கத்தாரில் பத்ர் சஹாபாக்களின் நினைவு நாள்!
Posted by islamiyailakku on 9:19 AM
தகவல்: நபீஸ்
முஹ்யித்தீன் (படம் இணைக்கப்பட்டுள்ளது )
இன்று நள்ளிரவு 12 மணிக்கு பத்ரு சஹாபாக்களின் நினைவுதினம் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் கத்தாரில் மிக சிறப்பாக
நடைபெற்றது இதில் பத்ரு சஹாபாக்கள் பேரிலான மௌலித்
மஜ்லிஸ் நிகழ்வும் மௌலவீ நஸீம்
அஹ்மத்
றப்பானீயின் மார்க்க விளக்க உரை பயான் நிகழ்வும்
சகோதரர் பாடகர் பிஹாம் அவர்களின் பத்ர் சஹாபாக்களின்
புகழேந்தி வந்த பாடலும் இடம்பெற்றது.
அதனை அடுத்து
இலங்கை நாட்டில் காத்தான்குடியில் நேற்று இறை அடி சேர்ந்த சங்கைக்குரிய மஜீத் றப்பானீ அவர்களின் தகப்பனாருக்கும்
ஹுப்புல் பத்ரிய்யீன் சங்க கணக்காய்வாளர் சகோதரர் ஜாபிர் அவர்களின் தாய்க்கும்
ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது. அதனை அடுத்து சஹர்
உணவும்
வழங்கப்பட்டு பின்னர் சுபஹுத்தொழுகை ஜமாஅத்துடன் நடைபெற்று
இனிதே சலவாதுடன் நிகழ்வுகள்
நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.