நான் முஸ்லிம்???

Posted by islamiyailakku on 12:06 AM
المسلم من سلم المسلمون من لسانه ويده

யார் முஸ்லிம் என்று பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 

"யாருடைய நாவிலிருந்தும், கையிலிருந்தும் ஏனைய முஸ்லீம்கள் ஈடேற்றம் பெற்றிருக்கின்றார்களோ அவனே முஸ்லிம் என்றார்கள்."

எனவே! யாரும் எம்மை கேட்கத்தேவை இல்லை நாமே நமக்குள் கேட்டுக் கொள்வோம். இன்று அடுத்த முஸ்லிமுக்கு எனது நாவினால் நான் செய்த அநீதம் என்ன? எனது உடல் உறுப்புகளால் செய்த அநீதம் என்ன? 

இந்த வினா எமக்குள் எழுந்தால் நாம் யார் என்று எம்மால் எம்மை அடையாளம் கண்டு கொள்ள முடியும்? நான் ஒரு முஸ்லிமா? இல்லையா? என்று கேள்.

ஆம் என்று வந்தால் அல்ஹம்துலில்லாஹ். இல்லை என்று வந்தால்!!! 
நாம் முஸ்லீமாக என்ன வழி? 

மேலே சொன்ன திரு வாக்கிலே சொல்லியல்லவா தந்திருக்கிறார்கள் எம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவசல்லம்.

எனவே நாம் பெயரளவில் முஸ்லீமாக இருப்பதை தவிர்த்து உண்மையான முஸ்லீமாக வாழ்வோமாக! 

இன்று நாம் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம் மரணம் எம்மை எமது செருப்பை விட நெருங்கி இருக்கிறது. ஏன் மரணத்தைக் கண்டு நாம் அஞ்சே வேண்டும். மரணம் எம்மைக் கண்டு அஞ்ச வேண்டாமா? 

அன்பனே ஒருவன் உனக்கு இரவலாய் தரும் ஒன்றை நீ பேணுதலாய் பயன்படுத்தவேண்டும். அதை நீ மாசுபடுத்துவது அநீதம் இளைப்பதே ஆகும். 

நாகரீகம் எது? இரவல் தந்தவன் கேட்கும் முன்பே இரவல் பெற்றதை கொடுப்பதென்பது உனக்குத் தெரியாததா? இல்லைதானே!

இதை எல்லாம் அறிந்த நீ ஏன் அல்லாஹ் உனக்களித்த இரவல்களான சொத்துக்களை நாசம் செய்கிறாய்? உன்னுடையதாய் நினைத்து இரவல் கொடுத்தவனை மறந்து மோசம் செய்கிறாய்? இரவல் தந்தவன் எப்போதும் கேட்பான் என்பதை மறந்து இரவல் பொருளை நீ விலை பேசி விற்க்கின்றாயே ! இதுவல்லவா அநியாயம். 

அவன் உன்னிடம் நான் கொடுத்தவற்றை கொடு என்பான், நீ கொடுக்க மறுத்தாலும் அவன் எடுக்காமல் விடமாட்டான். அதை மாசு செய்த நீ தூசு தட்டமுன்னரே செயல் இழந்து, பேச்சிழந்து, மூச்சிழந்து விடுவாய்!
அதன் பின் "வா ஹஸ்ரதா" என கை சேதப்படுவதை விட இப்போதே விழித்துக் கொள்! நீ யார் என்று உன்னைக் கேட்டுக் கொள்! முதல் நீ முஸ்லிமாகு பின் முஃமினாகலாம். 

ஆசிரியர்.
அற்புதம்.
Categories: