சகாதும் சதகாவும்.

Posted by islamiyailakku on 7:30 PM
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).


அன்பிற்குரியவர்களே பூத்துக் குலுங்கும் அருள் மிகு ரமளானில் இன்று நாங்கள் இருக்கிறோம். அல்லாஹ் எங்களில் சிலருக்கு அவனது செலவத்தை தந்திருக்கிறான் அதை கொடுக்குமாறும் ஏவுகிறான் இது எங்களுக்குஉரிமையானதல்ல என்பதை நாங்கள் உணர்ந்தால் அல்லாஹ்வுடைய கட்டளையை நாங்கள் ஏற்று நடக்கமுடியும் ஏனெனில் செல்வம்  என்பது  அல்லாஹ் ஒருவனுக்கு  மாத்திரம்  உரிமையானதே எங்களுக்கு இரவலாக அமானிதமாகவே அதை அளித்துள்ளான். ஆகவே அவன் அதை மீள கேட்கும்போது கொடுத்தே ஆகவேண்டும்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்கு உயர் சஹாபாக்கள் போல் யார் இருக்கிறார்கள். யுத்தத்துக்காக பெருமானார் பொருள் கேட்டபோது உயர் அபூபக்கர் சித்தீக் ரழி அவர்கள் தன் வீட்டில் எந்த பொருளும் மீதமில்லாமல்  அள்ளிக் கொணர்ந்து குவித்தார்கள். அல்லாஹ் அதனால்தான் அவர்களை ஈருலகிலும் மேலோங்க வைத்தான்.
அன்பின் சகோதரர்களே இன்று சிலர் ஹராமான வழிகளில் அதிகம் அதிகம் சம்பாதிக்கிறார்கள் இது அல்லாஹ்வுக்கு  பொருத்தமற்ற முறை என்பதால்அதில்  செய்யும்  தர்மத்தை  அல்லாஹ் ஏற்கவும்  மாட்டன். இதனால்தான் நபிமொழி இவ்வாறு வந்துள்ளது  
அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி).
ஆகவே எமது உழைப்பை ஹலாலான வழிகளில் நாம் தேய்க்கொல்வது அவசியமாகும்.
இன்று நாங்கள் பார்க்கிறோம் செல்வந்தர்கள் ஏழைகளை மொத்தமாக எடுத்து சிறிய சிறிய தொகையை அவர்களுக்கு சகாத் என்ற பேரில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த முறை மூலம் ஒருவர் கூட பூரண திருப்தியையோ அல்லது அவர்களின் பிரதான தேவை ஒன்றையோ பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அல்லாடுகிறார்கள் ஆகவே சகாத் கொடுக்க முன்வரும் நீங்கள் ஒன்றோ அல்லது உங்கள் வசதிக்கு ஏற்றால் போலோ சிலரை தெரிவு செய்து அவர்களின் தேவைகளில் ஒன்றை பூர்த்தி செய்ய உதவுங்கள் அத்ச்ன் மூலம் அல்லாஹ் உங்கள் செல்வத்தை பண்மடன்காக்குவான் இன்ஷா அல்லாஹ்.
நீங்கள் ஒரு மடங்கு கொடுத்தால் அல்லாஹ் பத்து மடங்காக திருப்பி தருவதாய் வாகளித்துல்லான். ஆகவே நேயர்களே அல்லாஹ் எமக்களித்த கொடையில் இருந்து எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு நாம் கொடுத்து உதவவேண்டும் என்ற உறுதியை இந்த ராமலாநிளிருந்தே எடுத்துக் கொள்வோமாக அத்தோடு எமது வாழ்விலும் அதை நடைமுறைப் படுத்துவோமாக. அல்லாஹ் எங்களை ஈருலகிலும் ஈடேற்றுவான். ஆமீன்.

                                                                                                                                                           


Categories: ,