Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Tuesday, August 23, 2011

நோன்பின் சட்டங்கள்.

இலங்கை நாட்டின் ஆன்மீக மணி மகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி அவர்களால் ஆற்றப்பட்ட உரை.

Sunday, August 21, 2011

மரணம்!



அன்பின் சகோதரர்களே!
அல்லாஹ்அவனது அருள் மறையிலே கூறுகிறான்  எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்(அல் குர்ஆன் 3:185) என்று. அந்த அடிப்படையில் மரணம் என்பது எமக்கு வராமல் விடப்போவதோ அல்லது எம்மை விட்டும் தூரமான ஒன்றோ கிடையாது ஆதி நபி ஆதம் அலை அவர்கள் முதல் இன்று வரை எந்த ஓர் உயிரையும் மரணம் விட்டுவைத்தாக சரித்திரம் இல்லை.

Friday, August 19, 2011

கத்தாரில் பத்ர் சஹாபாக்களின் நினைவு நாள்!


தகவல்: நபீஸ் முஹ்யித்தீன் (படம் இணைக்கப்பட்டுள்ளது )
     இன்று நள்ளிரவு 12 மணிக்கு  பத்ரு சஹாபாக்களின் நினைவுதினம் ஹுப்புல்  பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் கத்தாரில் மிக சிறப்பாக நடைபெற்றது இதில் பத்ரு சஹாபாக்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும் மௌலவீ நஸீம் அஹ்மத் றப்பானீயின்  மார்க்க விளக்க உரை பயான் நிகழ்வும் சகோதரர் பாடகர் பிஹாம் அவர்களின் பத்ர் சஹாபாக்களின் புகழேந்தி வந்த பாடலும் இடம்பெற்றது.


அதனை அடுத்து இலங்கை நாட்டில் காத்தான்குடியில்  நேற்று இறை அடி சேர்ந்த சங்கைக்குரிய மஜீத் றப்பானீ அவர்களின் தகப்பனாருக்கும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்க கணக்காய்வாளர்  சகோதரர் ஜாபிர் அவர்களின் தாய்க்கும் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது. அதனை அடுத்து சஹர்  உணவும் வழங்கப்பட்டு பின்னர் சுபஹுத்தொழுகை ஜமாஅத்துடன் நடைபெற்று இனிதே சலவாதுடன் நிகழ்வுகள் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.  

Wednesday, August 17, 2011

பத்ர் சஹாபாக்கள்!

உரை நிகழ்த்துகிறார்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ  அப்துல் காதிர் மள்ஹரீ அவர்கள்.


Tuesday, August 16, 2011

ஆலமுல் அர்வாஹ்

இலங்கை நாட்டின் ஆன்மீக மணி மகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி அவர்களால் ஆற்றப்பட்ட உரை.

Sunday, August 14, 2011

1400 வருட பாரம்பரிய மார்க்கம் இஸ்லாம்!

உரை இந்திய நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ  சலீம் சிறாஜி அவர்கள்.

பாங்கு வந்த வரலாறு.

இலங்கை நாட்டின் ஆன்மீக மணி மகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி அவர்களால் ஆற்றப்பட்ட உரை.

Saturday, August 13, 2011

நட்சிந்தனை.

ஹஸ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அசாவை (ஊன்றுகோலை) ஊன்றிய  நிலையில் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாயலை நிருமாணிக்க ஜின்களை வேலை வாங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கு மரணம் சம்பவித்துவிட்டது. அல்லாஹ்
 அந்தப் பள்ளிவாயலின்  வேலைகள் பூரணம் அடையும்வரை அவாறே அவர்களை ஊன்ருகோலிலேயே நிறுத்தி வைத்திருந்தான். அவர்களது ஊன்றுகோலை கரையான் அரித்துக் கொண்டிருந்தது. பள்ளிவாயல் வேலையும் பூர்த்தியாயிற்று கரையான் அரித்த ஊன்றுகோல் நோடிந்துபோக ஹஸ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கீழே சாய்ந்தார்கள். அவர்களது உடல் மரணத்திற்கு அப்பாலும் எதுவித மாற்றமும் அடையாமல் அவ்வாறே இருந்ததை அல்குர்ஆன் சாட்சி பகர்கிறது (34:14 )
ஆகவே நபிமார்களின் உடலை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கி இருக்கிறான் அவர்கள் அளியவோ மாறுபடவோ மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது

Tuesday, August 9, 2011

சகாதும் சதகாவும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).


அன்பிற்குரியவர்களே பூத்துக் குலுங்கும் அருள் மிகு ரமளானில் இன்று நாங்கள் இருக்கிறோம். அல்லாஹ் எங்களில் சிலருக்கு அவனது செலவத்தை தந்திருக்கிறான் அதை கொடுக்குமாறும் ஏவுகிறான் இது எங்களுக்குஉரிமையானதல்ல என்பதை நாங்கள் உணர்ந்தால் அல்லாஹ்வுடைய கட்டளையை நாங்கள் ஏற்று நடக்கமுடியும் ஏனெனில் செல்வம்  என்பது  அல்லாஹ் ஒருவனுக்கு  மாத்திரம்  உரிமையானதே எங்களுக்கு இரவலாக அமானிதமாகவே அதை அளித்துள்ளான். ஆகவே அவன் அதை மீள கேட்கும்போது கொடுத்தே ஆகவேண்டும்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்கு உயர் சஹாபாக்கள் போல் யார் இருக்கிறார்கள். யுத்தத்துக்காக பெருமானார் பொருள் கேட்டபோது உயர் அபூபக்கர் சித்தீக் ரழி அவர்கள் தன் வீட்டில் எந்த பொருளும் மீதமில்லாமல்  அள்ளிக் கொணர்ந்து குவித்தார்கள். அல்லாஹ் அதனால்தான் அவர்களை ஈருலகிலும் மேலோங்க வைத்தான்.
அன்பின் சகோதரர்களே இன்று சிலர் ஹராமான வழிகளில் அதிகம் அதிகம் சம்பாதிக்கிறார்கள் இது அல்லாஹ்வுக்கு  பொருத்தமற்ற முறை என்பதால்அதில்  செய்யும்  தர்மத்தை  அல்லாஹ் ஏற்கவும்  மாட்டன். இதனால்தான் நபிமொழி இவ்வாறு வந்துள்ளது  
அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி).
ஆகவே எமது உழைப்பை ஹலாலான வழிகளில் நாம் தேய்க்கொல்வது அவசியமாகும்.
இன்று நாங்கள் பார்க்கிறோம் செல்வந்தர்கள் ஏழைகளை மொத்தமாக எடுத்து சிறிய சிறிய தொகையை அவர்களுக்கு சகாத் என்ற பேரில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த முறை மூலம் ஒருவர் கூட பூரண திருப்தியையோ அல்லது அவர்களின் பிரதான தேவை ஒன்றையோ பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அல்லாடுகிறார்கள் ஆகவே சகாத் கொடுக்க முன்வரும் நீங்கள் ஒன்றோ அல்லது உங்கள் வசதிக்கு ஏற்றால் போலோ சிலரை தெரிவு செய்து அவர்களின் தேவைகளில் ஒன்றை பூர்த்தி செய்ய உதவுங்கள் அத்ச்ன் மூலம் அல்லாஹ் உங்கள் செல்வத்தை பண்மடன்காக்குவான் இன்ஷா அல்லாஹ்.
நீங்கள் ஒரு மடங்கு கொடுத்தால் அல்லாஹ் பத்து மடங்காக திருப்பி தருவதாய் வாகளித்துல்லான். ஆகவே நேயர்களே அல்லாஹ் எமக்களித்த கொடையில் இருந்து எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு நாம் கொடுத்து உதவவேண்டும் என்ற உறுதியை இந்த ராமலாநிளிருந்தே எடுத்துக் கொள்வோமாக அத்தோடு எமது வாழ்விலும் அதை நடைமுறைப் படுத்துவோமாக. அல்லாஹ் எங்களை ஈருலகிலும் ஈடேற்றுவான். ஆமீன்.

                                                                                                                                                           


Saturday, August 6, 2011

கத்தாரில் இப்தார் நிகழ்வு.

 நேற்று 05/08/2011 வெள்ளி மாலை கத்தாரில் முந்தஸஹ் திறந்த வெளியரங்கில் ரமழானை சிறப்பிக்கும் வகையில் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தால் இப்தார் நிகழ்வு அதன் அங்கத்தவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்புற நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ் அது தொடர்பான சில புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது.


Comment.