மரணம்!

Posted by islamiyailakku on 3:00 PM


அன்பின் சகோதரர்களே!
அல்லாஹ்அவனது அருள் மறையிலே கூறுகிறான்  எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்(அல் குர்ஆன் 3:185) என்று. அந்த அடிப்படையில் மரணம் என்பது எமக்கு வராமல் விடப்போவதோ அல்லது எம்மை விட்டும் தூரமான ஒன்றோ கிடையாது ஆதி நபி ஆதம் அலை அவர்கள் முதல் இன்று வரை எந்த ஓர் உயிரையும் மரணம் விட்டுவைத்தாக சரித்திரம் இல்லை.

இவை அனைத்தையும் நாங்கள் உணர்ந்திருந்தும் கூட அல்லாஹ்வுக்கு சற்றும் அஞ்சாமல் அட்டூலியங்களிலும் அநியாயங்களிலும்  எமது காலங்களை செலவிடுகின்றோம். அல்லா எமக்களித்த நேரங்களை வீண் விரயம் செய்கிறோம் அறியாமல் செய்யும் பிழைக்கு மன்னிப்பும்  மீட்சியும் இருக்கிறது அறிந்தே செய்தால் அதற்கு தண்டனை கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது. இங்கே வெறுமனே காலங்களை கழிக்கும் ஒரு அடியானின் நிலை பற்றி அல்குர்ஆன் எமக்கு தெளிவு படுத்துகிறது 
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!என்று கூறுவான். நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)
அல்லாஹ் எமக்களித்துள்ள நாட்களையும் நேரங்களையும் வீணே கழித்தபின் இறுதி நொடியில் அழுது சலித்து என்ன லாபம் கிடைக்கப் போகிறது. ஆகவே எமக்கு அல்லாஹ் கொடுத்துள்ள அருட்கொடைகளை எண்ணி அவனை துதித்து போற்றுபவர்களாக நாம் மாறவேண்டும்  எம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக ஆமீன்!
Categories: ,