Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Wednesday, February 22, 2012

பாங்கின் சிறப்பு.

இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகைக்காக அழைப்பு விடும் முகமாக அதான் (பாங்கு) சொல்லப்படுகிறது. இப்படி ஒலிக்கப்படும் பாங்கிற்கும் அதை சொல்லுபவருக்கும் அதிகமான சிறப்புகள் இருப்பதாக அநேக ஹதீதுகள் வந்துள்ளது. 

அவடிப்படையில் இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அன்னவர்களால் பாங்கின் அகமியங்களை எடுத்துக் கூறும் முகமாக ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்வடைகிறோம்.

Monday, February 20, 2012

சூஃபி ஞான அகமியங்களின் திறவுகோல்



வீட்டின் வாயிலில் ஏகத்துவ கொள்கையும் (தவ்ஹீதும்) வீட்டுகுக்குள்ளே இணைவைப்பும் (ஷிர்க்கும்) இருப்பின் என்ன பயன்? நாவில் சுத்தமும் உள்ளத்தில் அசுத்தமும் இருந்தென்ன பயன்? வாய் இறைவனுக்கு நன்றி சொல்வதாயும் மனம் இறைவன் மீது குற்றம் காணுவதாயும் இருந்தால் என்ன பயன்?” இது யாருடைய வாசகம் என்பதை அறிந்து கொள்ளுமுன் …..

இந்த வாசகத்தை எப்போது நான் படிக்க நேர்ந்தது என்பதை எண்ணிப் பார்கின்றேன்.
நல்ல குடும்பம், இனிய மனைவி, அன்பு நண்பர்கள், வருமானத்தை அள்ளித் தரும் உயர்ந்த வேலை, கண்ணியமான வாழ்க்கை என இனிமைக்கு இனிமையாய் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த போது.....

நேர்வழி சுன்னத் வல் ஜமாஅத் வழி.

இந்திய நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ சலீம் சிறாஜீ அவர்களால் முக்கிய பல விடயங்கள் தொடர்பில் தெளிவு படுத்தப்பட்ட சிறப்புறு உரையினை எமது நேயர்களாகிய உங்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, February 19, 2012

கலீபாவின் மனைவி மரணம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
இலங்கையின் காத்தான் குடி பிரதேசத்தை சேர்ந்த காதிரியாஹ் திருச்சபையின் கலீபாவும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அரபுக் கலாபீடத்தின் பேராசிரியர்களில் ஒருவருமான சங்கைக்குரிய மௌலவீ MMA . மஜீத் றப்பானீ அவர்களின் மனைவி "சகோதரி ஜெனீசா" அவர்கள் இன்று காலை காலமானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். அன்னார் ஜனாச நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இலங்கை நேரப்படி இன்று இரவு 09:00 மணிக்கு நடைபெறும். 
                                                                                       
இறைவா! அவருடைய பாவங்களை பொறுத்தருள்வாயாக. அவருடைய மண்ணறையை பூஞ்சோலை ஆக்குவாயாக. நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத்தை  அவர்மீது கடமை ஆக்குவாயாக. ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தில் அவரை வாழவைப்பயாக. அவருடைய குடும்ப உறவுகளின் கவலைகளை ஆற்றுவாயாக. ஆமீன் ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்.

***أحسن الله عزاءكم ، وعظم أجركم ، وغفر لميتكم***                                                                  

-islamiyailakku-
தகவல்

பரீத் முஹம்மத்.

இலங்கை- காத்தான்குடி.

Saturday, February 11, 2012

பூமான் நபி மீது புனித சலவாத்.



 அஸ்ஸலாமு அலைக்கும்.

 இந்நிகழ்வை எமக்கனுப்பி வைத்த ஹுப்புல் பத்ரியீன் சங்கத்திற்கு எமது நன்றிகள். அல்ஹம்துலில்லாஹ். மேலும் இது போன்று பல்வேறு நிகழ்வுகளையும் நடாத்த எமது வாழ்த்துக்கள். உங்கள் நிகழ்வுகள் எமக்கனுப்பப்படும் வேளைகளில் அவற்றை வெளியிட நாம் காத்திருக்கிறோம்.

கடந்த 10/02/2012 வெள்ளி நள்ளிரவு 12:30 மணிக்கு கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித திருக்கொடி ஏற்றத்துடன் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புனித சலவாத் மஜ்லிஸ் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின் ஆரம்பத்தில் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் அகமியம் பற்றிய சங்கைக்குரிய மௌலவீ நுழாருல்லாஹ் றப்பானீ அவர்களின் உரையும் அதனை அடுத்து முஹம்மது பிஹாம் அவர்களின் நபி நாயகத்தின் புகழ் பாடவந்த இனி பாடலும் பாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பூமான் நபி மீது புனித சலவாத் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அளவில்  சொல்லப்பட்டது. நிகழ்வின் இறுதியில் பெரிய துஆஹ் ஓதப்பட்டது. இதிலே கடந்த 05/02/2012 அன்று 68 வது பிறந்த தினத்தை எட்டிய சங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களுக்காக விசேட துஅஹ் பிரார்தனை செய்யப்பட்டது.

அதன் பின் கலந்து கொண்ட 60  ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு உணவும் தபர்ரூக்கும் வழங்கப்பட்டு சல்வாத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்  

 புகைப்படங்கள் உள்ளே...

Thursday, February 9, 2012

ஷரீஅத் சட்டங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும். 

நாம் அன்றாடம் பல்வேறு நல் அமல்களை செய்து வந்தாலும். எம்மிடையே அவற்றை பேணுதலான முறையிலே செய்வதிலே பல்வேறு பிழைகள் ஏற்பட்டுவிடுகிறது. அவ்வாறு பிழை இன்றி பேணுதலாக செய்வதாயின் ஷரீஅத் உடைய அடிப்படை சட்டங்களை தெரிந்திருத்தல் வேண்டும். 

அந்த வகையிலே இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அன்னவர்களால்  தொழுகை சம்பந்தப்பட்ட ஷரீஅத் சட்டங்கள்  பற்றி ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, February 7, 2012

கத்தாரில் நபிகளாரின் பிறந்ததினம்.

அஸ்ஸலாமு அலைக்கும். 

இந்நிகழ்வையும் தகவலையும் எமக்கனுப்பி வைத்த சகோதரர் முஹம்மது பிஹாம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். இது போன்று உங்கள் பிரதேச இஸ்லாமிய நிகழ்வுகளையும் எமக்கனுப்பி வையுங்கள். தாராளமாக எமது இணையம் அவற்றினைப் பதிவு செய்யக் காத்திருக்கின்றது. 
-Islamiya Ilakku-



உலகின் பல்வேறு  பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சங்கை மிகு மீலாதுன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்  நினைவு நாள்  நிகழ்வுகளின் வரிசையில் கட்டாரில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது நேசம் கொண்ட இளைஞர்களாலும், சகோதரர்களாலும் கடந்த 05-02-2012 அன்று அன்னார் பெயரிலான புனித சலவாத் மஜ்லிஸ் அதிகாலை 3:15 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு  சுபஹுக்கு சற்று நேரத்துக்கு முன் அந்த முத்து நபி இவ்வுலகில் அவதரித்த அந்த தருணத்தில் எழுந்து சங்கை உடன் வாழ்த்துமாலை பாடப்பட்டு அன்னாரை வரவேற்கப்பட்டது. 

அத்தோடு எமது சங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களின் 68வது  பிறந்த தினமும் அன்றாகவே இருந்ததால். அவர்களின் நீண்ட ஆயுள், சுகம் வேண்டி துஆப்பிரார்தனையும்  இடம்பெற்றது. அதன் பின் சுபஹுத்தொழுகை இடம்பெற்றது. அதனை அடுத்து நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு காலை உணவும் தபர்ரூக் விநியோகமும் நடைபெற்று  நிகழ்வுகள் இனிதே சலாவாத்துடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
புகைப்படங்களும்  காணொளியும் உள்ளே...

Saturday, February 4, 2012

ஜும்அஹ் பேருரை.



 அஸ்ஸலாமு அலைக்கும். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் சங்கைக்குரிய அஷ் ஷஹீத் மர்ஹூம் மௌலவி MSM பாறூக் காதிரீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட மனிதனின் நிலைகள், மரணம், பள்ளிவாயலில் நல்லடியார்கள் மற்றும் நபிமார்கள் கப்ருகள் இருப்பது பற்றியும் அதாரபூர்வமாக தெளிவுபடுத்தும்  குத்பாப் பேருரையினை வெள்ளிநாள் சிறப்பு உபதேசமாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
 

ஒளி மயம்.

தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்.
-கடந்த 26  டிசம்பர்  2011  அன்று வெளியான ஆக்கத்தொடர்-
قد جائكم من الله نور وكتاب مبين
(அல்லாஹ்விடம் இருந்து உங்களுக்கு ஓர் ஒளியும், தெளிவான வேதமும் வந்துவிட்டது)
(திருக் குர்ஆன் 05:15)
மேற்கண்ட திருமறை வசனத்தில் தெளிவான வேதம் என்று திருக்குர்ஆனும், ஒளி என்று நபிகள் கோமானும் கூறப்பட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒளியானவர்கள். என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவை இல்லை. 

நபி (ஸல்) அவர்கள் ஒளி என்பதற்கும், அந்த ஒளியிலிருந்தே அனைத்து சிருஷ்டிகளும் படைக்கப்பட்டுள்ளன என்பதற்கும் பின்வரும் நபி மொழியை சூபிகளும், ஞானிகளும் கையாள்கின்றனர். 

Thursday, February 2, 2012

இணையத்தளத்திற்காக புதிய இலட்சினை.



 அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் இஸ்லாமிய இலக்கு இணைய அபிமானிகள் அனைவருக்கும் ஓர் இனிய நற்செய்தி. எமது சுன்னத் வல் ஜமாஅத் இளைஞர் கூட்டமைப்பு எமது இணையத்தளத்திற்காக புதிய இலட்சினை ஒன்றினை இன்று முதல் அறிமுகம் செய்கிறது. இதோ உங்கள் பார்வைக்கு. 

இது தொடர்பான உங்கள் கருத்துக்களை எமக்கு எமது ஈமெயில் முகவரியான islamiyailakku@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். 

-islamiyailakku- 

Comment.