கத்தாரில் நபிகளாரின் பிறந்ததினம்.

Posted by islamiyailakku on 9:30 PM
அஸ்ஸலாமு அலைக்கும். 

இந்நிகழ்வையும் தகவலையும் எமக்கனுப்பி வைத்த சகோதரர் முஹம்மது பிஹாம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். இது போன்று உங்கள் பிரதேச இஸ்லாமிய நிகழ்வுகளையும் எமக்கனுப்பி வையுங்கள். தாராளமாக எமது இணையம் அவற்றினைப் பதிவு செய்யக் காத்திருக்கின்றது. 
-Islamiya Ilakku-



உலகின் பல்வேறு  பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சங்கை மிகு மீலாதுன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்  நினைவு நாள்  நிகழ்வுகளின் வரிசையில் கட்டாரில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது நேசம் கொண்ட இளைஞர்களாலும், சகோதரர்களாலும் கடந்த 05-02-2012 அன்று அன்னார் பெயரிலான புனித சலவாத் மஜ்லிஸ் அதிகாலை 3:15 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு  சுபஹுக்கு சற்று நேரத்துக்கு முன் அந்த முத்து நபி இவ்வுலகில் அவதரித்த அந்த தருணத்தில் எழுந்து சங்கை உடன் வாழ்த்துமாலை பாடப்பட்டு அன்னாரை வரவேற்கப்பட்டது. 

அத்தோடு எமது சங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களின் 68வது  பிறந்த தினமும் அன்றாகவே இருந்ததால். அவர்களின் நீண்ட ஆயுள், சுகம் வேண்டி துஆப்பிரார்தனையும்  இடம்பெற்றது. அதன் பின் சுபஹுத்தொழுகை இடம்பெற்றது. அதனை அடுத்து நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு காலை உணவும் தபர்ரூக் விநியோகமும் நடைபெற்று  நிகழ்வுகள் இனிதே சலாவாத்துடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
புகைப்படங்களும்  காணொளியும் உள்ளே...






 












Categories: , ,