ஷாகுல் ஹமீத் நாயகத்தை கத்தார் மண் அழைக்கிறது.

Posted by islamiyailakku on 12:35 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.
கருணைக்கடல் கஞ்சே ஷவா ஷாஹே மீரான் ஷாகுல் ஹமீத் அப்துல் காதிருன் நாஹூரிய்யில் மாணிக்கப்பூரி கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்காளது புனித மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வு கடந்த 24-04-2013 புதன்கிழமை இரவு பத்துமணிக்கு கத்தார் நாட்டில் புனித திருக்கொடி ஏற்றத்துடன் ஆன்மீக மனம் வீச உலமாக்கள், கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் நிருவாகம்,சங்க உறுப்பினர்களால் ஒன்று சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்விலே...
1ம் நாள் மாகான் சாகுல் ஹமீத் பாதுஷா அன்னவர்கள் மீது புனித மௌலித் பாராயணமும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

2ம் நாள் நிகழ்விலே ஷாகுல் ஹமீத் ஆண்டகை மீதான மௌலித் பாராயண நிகழ்வும் வழமையாக கத்தாரில் வாரா வாரம் நடைபெறும் பூமான் நபியின் அருள் மணக்கும் புனித சலவாத் மஜ்லிசும் அதனைத்தொடர்ந்து எம்மை விட்டும் மறைந்த அனைத்து முஸ்லீம்கள் மீதும் யாசீன் பாராயணம் செய்யப்பட்டு பின்னர்  மௌலவீ நஸீம் ரப்பானீ அவர்களின் உரையும் இடம்பெற்றது. 


3ம் நாள் நிகழ்விலே மகான் அவர்களின் மௌலித் பாராயணமும் மௌலவீ பஸ்மில் ரப்பானீ அவர்களுடைய ஆன்மீக உரையும் இடம்பெற்று பெரிய துஆ ஓதப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு தபர்ரூக் விநியோகமும் இரவு ஆகாரமும் வழங்கப்பட்டு புனித சலவாத்துடன் நிகழ்வு வெகு விமர்சையாக நிறைவு பெற்றது.  

அது தொடர்பில் எமக்கு கிடைக்கபெற்ற சில புகைப்படங்களை இத்தோடு இணைத்துள்ளோம்...

நன்றி.
ஹுப்புல் பத்ரிய்யீன்
தோஹா -கத்தார் .

































Categories: