Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Saturday, June 30, 2012

நபி மொழிகளும் போதனைகளும்.

கண்மணி நாயகம்  (ஸல்-அம் ) அவர்கள் கூறினார்கள்:

 மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன்.

 அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
 நூல்: முஸ்லிம்.

*****======*****
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என நபி (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி

*****======*****
 உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  அவர்கள்.
 நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.

*****======*****
இறைத்தூதர்(ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.


அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.
ஆதாரம்: புகாரி.


*****======*****

நான், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்-அம்) அவர்கள் , ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்’ என்று பதிலளித்தார்கள்.

 அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்கள். 
 ஆதாரம்: புகாரி.

*****======*****

“நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று கண்மணி நாயகம் (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள்.

மக்கள், ‘பாதையின் உரிமை என்ன? என்று கேட்டார்கள். நபி(ஸல்-அம்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள்.
ஆதாரம்: புகாரி.

*****======*****

நபி (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள் "ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: முஸ்லிம்


*****======*****
'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என்று நாங்கள் நபி (ஸல்-அம்) அவர்களை வினவினோம். அதற்கு 'ஆம்' என்றனர். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு நபி (ஸல்-அம்) அவர்கள் 'ஆம்' என்று பதிலளித்தனர். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் (ரலி) அவர்கள்.
ஆதாரம்: முஅத்தா.


*****======*****

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்-அம்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அவர்கள்.
ஆதாரம்: அபூதாவூத்.  

*****======*****

ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று ரசூலே கரீம் (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.

(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்-அம்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்.
ஆதாரம்: புஹாரி


Saturday, June 23, 2012

உருது இஸ்லாமிய கீதங்கள்.

பார்ஹான் அலீ  கதிரீயினால் பாடப்பட்ட உருது மொழியிலான புதிய இஸ்லாமிய கீதங்கள் கேட்டு மகிழுங்கள்.

Sunday, June 17, 2012

புனித மிஃராஜ் பயணமும் ஏகத்துவ விளக்கமும்.

 இஸ்லாத்தின் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் புனித மிஃராஜ் அனைத்து முஸ்லீம்களாலும் நினைவு கூறப்பட வேண்டிய ஒன்றாகும்.

நாம் அன்றாடம் தோலும் தொழுகை கூட இத்தினத்திலேயே  தனது காதலராகிய கண்மணி  நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹு தஆலா அன்பளிப்பாக கொடுத்தான்.

இந்நிகழ்வு சரித்திர முக்கியத்துவம் நிறைந்த நிகழ்வு மட்டுமல்லாது ஏகத்துவ இறைஞானக் கருத்தையும், சுன்னத்வல் ஜமாஅத் கருத்துகளையும் வலியுறுத்தி சான்று பகரும் நிகழ்வாகும். இதன் காரணமே இன்று இந்நாளை மக்கள் மனதுகளில் இருந்து வேரறுக்க சிலர் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.


எனவேதான் இப்புனித மிஃராஜ்  தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும், ஏகத்துவ, சுன்னத்வல் ஜமாஅத் கருத்துக்களை வலியுறுத்தும் முகமாகவும்  எமது இஸ்லாமிய இலக்கு இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா ஜவ்ஹருள் அமல் கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப்  மிஸ்பாஹீ  பஹ்ஜீ  அவர்களால் ஆற்றப்பட்ட "புனித மிஃராஜ்" என்னும் தலைப்பிலான கண்மணி நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களது அகமிய நிலைகளை, ஏகத்துவ விளக்கங்களை தெளிவுற எடுத்துக்கூறும் சிறப்பு உரையினை வழங்குகின்றது.


Saturday, June 16, 2012

ஹாஜா மேரே ஹாஜா!

வீடியோவினை பார்வை இட Read More என்பதை அழுத்தவும்.

Friday, June 15, 2012

இமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நினைவு -கத்தார்

இமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நினைவு தினம் நேற்று இரவு கத்தார் நாட்டில் சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.



வாராவாரம் நடைபெறும்  சலவாத் மஜ்லிஸ் நிகழ்வோடு சேர்த்து இந்நிகழ்வும் இடம்பெற்றது. நிகழ்விலே உலமாக்கள், ஹுப்புல் பத்ரிய்யீன் உறுப்பினர்கள், சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர்கள் என 25 ற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் சங்கைக்குரிய மௌலவி ஜாபிர் றப்பானீ அவர்களின் உரையும் துஅஹ் பிரார்த்தனையும் இடம்பெற்று சலவாத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

தகவல்: இப்னு முஹ்யித்தீன்.






அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்


     அண்ணல்  என் இல்லம் வந்தால் அவர்களை எப்படி வரவேற்பேன்.
      அஸ்ஸலாமு அலைக்கும் முகமன் கூறி ஆரத்தழுவ விரைவேனா
      சலவாத்தை என் நெஞ்சில் நிறைத்து சப்தத்துடனே  ஒலிப்பேனா
       ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 
       ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
;
     களிப்பின் கடலில் ஆளாய் மிளிர்ந்து கண்ணீர் வழியப் பார்ப்பேனா
      கண்களில் வெளிச்சம் அதிகமாகி காணமுடியாமல் அழுவேனா
     ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ;
      ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

       வாழ்த்திக் கவிதை பாட நினைத்தும் வார்த்தை வராமல் தவிப்பேனா
       வார்த்தைகள் கோடி வளமாய் எழுந்தும் நாவு எழும்பாமல் திகைப்பேனா 
      சிந்தனை இழந்து செயல்பட மறந்து சிலையாய் நானும் நிற்பேனா 
       உணர்ச்சிகள் மீறி உயிர் நிலைமாறி தரையில் வீழ்ந்து சரிவேனா
      ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
       ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

இஸ்லாமிய இலக்குக்காக - தாஹா மினா.
நன்றி.

Tuesday, June 12, 2012

எம்மோடு கரம் சேருங்கள்!

தீனுல் இஸ்லாத்தை மக்கள் மத்தியிலே தெளிவுற எடுத்துரைக்க எமது இஸ்லாமிய இலக்கு சிறிய முயற்சி எடுத்து வருகிறது எம்மோடிணைந்து அறிஞர்கள், உலமாக்கள்,வாசகர்கள் கரம்கோருங்கள். உங்களால் முடிந்த சுன்னத் வல்  ஜமாஅத், சூபிசம் சம்பந்தப்பட்ட ஆக்கங்களை, கவிதைகள் சிறுகதைகள் என்பவற்றை எமக்கனுப்பி வையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி:

 islamiyailakku@gmail.com

உங்களுக்கும் இது ஒரு களமாக  இருப்பதோடு யாரெல்லாம் அதைக் கொண்டு பயனடைகிறார்களோ அவர்களது நன்மைகளையும், அவர்கள் மூலம் அது  யார் யாரை சென்றடைகிறதோ அவர்களது நண்மைகளையும் நீங்கள் அடைந்து கொள்வீர்கள்.



Thursday, June 7, 2012

அல்லாஹ்வின் அகமியம்.

 அஸ்ஸலாமு அலைக்கும்.

மார்கத்தின் முதற்கடமை அல்லாஹ்வை அறிந்து  ஈமான் கொள்வதாகும். எனவே சர்வ வல்லமை உள்ள எமது நாயானது அகமியங்களை நாம் முழுமையாக அறிந்திருத்தல் அவசியம் ஆகும்.

அல்லாஹ்வுடைய அகமியங்களை தெளிவுற எடுத்துரைப்பவர்கள் உலகிலே மிக மிக அறிதாகவே இருப்பார்கள். அவடிப்படையில் எமக்கு கிடைக்கப் பெற்ற மாணிக்கம், இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்ஷுல் உலமா ஜவ்ஹருல் அமல் கலாநிதி மௌலவீ  அல்ஹாஜ்  அப்துர் றஊப் மிஸ்பாஹீ  பஹ்ஜீ அவர்கள் ஆற்றிய அல்லாஹ்வின் அகமியம் என்னும் உரையினை உங்களுக்காய் வழங்குவதில் எமத இணையம் மகிழ்வடைகிறது.

யா அல்லாஹ் இம் மாபெரும் (இறை) அறிஞருடைய வாழ்நாளை உடல் ஆரோக்கியத்துடன் நீளமாக்கி வைப்பாயாக! இன்னும் இவர்கள் நீண்ட காலம் உலகிலே வாழ்ந்து எமது மக்களுக்காகவும் தீனுக்காகவும் பணி செய்து எம்மை செம்மைப்படுத்தி சீர் படுத்த அருள் புரிவாயாக.  ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்.




Wednesday, June 6, 2012

ஹாஜா! - ஏழைகளை அலங்கரிக்கும் அஜ்மீர் ராஜா!

  வடஇந்தியா முழுவதும் அஜ்மீரிலே அமைந்துள்ள ஒரு மெய்ஞானியின் அடக்கஸ்த்தலம் ஆட்சி செய்து கொண்டிருப்பதை நேரில் கண்டேன் என்றார் வரலாற்று பேராசிரியர் எட்வின் அர்னால்ட்.




    அகன்று பரந்த நெற்றி! ஆத்மாவே நின்று ஆடிக் கொண்டிருப்பது போன்ற கண்கள்! ரோஜாவோ, தாமரையோ என்று ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு அழகு முகம்!  இளம் பிஞ்சு உறுதியான பிடரி, அதன் கீழ் தோள், மார்பு, கால்கள் அனைத்திலுமே வயதுக்கு மீறிய லாவகம்! அப்பப்பா அற்புதம்!

Sunday, June 3, 2012

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!!

மாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை

Saturday, June 2, 2012

கவாலி கீதம்.

அஜ்மீரின் அரசர் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அவர்கது பெயரில் அமைந்த இனிய இஸ்லாமிய கீதங்கள்.

Comment.