நோன்பின் மாண்பு

Posted by islamiyailakku on 1:08 AM
அஸ்ஸலாமு  அலைக்கும்
எம்மை எதிர் நோகிக் கொண்டிருக்கும் புனித ரமழான் அல்லாஹு தஆலா எமக்களித்த பெரும் அருட்கொடைகளில் ஒன்றாகும்.
  1. கலிமா
  2. தொழுகை
  3. நோன்பு  
  4. ஸகாத்
  5. ஹஜ்         
இவ்வாறு அவன் எமக்களித்த 5 கடமைகளில் நோன்பு மூன்றாம் இடத்தையும் ஸகாத் 4 ம் இடத்தையும் பிடிக்கிறது. இந்த நோன்புடைய மாண்புகள் ஏராளமாகவே இருக்கிறது.
قال تعالى:  يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون .
அல்லாஹு தஆலா அவனது அருமறையிலே கூறுகிறான்
ஈமான் கொண்டவர்களே உங்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றே உங்களுக்கும் நோன்பு கடமையாகப் பட்டுள்ளது நீங்கள் தக்வா தரிகளாக இருப்பதற்காக என்று கூறுகிறான்



الصوم என்ற அரபு பதத்திற்கு  الامساك என்று பொருள் அதாவது தடுத்திருத்தல் என்பதாகும். தடுத்திருத்தல் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது என்று பார்த்தால் நாம் எண்ணுவது போல் உண்பதையும் குடிப்பதையும் தடுதிருத்தல் என்பதல்ல. அதற்கு உண்மையான அர்த்தம் உண்ணாமல் குடிக்காமல் ஏனைய நோன்பை முறிக்கும் காரியங்களை செய்யாமல் இருப்பதோடு அல்லாஹ் அல்லாத சிந்தனை வராமலும் தடுத்துக் கொள்ளல் வேண்டும். இதுதான் உண்மையான நோன்பு முறையாகும். உதாரணமாக தொழுகையில் அல்லாஹ் அல்லாதவரை முன்னிருத்தினாலோ அல்லது அவனல்லாத ஒன்றை எண்ணினாலோ அந்த தொழுகை பாலகி விடுவது போலவே இந்த நோன்பும் பாலகிவிடும்
இதனால்தான் அறிஞர்கள் நோன்பை மூன்றாக வகைப்படுத்துகிறார்கள்
  1. சாதாரண நோன்பு
  2. விசேடமான நோன்பு
  3. விசேடத்திலும் விசேடமான  நோன்பு
இதில் முதலாவது வகை நாம் அனைவரும் நோற்பது போன்ற சாதாரண முறையிலான நோன்பாகும் நோன்பை முறிக்கும் காரியங்களை செய்யாமல் இருப்பதாகும்

இரண்டாவது முறை முதலாவது முறை போன்று நோன்பை முறிக்கும் காரியங்களை செய்யாமல் இருப்பதோடு பாவங்கள் நிகழாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ளுதலாகும். எவ்வாறென்றால் சாதாரமாக பொய் சொல்லுதல் என்பதால் நோன்பு முறியாது ஆனால் பொய் சொன்னதற்காக பாவம் கிடைக்கும் ஆனால் இந்த இரண்டாவது முறை நோன்பை நோற்ற ஒருவர் பொய் சொல்லிவிட்டால் அவரது நோன்பு முறிந்துவிடும். இது போன்று இவனிலிருந்து எந்த பாவம் நிகழ்ந்தாலும் நோன்பு முறிந்து விடும் இது எமக்கு நோன்பு அளிக்கின்ற பயிற்ச்சிகளில் ஒன்றாகும். இந்த முறையில் நோன்பிருக்கும் ஒருவன் பாவங்களிலிருந்து  தன்னை பாதுகாக்கப் பழகுகிறான் நாளடைவி அதன் மூலம் அவன் தன்னை பக்குவப்  படுத்திக்கொள்கிறான் இதையே தனது வாழ்வின் நோன்பு அல்லாத நாட்களிலும் எடுத்து நடக்கிறான். இதன் மூலம் பாவக் கரைகளிலிருந்து மீண்டு நல்லடியார்களில் ஒருவராகிறான். இதனாலேயே அல்லாஹ் நீங்கள் தக்வா தாரிகளாக ஆகுவதற்காக என்று கூறுகிறான். சாதாரண நோன்பை விட இந்த நோன்பு சிறப்பையும் பயனையும் உடையதாகவே இருக்கிறது ஆகவே நாங்கள் இந்த நோன்பை பிடிப்பவர்களாக எம்மை ஆக்கிக் கொள்ளவேண்டும் அல்லாஹ் எமக்கு அதை கொண்டு பயனளிப்பானாக ஆமீன்.
மூன்றாவது வகைதான் சற்று சிக்கலானது ஏன் எனில் அந்த முறையில் நோன்பு நோற்பவன் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து அணுவும் பிசகாமல் இருக்கவேண்டும் இவ்வாறு இருப்பது என்பது சாதாரண விடயமல்ல. ஆனால் இறை நேசர்களான வலிமார்கள் இந்த நோன்பையே நோற்கிறார்கள். அது எவ்வாறு  அவர்களால்  மாத்திரம் இம்முறையில் நோன்பிருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம் அதற்கான தீர்வுதான் இஸ்லாத்தின் ஆரம்ப அறிவு கலிமா தரும் விளக்கமாகும். ஆகவே இதை அறிந்து விளங்கி தெளிவு கொண்டு கலிமாவை சுவாசமாகி வாழும் ஒருவரால் நிச்சயமாக முடியும். கலிமா தரும் விளக்கம் அல்லா அல்லாதது ஒன்றுமில்லை என்பதாகும் ஆகவே இதில் தெளிவு கொண்ட ஒருவரால் அனைத்தையும் ஹக்குடைய வெளிப்பாடாகவும் கேட்பதனைத்தும் ஹக்குடைய ஒலியாக உணரும் ஒவ்வொன்றையும் ஹக்காகவும் உணர முடியும் ஆகவே இந்தநிலையை நாங்களும் அடைய முயற்சிக்க, அடைய முடியும்  என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது ஆகவே இன்றிலிருந்து எமது நோன்பை இரண்டாவது படித்தரத்திலாவது நோற்க நாம் மனதில் நாட்டம் வைத்து எமது ஈமானை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பில் உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த இறை ஞானம் உடைய அறிஞர்களை நாடி தெளிவு கொள்ளவும் அல்லாஹ் நாயன் ஞானமுல்லோனும் கிருபை உள்லோனுமாய் இருக்கிறான்.
முற்றும். 
****************************************
Categories: ,