மாபெரும் தவஞானி.
Posted by islamiyailakku on 12:24 AM
இம்மாதம் கண்ணியம் பொருந்திய சிறப்பு பெற்ற ஓர் மாதமாக விளங்குகிறது. ஏன் தெரியுமா இம்மாதம் வலீகற்கரசர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவகளின் நினைவு தினம் கொண்டாப்படுகிறதே அதன் காரணமாகத்தான்.
இம்மாதத்தில் அன்னாரை நினைத்து மனம் உருகி புகழ் பாடி அவர்களை கொண்டாடிய உள்ளங்களுக்கு அன்னாரின் அருள் நிரந்தரமாகிவிட்டது.

உண்மை சத்தியம் வாய்மை என வாழ்ந்து தீனை உயிர்பித்த முஹ்யித்தீன் அல்லவா அவர்கள். இவர்களை போற்றும் நாம் அன்னாரது அகமியங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லதே.
ஏன் தெரியுமா ஷெய்த்தான்கள் தூண்டில்களையும், வலைகளையும் வீசிக்கொண்டு காத்துக்கிடக்கின்றன. அந்த மகானை எம்மால் அசைக்க முடியாது அவர்களது முரீதுகளையாவது தாம் தத்தெடுத்துக் கொள்வோம் என்று சூழ்ச்சி எண்ணம் கொண்டவையாக. எனவே அந்த சதி வலைகளில் வீழ்ந்துவிடாமல் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அதன் காரணமாகவே இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் ஜவ்ஹருள் அமல், சாமஸ்ரீ, கலாநிதி, சங்கைக்குரிய மௌலானா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் குதுபு நாயகத்தின் அகமியங்களை தெளிவு படுத்தும் ஓர் ஆன்மீக உரையினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
Categories: MP3 Bayan Misbaahee