பெருமானாரின் திருப்புகழ்...
Posted by islamiyailakku on 11:42 AM
இன்று உலகிலுள்ள மனிதர்களில் எத்தனையோ பேர் தம்மை சூழ்ந்துள்ள பல்வேறு பட்டவர்களை, தங்களது பல்வேறு உலகத்தேவைகளுக்காகவும், தமது சுய நலன்களுக்காகவும் புகழ்கிறார்கள். ஆனால் பேதலித்த புத்தி உடையோர், பெருமானரின் விடயங்களிலும், வலீமார்களின் விடயங்களிலும் தரக்குறைவு செய்கிறார்கள். பெருமானாரைப் புகழ்ந்ததால் அதை மறுக்கிறார்கள்.
இன்று நாம் வாழும் வாழ்க்கை தொட்டு, ஈமான் இஸ்லாம் என அனைத்தும் தோன்றக் காரணம் அவர்கள்தான் என்பதை உணராத காரணத்தால் தங்களது அறியாமையினை அள்ளி இறைக்கிறார்கள். மக்களோ குழப்பத்தில், ஷெய்தானுடைய சதி வலையில் வீழ்கிறார்கள்.
ஒன்றை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அல்லாஹ் அவனது முன்வந்த வேதங்களில் முன்னறிவிப்பு செய்த, புனித அல்குர்ஆனில் அவனே புகழ்ந்தும், மலக்குகளாகிய தனதமரர்களும் தானும் சலவாத்தும், சலாமும் அந்த முத்து நபிமீது உரைப்பதாய் சொல்வதுடன், ஈமான் கொண்ட முஃமீன்களான தனதடியார்களை விளித்து சலவாத்தும், சலாமும் சொல்லுமாரு பணித்திருக்கும் வேளையில்; அதை மருத்துதுரைப்பவன் எத்தகையவன் என்பது உங்களுக்கே தெளிவாகி இருக்கும்.
நாளை மறுமையில்; நான் எனது ஹபீப் (காதலனை) புகழ்ந்து நீங்களும் புகழுங்கள் என்று கூறி இருக்க நீ ஏன் அதை மறுத்து புகழக்கூடாது என கூறினாய், பிராச்சாரித்தாய்? எனது பேச்சை நிராகரிக்க நீ யார்? எனக்கேட்டால் இவர்களால் என்ன சொல்ல முடியும். மறுமை நாளின் அதிபதியல்லவா எம் றப்பு நாயன்...
எனவே, எமது இஸ்லாமிய சகோதரி ஒருவர் தானே கவி எழுதி தானே பாடி, Qaseeda.tk என்னும் இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்ட பெருமானார் புகழ் மாலையை அந்த சகோதரியின் அனுமதியுடன் எமது இணையம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம்.
நன்றி
Qaseeda.tk & ஷபிய்யத் காதிரிய்யா.
Categories: Video Song