நோன்பின் உன்னத நோக்கம்?

Posted by islamiyailakku on 3:13 AM

எம்மை எதிர் நோக்கும் புனித ரமழான் அல்லாஹ் எமக்களித்த  மாபெரும் வரம் என்றே சொல்லவேண்டும்.

 இந்த ரமழானில் நாம் பாவமான செயல்கள் அனைத்தை விட்டும் தவிர்ந்து பேணுதலாக நடக்கிறோம். வீண் சண்டைகள் குழப்பங்களிலிருந்து தவிர்ந்து கொள்கிறோம். இந்த வாழ்க்கை முறையினைத்தான் இஸ்லாம் ஆயுள் முழுக்க கடைப்பிடித்தொழுக கட்டளை பிறப்பித்துள்ளது. 

இருந்தும் ரமழானில் மட்டும் இப்படி நடந்து விட்டு மீண்டும் பழையபடியே மாறி அநியாயம், அட்டூழியம், பொய், புறம், ஏமாற்று  என இறைவனுக்கு சற்றும் பொருத்தமில்லாத செயல்களிலே மீண்டுவிடுகிறோம்.அல்லாஹ்வுக்கு ரமழானில்  அளித்த வாக்குறுதிகளை மீறி விடுகின்றோம்.

நமக்கு நிச்சயமாக மரணம் சம்பவிக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை. இதை முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் என பாகுபாடு இன்றி ஏற்று இருக்கிறோம்.

كل نفس ذائقة الموت
 எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுகித்தே தீரும் (அல்குர்ஆன்)
 என்று அல்குர்ஆன்  கூறுகிறது.

அதன் பின்னர் கபுருடைய வாழ்க்கை இருக்கிறது அங்கே தனியே இருக்க வேண்டும். யாருடைய துணையும் இருக்காது. மறுமை நாளில் மீண்டும் எழுப்பப் படுவோம் அங்கே விசாரை இறை சந்நிதானத்தில் நடைபெறும் இருத்தித் தீர்ப்பு நாள் இருக்கிறது அதுவே நிரந்தர உலகம். அங்கே நரகம் சுவர்க்கம் தீர்மானிக்கப்படும். இப்படியான விடயங்கள் இருக்கிறது என்று அறிந்திருந்தும் நாம் ஏன் இன்னும் பாவங்களிலே மூழ்கிக் கிடக்கிறோம். ஒரு நாள் ஒரு பாவத்தை விட்டால் கூட எமது வாழ் நாளில் பாவமற்ற புனிதாக நாம் மாறிவிடலாம் இன்ஷா அல்லாஹ். எனவே இம்முறை ரமழானில் நாம் உறுதி மொழி எடுத்து அல்லாஹ் எம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று மனதில் கொண்டு. நாம் உலகில் படைக்கப்பட்ட நோக்கை அடைந்து வெற்றி பெற நாட்டம் எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் எமக்கு நிச்சயமாக உதவி செய்வான். 

இந்த புனித ரமலான் எமக்கு அருளப்பட்ட முக்கிய நோக்கம் எமது உள்ளக்  நீக்கவுதே ஆகும். அதன் பயிற்ச்சி முறையே ரமழானும்  நோன்பும் ஆகும்.

பெருமானார் (ஸல்-அம்) அவர்களது கீழ்வரும் பொன்மொழிக்கு அமைய.

عن النعمان بن بشير رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: » إن الحلال بين وإن الحرام بين، وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس، فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه، ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه. ألا وإن لكل ملك حمى، ألا وإن حمى الله محارمه، ألا أن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب« متفق عليه.

 அறிந்துகொள்ளுங்கள் உடலிலே ஒரு சதைத்துண்டு உண்டு அது சரியாகிவிட்டால் உடல் முழுக்க சரியாகிவிட்டது. அது கெட்டுவிட்டால் உடல்முழுக்க கெட்டுவிட்டது. அதுதான் உள்ளம். 

ஆவே கல்பின் கரைபோக்கும் புனித நோன்பு எமக்கு கிடைத்த செல்வமே அது தொடர்பாக இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா கலாநிதி ஜவ்ஹருல் அமல் மௌலவீ  அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் ஆற்றிய உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதினையம் மகிழ்வடைகிறது.
Categories: ,