நட்சிந்தனை.

Posted by islamiyailakku on 10:00 AM
ஹஸ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அசாவை (ஊன்றுகோலை) ஊன்றிய  நிலையில் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாயலை நிருமாணிக்க ஜின்களை வேலை வாங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கு மரணம் சம்பவித்துவிட்டது. அல்லாஹ்
 அந்தப் பள்ளிவாயலின்  வேலைகள் பூரணம் அடையும்வரை அவாறே அவர்களை ஊன்ருகோலிலேயே நிறுத்தி வைத்திருந்தான். அவர்களது ஊன்றுகோலை கரையான் அரித்துக் கொண்டிருந்தது. பள்ளிவாயல் வேலையும் பூர்த்தியாயிற்று கரையான் அரித்த ஊன்றுகோல் நோடிந்துபோக ஹஸ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கீழே சாய்ந்தார்கள். அவர்களது உடல் மரணத்திற்கு அப்பாலும் எதுவித மாற்றமும் அடையாமல் அவ்வாறே இருந்ததை அல்குர்ஆன் சாட்சி பகர்கிறது (34:14 )
ஆகவே நபிமார்களின் உடலை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கி இருக்கிறான் அவர்கள் அளியவோ மாறுபடவோ மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது
Categories: ,