ற சாதாரண மனிதன் என்று சொல்வதற்கும் கருத்து வேறுபாடு இருப்பதுபோல வசனத்திலும் வேறுபாடு உண்டு.
قل انما انا بشر مثلكم 110 :18 என்ற திருக்குர்ஆன் வசனத்தில் நான் உங்கள் போன்ற மனிதன் என்ற கருத்துக்குரிய சொற்களை மட்டும்தான் உள்ளதேயன்றி (சாதாரண) என்ற கருத்துக்குரிய சொல் ஒன்றுமே அதில் இல்லை. அரபு மொழி ஆய்வுள்ளவர்களுக்கு இது வெளிச்சமான விடயம்தான். ஆனால் வஹ்ஹாபிசக் கொள்கை உள்ளோர் நபீகள் கோமானை தரக் குறைவாகச் சித்தரித்துக் காட்டி மக்கள் மனதிலிருந்து "மஹப்பதுர் றசூல்" கோமான் நபீ மீதுள்ள அன்பைக் குறைப்பதற்காக தங்களின் மன இச்சைக்கும், கொள்கைக்கும் ஏற்றவாறு செருகிய சொல்தான் சாதாரண என்ற சொல்லாகும். இந்த மகான்கள் கூறுவது போல் கருத்துக் கொள்வதாயின் மேற்கண்ட திருவசனம்
انما انا بشر عاديّ مثلكم
என்றோ, அல்லது சாதாரண என்ற அர்த்தமுள்ள வேறோர் சொல் சேர்கப்பட்டோ
அருளப்பட்டிருக்க வேண்டும். அப்படி
ஒரு சொல் இல்லாமல்
பொருள் கூறுதல் பிழையானதாகும். சொல் இன்றிப் பொருள் இல்லை.
எனவே மேற்கண்ட
வசனத்துக்கு "சாதாரண" என்று பொருள் கூறி நபீகள் கோமானை தரக் குறைவாக நினைத்து நரகம் என்ற எரியும் கடலில் விழாமல் நாம் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
இன்னும் மேற்கண்ட
வசனத்தில் மிக ஆழமாக ஆய்வு செய்ய வேண்டிய ஒரு நுட்பம் தொனித்துக் கொண்டிருப்பது விசாலமான உள்ளம் உள்ளவர்களுக்கு மறைவானதல்ல. அது "குல்"
சொல்லுங்கள் என்ற சொல் ஏன் கையாளப்பட்டுள்ளது
என்ற ஆய்வோடு சம்பந்தப்பட்டதாகையால் இது
தொடர்பான ஆழமான அறிவுள்ளவர்களிடம்
கேட்டுத் தெரிந்துகொள்ளுதல்
நல்லது.
இங்கு இன்னும் ஒரு
விடயத்தை ஆய்வு செய்யலாம் அதாவது நான் உங்கள் போன்ற மனிதன் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியது தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவே அன்றி எதார்த்தம், அந்தஸ்து போன்றவற்றிலும் நான்
உங்கள் போன்றவன்
என்ற கருத்தைக் காட்டுவதற்காக அல்ல.
பணிவும், தாழ்மையும், உள்ள ஓர் அரசன் அல்லது ஒரு ஜனாதிபதி தன நாட்டு மக்களுடன் மிக அன்னியோன்னியமாக
உரையாடும்போது தனது பணிவை
வெளிப்படுத்தி
நான் உங்கள் உங்கள் போன்ற மனித என்று சொன்னால் அதற்கான அடிப்படைக் காரணத்தை விளங்கிக் கொள்ளாமல் அவரை மச்சான் என்று அழைக்க முடியுமா?
அவர் பெயர்
கொண்டு அவரை விளிக்க முடியுமா? அவரின் தொழில் கை போட்டு தோழன் போல் சுற்றமுடியுமா?
குணங்குடி மஸ்தான்
அப்துல் காதிர் ஆலிம் வலிய்யுல்லாஹ் (றஹ்)
அவர்கள் ஒரு
துறவி. திருமணம் செய்யாத ஒரு "ஷாஹித்" சிற்றின்பம் காணாத சிறந்த ஞானி. சஹாபாக்களில் அபூ ஹுறைறா
போலும், வலீமார்களில் நாகூர் நாயகம் போன்றும் பெண்ணையும் மண்ணையும் வெறுத்து
வாழ்ந்த மகான்.
இவர் தனது பாடலில்
தன்னைப் பற்றிக் கூறுகையில்.
கல்லாத
வம்பனறிவில்லாதவம்பனொரு
காசும்
பெறாதவம்பன்
கடு வாயினுங்
கொடியவம்பன் வெருட்டிக்
கடிக்கு நாயான
வம்பன்
என்றும்,
ஐயோ எனைப்போலு
மாப்பெரும் பாவி இவ்
அகிலத்திலெங்கும்
இலையே
அனியாய மனியாயமென்
பெரும் பாதகம்
யார்
பாலெடுத்தோதுவேன்
மையான கன்னியர்
வலைக்குள்ளகப்பட்ட
மாபாவி
தீபாவியான்.
என்றும்
சொல்லியிருப்பது தங்களின் பணிவை வெளிப்படுத்தவேயன்ரி எதார்த்தத்தை எடுத்துக்
காட்டுவதற்காக அல்ல.
அரபு மொழியில்
நூல்கள் எழுதிய இமாம்களில் அநேகர் தங்களைப் பற்றிக் கூறுகையில்.
يقول الفقير الحقير
(கீழ்த்தரமான வம்பன் சொல்கிறான்)
என்று எழுதி
இருப்பதும் தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்கேயாம்.
இந்த உண்மை நிலை
புரியாத மகான்கள் குணங்குடியார் பற்றிக்
கூறுகையில் அவரே
இத்தகைய பாவியாயிருக்க அவரை வலீ என்றும்,
ஞானி என்றும் எங்கனம் சொல்வது என்று கேட்கிறார்கள்.
கசீததுல் புர்தஹ்
காப்பியம் யாத்த இமாம் பூஸீரீ அவர்கள்
ظلمت سنّة من أحيا الظلام الى - أن
اشتكت قدماه الضّرمن ورم
(இரு காலும் வீங்கும் வரை இரவெல்லாம்
நின்று வணங்கிய ஒருவரின் நடைமுறைக்கு நான் அநீதி செய்துவிட்டேன்)
என்றும்,
ولا تزوّدت قبل الموت نافلة - ولم
اصلّ سوى فرض ولم اصم
(நான் எனது மரணத்துக்கு முன் எந்த ஒரு மேலதிக வணக்கமும் செய்யவில்லை. பர்ழ்-கடமையான தொழுகையைத்தவிர வேறொன்றும்
தொழவுமில்லை. நோன்பு நோற்கவுமில்லை)
என்றும் சொன்னது தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்கேயாம்.
இவ்வுண்மையை
தெரிந்து கொள்ளாமல் பூஸீரீ தொழவுமில்லை நோன்பு நோற்கவுமில்லை என்று அவர்களை தரக்குறைவாகப் பேசுவது பிழையாகும்.
இவ்வாறுதான் ஒரு ஆசிரியரும், "ஷெய்கு" ஞான குருவுமாவார். ஆசிரியர் தன்னிடம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவனிடம் மிக
நெருக்கமாகவும், இரக்கமாகவும் பேசிக் கொண்டிருக்கும்போது தனது பணிவை
வெளிப்படுத்தும் நோக்குடன் நான் உன் போன்ற
மனிதன் என்று
கூறினால் அவ்வாறு சொன்னதற்கான காரணக் கருவை விளங்கிக் கொள்ளாமல் அவருடன் ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்ளலாமா ? இவ்வாறுதான் ஒரு ஞான குரு தனது "முரீது" சிஷ்யனிடம்
சொல்வதுமாகும்.
எனவே மேற்கண்ட
இவர்கள் நால்வரும் தமது பணிவை வெளிப்படுத்தும்
நோக்குடன் அவ்வாறு சொன்னது போல்
நபீகள் கோமான்
(ஸல்) அவர்கள் தனது பணிவை வெளிப்படுத்துவதற்காகவே அவ்வாறு சொன்னார்கள் என்று கொள்ளவேண்டுமேயன்றி அவர்களை நம்போன்ற மனிதனென்றெண்ணி மச்சான் என்று கூப்பிட்டு விடவோ, எங்கடா போகிறாய் என்று கேட்டுவிடவோ
முடியாது.
( தொடரும்....)