புனித ஹஜ்ஜும் அறபா நோன்பும்.
Posted by islamiyailakku on 1:58 AM
புனித துல்ஹஜ் மாதம் இது. அருள் நிறைந்த இம்மாதம் சகல நாடுகளில் இருந்தும் முஸ்லீம்கள் நிற, மொழி வேறுபாடின்றி அல்லாஹு தஆலாவை அடையும் ஒரே நோக்கிலே அந்தப் புனித இடத்தை நாடிப் பயணிக்கின்றனர்.
அல்லாஹ் எமக்கு விதியாக்கிய ஐம் பெரும் கடமைகளில் ஹஜ் இறுதியானதாகும். இதற்கு உடல் வலிமை, பொருளாதாரம் என்ற இரு காரணிகளும் இன்றி அமையாததாகும்.
அல்லாஹ் இந்நிபந்தனைகள் இருப்பின் முஸ்லீம்கள் மீது கடமையாக ஹஜ் செய்வதை ஆக்கினான் நபி இப்ராஹீம் (அலை அவர்களுக்கும், அன்னை ஹாஜரா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும், அவர்களது அருமை மகனார் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அல்லாஹுத் தஆலா பல்வேறு சோதனைகளை வழங்கினான். அவன் அளித்த கட்டளைகளுக்கு மாறுபடாமல் மனோ இச்சைக்கு மாறு செய்து நடந்த காரணத்தால் அல்லாஹ் அவர்களது வாழ்வில் நடந்த அந்த நிகழ்வுகளை, தனது ஹபீப் ஆகிய கண்மணி நாயகம் ஸல்-அம் அவர்களது உம்மத்துக்களாகிய எம்மீது கடமை ஆக்கி இருக்கிறான்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் பலவீனனாக இருக்கிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “யுத்தமில்லாத ஜிஹாதுக்கு செல்வீராக! அதுதான் ஹஜ்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நூல் : தப்ரானி
அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நூல் : தப்ரானி
அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்;” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்; : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
“உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர்அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா
“உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர்அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா
மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ
இப்படி அதிகமான ஹதீதுகள் ஹஜ் உடைய மகிமை பற்றிய ஹதீதுகள் இடம்பெற்றிருக்கின்றன.
இன்று சிலர் சொல்கிறார்கள் முன்னோர்கள் செய்த நல் அமல்களை செய்யக்கூடாது, அதெல்லாம் வழிகேடு என்று அறியாமையால் பிதற்றுகிறார்கள். ஆனால் முன்னோர்களில் ஒருவரான நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்அவர்களது வாழ்க்கையினையே அல்லாஹ் எமக்கு கடமை ஆக்கி இருக்கிறான். முன்னோர்கள் செய்த அவர்கள் ஏவிய நல் அமல்களை செய்யமுடியும் என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் என்ன வேண்டும்.
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வாழ்க்கை, தியாகம் அல்லாஹ்வுக்காக இருந்தது அதனால் அல்லாஹ் அவர்களது வாழ்கையை எமக்கு கடமை ஆக்கினான். இதை ஆதாரமாக எடுத்து நாம் நல்லோர்கள் செய்த நல்ல விடயங்களை சுன்னத்தான அமல்களாக செய்து கொள்ள முடியும் என்பது தெளிவாகிறதல்லவா.
இன்னும் அறபா உடைய நாளில் சுன்னத்தான நோன்பு நோற்பது மிகச்சிறந்த நல் அமலாக இருக்கிறது. இந்த நோன்பை ஹஜ்ஜுக்கு செல்லாத முஸ்லீம்கள் நோற்றுக்கொள்ளவேண்டும். ஹாஜிகளுக்கு இது அவசியமில்லை. இந்த நாள் துல்ஹாஜ் மாதம் 9ம் நாள் பெருநாளுக்கு முந்திய தினம் ஆகும்.
இந்த நோன்புக்கு அல்லாஹ் அளித்துள்ள பேறு அளப்பெரியது. இப்படியான ஒரு நாளை இந்த ஆண்டு நாம் தவறவிட்டு விடக்கூடாது. இன்று சில நாடுகளில் முஸ்லீம்கள் இந்த நோன்பை நோற்றிருக்கிரார்கள். சில நாடுகளில் பிறை தென்பட்டதன் படி நாளை நோற்க இருக்கிறார்கள்.
عن أبي قتادة أن النبي صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال
يكفر السنة الماضية والباقية
அபூ கதாதா ரழி அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகிறது நபி ஸல்-அம் அவர்களிடம் அறபா நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதுவுமோ கடந்த ஆண்டுக்குரிய பாவங்களையும், வரக்கூடிய ஆண்டுக்குரிய பாவங்களையும் அழித்துவிடும் என சொன்னார் அருமை நாயகம் ஸல்-அம் அவர்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
ஆக அன்புக்குரியவர்களே எதிர்வரும் ஆண்டிலே நாம் இருப்போமா என்பது உத்தரவாதம் இல்லை. எனவே கிடைத்துள்ள இந்த ஆண்டிலேயே நாம் இந்த புனிதமான நோன்பை நோற்றுக் கொள்வோமாக.
புனித அறபா உடைய நாளிலே "லா இலாஹா இல்லால்லாஹ்", "அல்ஹம்துலில்லாஹ்","அல்லாஹு அக்பர்"போன்ற தஸ்பீகுகளையும், பெருமானார் ஸல்-அம் அவர்கள் மீதிலான சலவாத்தினையும் அதிகம் அதிகம் ஓதி எமது தேவைகளை அல்லாஹ்விடம் பயபக்தியோடு கேட்போமாக.
நன்றி.
Categories: Article