Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Wednesday, February 27, 2013

கண்ணியமோங்கும் முஹ்யித்தீன் மௌலித் ஷரீப் -கத்தார்.

ரபீஉனில் அவ்வல்   மாதம் வந்தால் உண்மையான முஸ்லீம்களின் மனங்கள் நபிமார்களின் அரசர் எம்பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் அவர்களை நினைத்து சந்தோசப்பட்டு புகழ்பாடுவது போலவே, ரபீஉனில் ஆகிர் மாதம் வந்தால் வலீமார்களின் அரசர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தசல்லாஹு சிர்ராகுல் அஸீஸ் அன்னவர்களை நினைத்து மனம் மகிழ்ந்து வாழ்த்துப்பாடி வரவேற்று மகிழ்கின்றோம். 


அவ்வடிப்படையில் கத்தாரில் கடந்த 24-02-2013 அன்று நடைபெற்ற குதுபுல் அக்தாப் நாயகத்தின் புனித மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வில் எமக்கு கிடைக்கப்பெற்ற சில புகைப்படங்கள் ...










Sunday, February 24, 2013

மாபெரும் தவஞானி.

இம்மாதம் கண்ணியம் பொருந்திய சிறப்பு பெற்ற ஓர் மாதமாக விளங்குகிறது. ஏன் தெரியுமா இம்மாதம் வலீகற்கரசர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவகளின் நினைவு தினம் கொண்டாப்படுகிறதே அதன் காரணமாகத்தான். 

இம்மாதத்தில் அன்னாரை நினைத்து மனம் உருகி புகழ் பாடி அவர்களை கொண்டாடிய உள்ளங்களுக்கு அன்னாரின் அருள் நிரந்தரமாகிவிட்டது. 

எல்லா தரீகாக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாய் திகழும் எம் மாபெரும் தவ ஞானியாரை எண்ணாத புகழாத உள்ளங்கள் மாசுபட்டுவிட்டன என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது. 

உண்மை சத்தியம் வாய்மை என வாழ்ந்து தீனை உயிர்பித்த முஹ்யித்தீன் அல்லவா அவர்கள். இவர்களை போற்றும் நாம் அன்னாரது அகமியங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லதே. 

ஏன் தெரியுமா ஷெய்த்தான்கள் தூண்டில்களையும், வலைகளையும் வீசிக்கொண்டு காத்துக்கிடக்கின்றன. அந்த மகானை எம்மால் அசைக்க முடியாது அவர்களது முரீதுகளையாவது தாம் தத்தெடுத்துக் கொள்வோம் என்று சூழ்ச்சி எண்ணம் கொண்டவையாக. எனவே அந்த சதி வலைகளில் வீழ்ந்துவிடாமல் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

அதன் காரணமாகவே இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் ஜவ்ஹருள் அமல், சாமஸ்ரீ, கலாநிதி, சங்கைக்குரிய மௌலானா மௌலவீ அல்ஹாஜ்  அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் குதுபு நாயகத்தின் அகமியங்களை தெளிவு படுத்தும் ஓர் ஆன்மீக உரையினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
                                   

Friday, February 22, 2013

யாகுத்பா ஓர் தெளிவு.


அகிலத்தின் பேரொளியான எம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் திருப் பேரர் இம்மாதத்தின் கதா நாயகர் குதுபுர் ரப்பானீ குதுபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தசல்லாஹு  சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பெயரில் மாதிஹுர் ரசூல் சதகதுல்லாஹ் அப்பா கத்தசல்லாஹு  சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் இயற்றிய யாகுத்பா பற்றி இலங்கை நாட்டில் வாழ்ந்து தீனுல் இஸ்லாத்தை உயிர்ப்பிக்க போராடி முனாபிகீன்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மர்ஹூம் மௌலவீ  MSM பாறூக் காதிரி அவர்களால் ஆற்றப்பட்ட ஓர் அழகிய உரையின் ஒலி வடிவம் இதோ....


Click Here To

Tuesday, February 19, 2013

குதுபு நாயகத்தின் குத்பிய்யஹ்.


இலங்கையின் காத்தான்குடி நகரில் உள்ள பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற குதுபுல் அக்தாப் கௌதுல் அஃலம் செய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்களது குத்பிய்யஹ் கந்தூரி ஒன்றின் போது, இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷெய்குனா ஷம்சுல் உலமா ஜவ்ஹருள் அமல் கலாநிதி மௌலவீ அல் ஹாஜ் ஏ ஜே அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இதோ...

Saturday, February 9, 2013

ஏகத்துவம் கூறும் அல்குர்ஆன் பகுதி 02 .

அல்லாஹுத்தஆலா அவனது அருள் மரையிலே வஹ்ததுள் வுஜூத் உள்ளமை ஒன்று என்று பறை சாற்றும் 25 ஆதாரங்களை மக்கள் நல்லறிவு பெரும் வகையில் அழகிய முறையில்   இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா ஜவ்ஹருள் அமல் சாமஸ்ரீ கலானிதி அஷ் ஷெய்க்  மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள்  கூறுகின்ற உரையின் இரண்டாம் பகுதி இதோ...

முதல் பகுதியும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது எமது அபிமானிகளின் இலகுக்காக.




Friday, February 8, 2013

ஏகத்துவம் கூறும் அல்குர்ஆன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
 
அல்லாஹுத்தஆலா அவனது அருள் மரையிலே வஹ்ததுள் வுஜூத் உள்ளமை ஒன்று என்று பறை சாற்றும் 25 ஆதாரங்களை மக்கள் நல்லறிவு பெரும் வகையில் அழகிய முறையில் தனதுரையில் எடுத்துக் கூறுகிறார்கள்,  இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா ஜவ்ஹருள் அமல் சாமஸ்ரீ கலானிதி அஷ் ஷெய்க்  மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள்.

உரையின் ஒரு பகுதியை இங்கே வழங்குகின்றோம். இன்ஷா அல்லாஹ் இதன் தொடர் மிக விரைவில்.....
 

Tuesday, February 5, 2013

எம் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.


இன்று தனது 69வது பிறந்த தினத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம், ஷெய்குனா ஷம்சுல் உலமா ஜவ்ஹருல் அமல் சாமஸ்ரீ  ஈழத்தின் சொற்கொண்டல் கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் ஏ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (அஷ் ஷெய்குல் காதிரீ வன்னக்ஷபந்தீ) அன்னவர்களுக்கு எமது இதயம் நிறைந்த பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும். 

யா அல்லாஹ் எம் ஆன்மீக குருநாதருடைய வாழ்நாளை சிறந்த ஆரோக்கியத்துடனும் சௌபாக்கியங்களுடனும் நீளமாக்கி, உன்னுடைய படைப்புகளின் தீங்கை விட்டும் அவர்களை பாதுகாப்பாயாக.

ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

Comment.