ஒளி மயம்.
Posted by islamiyailakku on 12:57 AM
தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்.
قد جائكم من الله نور وكتاب مبين
(அல்லாஹ்விடம் இருந்து உங்களுக்கு ஓர் ஒளியும், தெளிவான வேதமும் வந்துவிட்டது)
(திருக் குர்ஆன் 05:15)
மேற்கண்ட திருமறை வசனத்தில் தெளிவான வேதம் என்று திருக்குர்ஆனும், ஒளி என்று நபிகள் கோமானும் கூறப்பட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒளியானவர்கள். என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவை இல்லை.
நபி (ஸல்) அவர்கள் ஒளி என்பதற்கும், அந்த ஒளியிலிருந்தே அனைத்து சிருஷ்டிகளும் படைக்கப்பட்டுள்ளன என்பதற்கும் பின்வரும் நபி மொழியை சூபிகளும், ஞானிகளும் கையாள்கின்றனர்.
انا من نورالله وكل شيئ من نوري
(நான் அல்லாஹ்வின் ஒளியின் நின்றுமுள்ளவன். சகல வஸ்துக்களும் எனது ஒளியில் நின்றுமுள்ளவை)
நபி (ஸல்) அவர்கள் ஒளியிலானவர்கள் என்பதற்கு மேற்கண்ட நபி மொழியை ஆதாரமாக நாம் கூறினால் இது எங்கே வருகிறது? இதற்கு "றாவி" அறிவிப்பாளர் யார்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி எப்படியேனும் நபி (ஸல்) அவர்களின் தரத்தைக் குறைத்துக் காட்டுவதற்கும், அவர்கள் ஒளியில்லை என்று பொது மக்களுக்கு சித்தரித்துக் காட்டுவதற்கும் துடியாய்த் துடிக்கின்றனர்.
நபிகள் கோமான் ஒளியில்லை என்று நிரூபித்து விட ஆதாரம் தேடி அலையும் மகான்கள் மேலே சொன்ன திரு வசனத்தில் அல்லாஹ் தெளிவாக கூறி இருப்பது பற்றி என்ன சொல்வார்களோ?
"நூர்" ஒளி என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்வதாயின் முதலில் அதன் வரைவிலக்கணத்தை விளங்கி அதன் மூலம் தெரிந்து கொள்ளவேண்டும்.
النور هو خير الظاهر في نفسه والمظهر لغيره
(ஒளி என்பது தானும் வெளியாகி மற்றவைகளையும் வெளிப்படுத்திக் காட்டக் கூடியது.)
என்று இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையில் நபிகள் கோமான் பற்றி விளங்கிக் கொள்ள விரும்புவோர் "விலாயத்" ஒலித்தனம் பெற்ற "இல்ஹாம்" ஞானோதயம் வழங்கப்பட்ட மகான்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.