அஷ் ஷுப்பான் இலவச பாட நூல் விநியோகம் 2012
Posted by islamiyailakku on 3:13 PM

ஆம், 2012-12-26 அன்று அஷ் ஷுப்பான் நலன்புரிச் சங்கம் காத்தான்குடி 5 பத்ரிய்யாஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் மற்றும் அதிதிகள் சூழ 1000 பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கி நாட்டின் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் சமூகத்தின் புத்துணர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டுளனர்.
தமது நகரில் மாத்திரம் அல்லாது தம்மை அண்டியுள்ள அயல் கிராமங்களுக்கும் சேர்த்து பாலமுனை, மஞ்சந்தொடுவாய், சிகரம் போன்ற பகுதிகளில் வாழும் மாணவ மாணவிகளும் இந்த நிகழ்வில் இணைத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வளர்க அஷ் ஷுப்பான் ஓங்குக உங்கள் சேவை.
நிருவாகம்
அற்புதம் இணையத்தளம்.
அவற்றில் எமக்கு கிடைக்கப் பெற்ற புகைப்படங்கள இணைத்திருக்கின்றோம் உங்கள் பார்வைக்காக.
அஷ்ஷுப்பான் நலன்புரிச்
சங்க உதவிப்பணிப்பாளரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான MHM. நிப்றாஸ் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை வழங்கும் போது.
அஷ்ஷுப்பான்
நலன்புரிச் சங்க பணிப்பாளர், சட்டத்தரணி MIM. அஜ்மீர் (LLB.) அவர்கள் ஆற்றிய தலைமையுரை நிகழ்த்தும் போது.
பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளவாயலின் தலைவர் மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ J.P அவர்களால் இலவச புத்தகம் வழங்கி
வைக்கப்படுகிறது.
றப்பானிய்யஹ்
அறபுக் கலாபீட விரிவுரையாளர் மௌலவீ MMA. மஜீத் றப்பானீ அவர்களினால் இலவச புத்தகம்
வழங்கப்பட்டது.
அன்வர் பாடசாலையின்
அதிபர் YLM. தாஸீம் J.P அவர்களினால் இலவச புத்தகம் வழங்கப்பட்டது.
அல்ஹாஜ் அப்துல் ஜவாத்
ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர் KRM. ஸஹ்லான் றப்பானீ BBA
(Hons) JP அவர்களினால் இலவச
புத்தகம் வழங்கப்பட்டது.
அஷ்ஷுப்பான்
நலன்புரிச் சங்கத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ அவர்களினால் இலவச புத்தகம்
வழங்கப்பட்டது.
அஷ்ஷுப்பான் நலன்புரிச்
சங்கத்தின் பணிப்பாளர், சட்டத்தரணி MIM. அஜ்மீர் (LLB.) அவர்களினால்
இலவச புத்தகம் வழங்கப்பட்டது.
மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய அதிதிகள் உரை நிகழ்த்தும் போதும் இலவச புத்தகங்கள் வழங்கும் போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அஷ்ஷுப்பான்
நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக
முகாமையாளர் KLM. அலீம் அவர்களால்
நன்றி உரை வழங்க்கபட்டது.
புகைப்படங்களை எமக்கு அனுப்பி வைத்த சகோதரர்
MIM நிப்ராஸ் அவர்களுக்கு
எமது நன்றிகள்.
Categories: Gallery