Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Saturday, September 29, 2012

ஹஸ்ரத் உமர் பாறூக் ரழியல்லாஹுஅன்ஹு...



கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா (ஸல்-அம்) அவர்களின் தலையினைக் கொய்தே திரும்புவேன் (நஊது பில்லாஹி மின் ஜமாலிக்) என வாளோடு சூளுரைத்து கிளம்பியவர்கள்; அல்லாஹ்வின் வேத வசனங்களை கேட்டதும் நெஞ்சு படபடத்து, நாயகம் (ஸல்-அம்) அவர்களின் கண்களை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் நாணிக் குறுகி இஸ்லாத்தை ஏற்றவர்களும், நபித்துவம் என்னுடன் முற்றுப் பெறாதிருந்தால் உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) நபியாகத் தகுந்தவரே என நாயகம் (ஸல்-அம்) அவர்களால் புகழப்பட்ட அல் பாறூகுல் அஃலம் சய்யிதினா உமர் ரழியல்லாஹுஅன்ஹு அவர்களையே, ஹஸரத்  அபூ பக்கர் சித்தீக் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் தமது தோழர்களான சஹாபாப் பெருமக்களிடம் கலந்தாலோசித்து இரண்டாம் கலீபாவாக நியமனம் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து கலீபா உமர் பாறூக் ரழியல்லாஹுஅன்ஹு அவர்களின் கரங்களில் முஹாஜிர்களும் அன்சாரிகளும் சத்தியப்பிரமாணம் (பைஅத்) செய்தார்கள்.

இரண்டாம் கலீபாவின் முதல் உரை...

ஹிஜ்ரி 13ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் 23ம் நாள் கிலாபத் என்னும் பொறுப்பினை கலீபா ஏற்றுக் கொண்டார்கள். மஸ்ஜிதுன் நபவியின் முன் நின்ற மக்களை நோக்கி முஃமீன்களின் தலைவர், "மக்களே நானும் உங்களில் ஒருவனே!, கலீபா அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹுஅன்ஹு அவர்களின் கட்டளையை புறக்கனிக்க என் மனம் நாடி இருந்தால் நான் ஒருக்காலும் கிலாபாத் என்னும் பொறுப்பை ஏற்றிருக்கமாட்டேன்." என்று சற்று தாழ்ந்த குரலில் கூறியவராக தம் கைகளை உயர்த்தி "யா அல்லாஹ்! நான் வன்மை உடையவனாக இருக்கிறேன், நீ என்னை  மென்மைப் படுத்துவாயாக, நான் பலகீனமாக இருக்கிறேன், நீ என்னை வலிமைப்படுத்துவாயாக, தயக்கத்தை விட்டும் என் இதயத்தை அகலப் படுத்துவாயாக" என்று பணிவுடனும் அடக்கத்துடனும் இறைஞ்சிய விதம் மக்களின் உள்ளங்களில் பற்றியிருந்த கலீபாவினுடைய அச்சத்தையும் திடுக்கத்தையும் தணியச் செய்தது. 

ஒரு சிறு மவுனத்திற்குப் பிறகு உறுதியான குரலில் "மக்களே இது எனக்கும் உங்களுக்கும் ஒரு கடுமையான சோதனைக் காலம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் முன் வரும் உங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நானே தீர்வு காணுவேன். என்னிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பினை நான் கை நழுவ விடமாட்டேன். நல்வழியை நாடுபவர்கள் என்னிடமிருந்து நன்மைகளையே காணப் பெறுவர். தவறான சிந்தனை படைத்தவர்களுக்கு - மற்றவர்களும் அறிந்து உணரும் வகையில், நான் சரியான பாடம் புகட்டுவேன். நீங்கள் என்னை உள்ளன்போடு ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். நானும் உங்களிடையே நெறி தவறாது ஊழியம் புரிவேன் என்று உறுதி கூறுகிறேன். சமுதாயத்தை நேர்வழியினில் செலுத்த வழிகாட்டி மீது கடமை ஆகிறது. கஃபாவின் இரட்சகன் அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்கிறேன் - நான் உங்களை நேரான வழியில் அழைத்துச் செல்வேன்."

வியர்வையால் தொப்பலாடிய 12 ஓட்டுக்கள் இடப்பட்ட ஓர் சட்டையை  அணிந்திருந்த கலீபா அவர்கள், தோலினால் ஆனா ஒரு சாட்டையை மட்டும் கையில் ஏந்தி உலா வந்த போது மனிதர்கள் மட்டுமல்ல , காற்றும், நெருப்பும், கடலும் , கரையும் அவர்களுக்கு பணிந்து நின்றன. எனவே வரலாற்று ஆசிரியர்கள் நீதி என்றால் மறுபெயர் கலீபா உமர் பாறூக் ரழியல்லாஹு  அன்ஹு என்று கூறுகின்றனர். 

நல்ல நிருவாகம்...

கலீபா அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி 22 லட்சத்து 51 ஆயிரத்து 30 சதுர மைல்கள் பரவியது. இஸ்லாத்திகு தொல்லை கொடுத்து வந்த பாரசீகர்களும், ரோமானியர்களும் அடக்கப்பட்டனர். சமுதாயப் பணிகளுக்கு தேவையான "பைத்துல் மால்" என்னும் பொதுக் கருவூல சொத்து நிறுவப்பட்டு ஏழை, எளியவர் நலனுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பணிக்கும் பயன்படுத்தப்பட்டது. நீதி மன்றங்களும் நீதிபதிகளும் அமைக்கப்பட்டு பிரச்சினைகள் அதன் மூலம் தீர்க்கப்பட்டது. இராணுவத் தலைமையிடம் அமைக்கப்பட்டு  நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. சாலைகளும் வாய்க்கால்களும் அமைக்கப்பட்டது. மதரசாக்கள் நிறுவப்பட்டு, சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்க்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. காவல் நிலையங்களும் சிறைச்சாலைகளும் அமைக்கப்பட்டு  தவறு செய்பவர்களுக்கு சரியான தண்டனையும் கொடுக்கப்பட்டது. "ஹிஜ்ரி" என்னும் இஸ்லாமிய ஆண்டு கணக்கிடும் முறை மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, எடைக்கற்கள் அறிமுகப்படுத்தப்பட்டு  எடை நிர்ணயம் மற்றும் அளவு சோதனை செய்யப்பட்டது. ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு நிலையங்கள் அமைத்தல் போன்ற சமுதாயப் பணிகள் மேட்கொள்ளப்பட்டு மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டது.

கராமத் அற்புதங்கள்...

ஆன்மீக ஞானத்தால் திளைத்திருந்த கலீபா அவர்கள் வறண்டு போன நைல் நதிக்கு கடிதம் எழுதி, அதை வற்றாத ஜீவ நதியாக மாற்றினார்கள். தம்முடைய போர்வையால் எரிமலையின் கக்கும் சீற்றத்தை கட்டுப்படுத்தினார்கள். தம்முடைய மறைவான ஞானத்தால், தம்மை காண வந்த குழுவினரிடத்தில் "உஷ்த்தர்" என்பவனை பார்த்து அலாஹ் இவனை அழிப்பானாக இவனின் தீமையை விட்டும், குழப்பத்தை விட்டும் இச்சமுதாயத்தை காப்பானாக என இறைஞ்சினார்கள். (20 ஆண்டுகளுக்குப் பிறகு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொலை செய்த துரோகிகளில் இவனும் ஒருவன் என பின்னாளில் தெரிய வந்தது) ஒரு முறை சிரியாவின் மீது போர் தொடுக்கப் படை திரட்டுகையில் ஒரு குழு வந்தது, அக்குழு வந்தவுடன் கலீபா அவர்கள் வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு, படையில் சேர்த்துக் கொள்ளவும் மறுத்துவிட்டார்கள். (20 ஆண்டுகளுக்குப் பிறகு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தாக்கிய அஸ்வத்  தபீபீ என்பவனும், 24 ஆண்டுகளுக்குப் பிறகு  ஹஸ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ அவர்களை கொலை செய்த  ரஹ்மான் இப்னு முல்ஜிம் முராதீ என்பவனும் அக்குழுவில் இருந்ததை மக்கள் பின்னாலிலேயே உணர்ந்தார்கள்) 

புனித மதீனா வீதியில் கலீபா நடந்து செல்கையில் "பரோஸ்" என்னும் பாரசீகன் கலீபாவிடம் முறையிட்டுத் திரும்பிச் செல்கையில், அவனை சிறிது நேரம் கவனித்த கலீபா அவர்கள், "அவன் பேச்சில் மிரட்டல் தெரிகிறது என ஹஸ்ரத்  அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தெரிவித்தார்கள். 

மறுநாள் காலை பஜ்ரு தொழுகையின் போது பரோஸ், கலீபா அவர்களை, பின் பக்கம் இருந்து 6 முறை குறுவாளால் குத்திவிட்டு, தப்பிக்க வழி இன்றி தன்னையும் மாய்த்துக் கொண்டான். நஸ்ரானியான ஜபினாவும் பாரசீகனான ஹர்மூசானும்  கொலைத்திட்டத்துக்கு உதவியவர்கள் என்பது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஹர்மூசான் என்பவன் இஸ்லாத்தை ஏற்பது போல் நடித்து நயவஞ்சகம்  செய்தவன்  (வஹ்ஹாபி) ஆவான்.

63 வயதை எட்டி இருந்த கலீபா அவர்கள், ஹிஜ்ரி 23ம் ஆண்டு துல் ஹஜ் மாதம் கடைசி நாள் (குறுவாளால் தாக்கப்பட்ட நாளிலிருந்து 3வது நாள்) வலியின் கொடுமையை தாங்கிக் கொண்டு என்றும் இறப்பில்லாத வாழ்க்கைக்கு, நுழைவிடமான இறப்பு என்ற போர்வையைக் கொண்டு உலக வாழ்க்கையிலிருந்து மறைந்து வாழ (ஷஹீதானார்கள்) ஆரம்பித்தார்கள். ஹஸ்ரத் அவர்களின் புனிதமிகு மஜார் ஷரீப் முதல் கலீபாவின் அருகிலேயே உள்ளது. 2ம் கலீபாவின் மொத்த ஆட்சிக் காலம் 10 வருடங்கள் 6 மாதங்கள் 4 நாட்கள் ஆகும். 
(((இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)))

அடிமை சாசனமும் ரவுளா சாட்சியும்...

ஒரு முறை இள வயதினராக இருந்த இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் 2ம் கலீபாவின் மகனான அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம், "உன் தந்தை என் பாட்டனாரின் அடிமைதானே"! என்று கூறியதை தம் தந்தையிடம் கூறி முறையிட்டுக் கொண்டார்கள் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். இதை விசாரிப்பதற்காக தம் மகனுடன் சென்ற இரண்டாம் கலீபா, இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கண்டதும் "தன் மகனிடம் கூறியதை திரும்பக் கூறுங்கள்" என வினவியதும், "நீங்கள் என் பாட்டனாரின் அடிமைதானே!" என பதிலளித்ததும், ஆனந்தக் கண்ணீருடன் இமாமை கட்டித்தழுவி, அவர்களை கையில் பிடித்துக் கொண்டு நேராக சல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் புனித ரவுளா முபாறக்கிற்கு சென்ற 2ம்  கலீபா அவர்கள் "யாரசூலல்லாஹ்! சல்லாஹு அலைஹிவசல்லம் என்னுடைய தாய் தந்தை உங்களுக்கு அர்ப்பணம்! இதோ உங்கள் பேரனார் - இமாம் ஹுசைன்  ரழியல்லாஹு அன்ஹு எங்களை, உங்களின் அடிமை என்று சாட்சியம் கூறுகிறார்கள்", எனக் கூறி அதை அப்படியே எழுதச்செய்து இமாமவர்களின் கை எழுத்தையும் இடச்செய்து - அதை பத்திரப்படுத்திக் கொண்டார்கள். கலீபா அவர்கள் மரணிக்கும் வேளையில், இந்த சாட்சிப் பத்திரத்தை தன் தலையின் அடியில் வைத்துவிடவும் கூறினார்கள். இதனால் உமரின் ( ரழியல்லாஹு அன்ஹு) முழுச் சந்ததியினருக்கும் மறுமைப்பலன் உண்டாகும் என கூறி அகமகிழ்ந்தார்கள்.  

(((ஸுப்ஹானல்லாஹ்)))
ஒரு மாவீரரின் வரலாறு என்னும் நூலிலிருந்து மக்கள் பயன் பெரும் வகையில் வெலியிடப்படுகிறது.
நூலாசிரியருக்கு நன்றிகள்.

Friday, September 21, 2012

முதல் கலீபாவின் முதல் உரை.

"ஓ, மக்களே! நான் உங்களின் தலைவனாக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், இருப்பினும் உங்களைக்காட்டிலும் நான் சிறந்தவனல்ல. (உத்தமர் அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படி சொல்வதன் மூலம் அவர்களது பணிவை உணர முடிகிறது) நான் எதாவது தவறுகள் செய்தால் என்னை திருத்துங்கள், கவனியுங்கள்! உண்மையானது நேர்மையையும்; பொய்யானது அநீதியையும் கொடுக்க வல்லது. உங்களில் எளியவர் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி அகற்றப்படும் வரை என்னிடம் வலியவராகவே இருப்பார்கள். உங்களில் வலியவர்கள் அநீதி இழைக்கையில் என்னிடம் எளியவராகவே இருப்பார்கள்!

கவனமாகக் கேளுங்கள், எவரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதிலிருந்து (நப்ஸ் என்னும் இச்சைப் போராட்டத்திலிருந்து) பின்னடைகிறாரோ அவரை அல்லாஹ் இழிவுபடுத்துவான். எந்தச் சமூகத்தில் தீமைகள் மலிகின்றனவோ அதன் மீது அல்லாஹ் சோதனைகளை இறக்குவான்.

நீங்கள் எனக்குக் கட்டுப்படுங்கள் அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  நான் கட்டுப்படும் வரை, நான் கட்டுப் படாவிட்டால் நீங்களும் எனக்கு கட்டுப்படுவதிலிருந்து விளக்கு அழிக்கப்படுவீர்கள்!"

புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சகாத் கொடுக்க மறுப்பு தெரவித்த போது, கலீபா அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒரு ஒற்றை நூலின் அளவு சகாத் கொடுக்க வேண்டியவன் அதை உரியவர்களிடம் கொடுத்து விடட்டும், அவர் அதை அப்படி கொடுக்க மறுத்தால், அவருக்கெதிராக நான் போர் தொடுப்பேன் எனக்கூறி மக்களை நல்வழிப் படுத்தினார்கள். 

நயவஞ்சகம் மிகுந்த யஹூதிகள், நஸ்ரானிகள் மக்களிடையே குழப்பம் விளைவித்த சமயத்திலும், முஸைலமா, அஸ்வத் அன்ஸி, துலைஹா போன்ற பொய்யர்கள் தங்களை நபி என்று கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய சமயத்திலும் கலீபா அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பாற்றினார்கள். கலீபா அவர்களின் முயற்சியால், இஸ்லாமியர்களுக்கு எதிரான தொல்லைகள் கொடுத்து வந்த ஈரானியர்கள் மற்றும் ரோமானியர்கள் அடக்கப்பட்டார்கள். 24,000 பேரைக் கொண்ட இஸ்லாமியப்படை 1,50,000 நபரைக் கொண்ட ரோமனியப்படையினை எதிர்த்து வெற்றிபெற்றது, கலீபா அவர்களின் ஆன்மீக ஞானம் தம் படைவீரர்களுக்கு பாய்ச்சப்பட்டு வீர உரமூட்டியதே காரணமே ஆகும்.

"தக்வா" என்னும் இறையச்சத்தை தம் உள்ளத்தில் சுமந்த கலீபா அவர்கள், சாதாரண ஆடைகளை உடுத்தியவர்களாய், எளிய உணவுகளை உண்டவர்களாய், பகல் வேளைகளில் நோன்பு நோற்பவர்களாய், இரவு முழுவதும் இறை வணக்கத்தில் கழித்தவர்களாய், மாளிகைகள் இல்லாமல் தன்னை சூழ படை வீரர்கள் இல்லாமல், தன்னந்தனியே மதீனத்துத் தெருவிலே வறியவர்களுக்கு உதவியவர்களாய் தம்முடைய காலத்தை நடத்தியவர்கள், தம்முடைய 63 வயதில் ஹிஜ்ரி 13ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் 21ம் நாள் (22 Aug 634) உலகின் அன்றாட வாழ்கையில் இருந்து மறைந்து மறுமை வாழ்வை வாழ ஆரம்பித்தார்கள். கலீபா அவர்களது ஆட்சிக்காலம் 2 ஆண்டுகளும் 3 மாதங்களும் ஆகும்.


கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் ரவுலாவில் இருந்து அழைப்பு... 


கலீபா அவர்களின் புனித உடல் அவர்களது இறுதி உரையின் படி, அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ அவர்களின் திருக்கரங்களால் நீராட்டப்பட்டு கபனிடப்பட்டது. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களினால் தொழுகை நடாத்தப்பட்டு, நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித ரவுலா ஷரீபின் வாசல் முன் வைத்துக் கொண்டு நின்று "அஸ்ஸலாமு அலைக்கும் யாரசூலல்லாஹ் ஹாதா அபூபக்கர்" என்று கூறிய போதே இடையிலிருந்து "உத்குலுல் ஹபீப இலல் ஹபீப்" நேசரை நேசரின் பக்கம் வரவிடுங்கள் என்ற புனித குரலின் அழைப்பினை அனைவரும் செவியுற்று புனித நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித நெஞ்சுக்கு நேராக கலீபா அவர்களின் புண்ணியத்திருமுகம் இருக்கும் படி நல் அடக்கம்செய்யப்பட்டது. 

கவி புனையும் திறன் பெற்றிருந்த கலீபா அவர்கள், ஒரு முறை விளையாடிக் கொண்டிருந்த இமாம் ஹுசைன்   ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தம் கைகளில் தூக்கிக் கொண்டு "என் தாய் தந்தை தங்களுக்கு அர்ப்பணம்! சாயலில் நீங்கள் ஈருலகின் நாயகர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் போலல்லவா இருக்கின்றீர்கள்? அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ வைப் போல் ஒத்ததில்லையே! என்ற பொருள்படக் கூறிய கவிதையை  அருகிலிருந்த ஹஜ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ அவர்களும் ரசித்து மகிழ்ந்தார்கள்.


Sunday, September 16, 2012

இறை சோதனை.

 முன் வாழ்ந்த  சமூகம் வரம்பு மீறி நடந்த போது அல்லாஹ் அவர்களை பல்வேறு வகையிலே சோதித்தான், பல்வேறு அழிவுகளை உண்டு பண்ணி அவர்களை அழித்தொழித்தான். அதற்கான எத்தனையோ சான்றுகள் இன்னும் உலகில் இருந்தே வருகிறது.

நபி  பெருமானார் (ஸல்-அம்) அவர்களை கேவலப்படுத்தும் நோக்கில் யஹூதிய வம்பர்கள் செய்த இழிச்செயலால் தூய எங்கள் கண்மணி நாயகம் ஒரு போதும் இழிவாக மாட்டார்கள்.

அவர்களுமோ அல்லாஹ்வால் அல்குர் ஆனிலே புகழ்ந்துரைக்கப்பட்ட நாதராக இருக்கிறார்கள்.

"முந்திய வினாடியை விட பிந்திய வினாடியை நாம் உங்களுக்கு உயர்வாக்கினோம்"

"நீங்கள் ரஹ்மத்தாகவே அன்றி அனுப்பப்படவில்லை."  

இவ்வாறெல்லாம் அல்லாஹ்வே அந்த முத்து நபியை புகழும் போது அவர்களை இழிவாகக நினைப்பவனை அவன் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டன். நிச்சயமாக நம் கண் முன் அவனது தண்டனை இறங்கும். 

அன்பர்களே அந்த யூதர்களின் உற்பத்திகளை நாம் வாங்குவதை கூட நிறுத்த வேண்டும் என அன்பாக வேண்டுகிறோம்.

இறை   சோதனைகள் பற்றி இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம்   சங்கைக்குரிய  ஷம்சுல் உலமா கலாநிதி மௌலவீ அல் ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ  அவர்கள் ஆற்றிய உரையை எமது இஸ்லாமிய இலக்கு வழங்குகின்றது.


Tuesday, September 11, 2012

மீலாத்... (தொடர்.)

சங்கைக்குரிய மர்ஹூம் மௌலவீ  MSM பாறூக் காதிரீ அவர்களினால் இலங்கையின் கல்முனை நகரில் ஆற்றப்பட்ட உரையின் ஒரு பகுதி எம்மால் வழங்கப்பட்டிருந்தது. 

அதன் தொடர் இதோ எமதன்பின் அபிமானிகளுக்கு வழங்கப்படகிறது... அல்ஹம்துலில்லாஹ்.

முந்திய  இரு  பகுதிகளுக்கும்  இங்கே Click  செய்யவும்.

Saturday, September 8, 2012

கலிமா தரும் விளக்கம்.

"நானும் எனக்கு முன் வந்த நபி மார்களும் கூறிய வார்த்தைகளில் மிக சிறந்த வார்த்தை லா இலாஹா இல்லால்லாஹு என்பதே ஆகும்" என்று நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

அத்தகைய சிறப்புமிக்க வார்த்தைதான் ஈமானின் அடித்தளமாக, ஆணிவேராக இருக்கிறது.

அத்திவாரம் பலமாக இருந்ததால்தான் கட்டிடம் எழுப்பலாம். எனவே எந்த அமல் செய்வதாயினும் கலிமாவை தெளிவாகவும் அதன் ஆழத்தை அறிந்தும் நாம் செய்யும் போது எமக்கு பூரண பிரயோசனம் கிடைக்கும்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே! யாருக்கு அல்லாஹ் ஹிதாயத்தை வழங்கி இருக்கிறானோ அவருக்கே அது கிடைக்கும். எனவே அதற்கான வழிகளை நாம் தேடிக் கொள்ளவேண்டும். 

எனவேதான் இப்போது நாம் வழங்கும் உரையினை தெளிவான மனதோடு, நான் என்ற செருப்பை கலைந்த நிலையிலே கேளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தையும், ஹிதாயத் பெற்ற நன் மக்களுக்கு தெளிவையும் வழங்குவான்.

எனவே அதனை மையமாகக் கொண்டு இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய மௌலவீ கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் கலிமாவின் விளக்கம் பற்றி ஆற்றப்பட்ட  உரையினை வழங்குகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.





உரையினை இலவசமாக  பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள (டவுன்லோட்) download என்பதை கிளிக் செய்யவும். 
 Download

Thursday, September 6, 2012

மீலாத்...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் நேயர்களே! எமது இஸ்லாமிய இலக்கு சுன்னத் வல் ஜமாஅத் கருத்துக்களை பிரசித்தி பெற்ற உலமாக்களின் உரைகள்  மூலம் பரப்பி வருகிறது. இன்று குழப்பம் நறைந்த காலம் என்பதால் மக்கள்  அவதாணமாக இருக்க வேண்டும். 

நான் அன்று ஒரு நாள் வாகனத்தில்  செல்லும் போது எமது மதிப்பிற்குரிய இலங்கை  நாட்டைச் சேர்ந்த  கலாநிதி மௌலவீ  அல் ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்களின் உரை ஒன்று கேட்டேன். அப்போது அதிலே அவர்கள் சூபிசம் பற்றி சூபிச வழியில் நடப்பது பற்றி பேசினார்கள். இறுதியிலே ஒரு விடயம் சொன்னார்கள். நாம் ஷரீஅத் உடைய வழியிலே சரியாக நடக்கும் போது நிச்சயமாக விலாயத் கிடைக்கும் என்று சொன்னார்கள். 

எனவே சுன்னத் வல் ஜமாஅத் வழி வாழ் நாம்  சூபிசம் எமது வாழ்வில் மிளிர வேண்டும் என்றால் ஷரீஅத்துடைய விடயங்களையும் பேணி நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு,

அன்புக்குரியவர்களே! எம்மை விட்டும் பிரிந்த சங்கைக்குரிய மௌலவீ  மர்ஹூம் MSM பாறூக் காதிரீ அவர்களால் இலங்கை நாட்டின் கல்முனை நகரில் மீலாத் விழா ஒன்றின் போது ஆற்றப்பட்ட ஒளி, ஒலி  வடிவிலான உரை கிடைத்திருக்கிறது அதிலே இரண்டு பகுதிகளை பதிவேற்றுகின்றேன். இன்ஷா அல்லாஹ் ஏனைய பகுதிகளை மிக விரைவில் பதிவேற்றுகின்றேன்

ஆசிரியர்- இஸ்லாமியஇலக்கு 


தொடரும்....

Wednesday, September 5, 2012

நபிமார்களில் சிலர். (தொடர்...)

அஸ்ஸலாமு அலைக்கும்.

நபி துல்கிப்லி (ذو الكفل) அலைஹிஸ்ஸலாம்.
வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மகன் என்று கூறுகின்றனர். அவர்களது இயற்பெயர் பஷர் ஆகும். அய்யூப் அல்லைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பின் அனுப்பியதால் அல்லாஹ் இவர்களை துல்கிப்ல் என்றழைத்தான். ஏன் எனில் இவர்கள் அவனுக்கு வழிப்படுவதிலே மிக உறுதியானவர்களாக இருந்தார்கள். இவர்களது அடக்கஸ்தலம் ஷாம் தேசத்திலே தமஸ்கஸ் என்ற பகுதியிலே இருக்கிறது. 

 நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்.
 இவர்கள் யூனுஸ் இப்னு மத்தா என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களை அல்லாஹ் சங்கையான நபியாக ஒரு கூட்டத்துக்கு அனுப்பி வைத்தான். இவர்களது உபதேசங்களை மக்கள் செவி ஏற்காத நேரம். வேதனையால் அல்லா இடம் முறை இட்ட வண்ணமாக கடலருகில் சென்று கொண்டிருந்த போது இவர்களை ஒரு மீனைக் கொண்டு அல்லாஹ் விழுங்க வைத்தான். மீனின் வயிற்றிலிருந்து கொண்டு அல்லாஹ் இவர்களுக்கு தன்னைக் காணச் செய்தான்.

 நபி இம்ரான் அலைஹிஸ்ஸலாம்.


 நபி மூஸா (கலீமுல்லாஹ்) அலைஹிஸ்ஸலாம்.
இவர்கள் பிர் அவ்ன் உடைய ஆட்சிக் காலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் வரலாறு நீண்டு நெடியதாகும். இவர்களது தடியை பாம்பாக இவர்கள் மாற்றி பல அற்புதங்களை காட்டி இருக்கிறார்கள். இவர்கள் பிற அவனுக்கு எதிராக கடுமையாக போராட்டம் செய்தார்கள்.

Comment.