நோன்பு மாதம்
Posted by islamiyailakku on 11:52 PM
அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது இஸ்லாமிய இலக்கின் வாசகர்கள் அனைவருக்கும் பூத்துக் குலுங்கும் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள்.
அன்பின் வாசகர்களே நோன்பு நமக்கு அருளப்பட்ட மிகப்பெரிய அல்லாஹ்வின் அருட்கொடையாகவும், அவனளவில் எம்மை சேர்த்து வைக்கும் பாலமாகவும் இலங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இம்மாதம் மிகவும் சங்கையாக எமது நடத்தை, பேச்சுக்கள், வியாபாரங்கள், என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற வேண்டும். இமாதம் எமக்களிக்கும் பயிற்ச்சியை எமது வாழ்வில் அடுத்துவரும் நாட்களிலும் நாம் எடுத்து நடக்கவேண்டும். அப்போதுதான் அல்லாஹு சுப்ஹானஹு தஆலாவை எம்மால் அடையமுடியும்.
இன்ஷா அல்லாஹ் எமது இஸ்லாமிய இலக்கில் "நோன்பின் சட்டங்கள்" தொடர்பாக இலங்கை நாட்டைச்சேர்ந்த சங்கைக்குரிய ஷம்சுல் உலமா, ஜவ்ஹருள் அமல், கலாநிதி, மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் ஆற்றப்பட்ட உரையினை இம்மாதம் முழுவதும் எம்மால் முடிந்தளவு வழங்குவது என முடி செய்துள்ளோம்.
அதனடிப்படையில் "நோன்பு மாதம்" எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.
அதனடிப்படையில் "நோன்பு மாதம்" எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.
Categories: Home, MP3 Bayan Misbaahee