கத்தாரில் மனம் கமழும் இரு பெரும் மனாகிப் மஜ்லிஸ்.
Posted by islamiyailakku on 8:14 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.
கத்தார் நாட்டில் தொழில் ரீதியாக இடம்பெயர்ந்து வாழும் எம் இலங்கை நாட்டைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கால் சகோதரர்கள் ஒன்றிணைந்து மிக சிறப்பாக கடந்த நாட்களாக நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் புகழ் போற்றும் புனித கசீததுல் வித்ரிய்யஹ் ஷரீபினை ஓதி வருகிறார்கள்.
அந்த வரிசையில் பூமான் நபியின் பரம்பரையில் வந்தவர்க்களும் இந்திய நாட்டில் பிறந்து பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய மகான் அஸ் செய்யிதுஸ் ஷேய்க் அப்துர் ரஷீத் தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் நினைவு தின மனாகிப் மஜ்லிஸ் கடந்த 04-01-2013 வெள்ளி இரவு 9.30 மணிக்கு புனித வித்ரிய்யஹ் ஷரீபை தொடர்ந்து நடைபெற்று துஅஹ் பிரார்த்தனை செய்யப்பட்டு இனிதே சலவாத்துடன் நிறைவுற்றது.
இந்நிகழ்வில் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
நன்றி.
இப்னு பாறூக்.