பெயர் மாற்றம் அற்புதம்....
Posted by islamiyailakku on 8:13 AM
புஸ்தானுல் ஆஷிகீன்.
இஸ்லாமிய இலக்கே ! உலகின் ஒளி விளக்கே!!
இஸ்லாத்திற்கு நீசெய்த தொண்டு, உலகிற்கு நீகொடுத்த ஒளி
மாணவர்கள் ஆசிரியர்களாக, ஆலிம்கலாக மாறுவதுபோலும்,
பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டு பல் கலைக்கழகங்கலாவதுபோலும்
மந்திரிமார் முதல்வராகவும்,முதல்வர் ஜனாதிபதியாவதுபோலும்
நீ ஆகிவிட்டாய்.
நீ எமது செல்லக்குழந்தை! ஆச்சரியமுள்ள அதிசயக்குழந்தை!
அதனால்தான் உன் பெயரை “அற்புதம்” என மாற்றினோம்.
அதிலும் ஒரு தாற்பரியம்.
"அற்புதம்” என்பதின் அறபுப்பதம் “கறாமத்” .
“இறையாற்றல்” எவரிலிருந்து வெயிப்புறப்படுமோ
அவரயே “வலீ” என்போம்.
அவரின் ஆற்றலை “கறாமத்” ‘அற்புதம்” எனப்பகர்வோம்.
எனவே நீ அதிசயம் புரியும் அறிவுக்குழந்தையாக உள்ளதால்
உனக்கு ஆற்றல் பெயரை அற்புதமெனச்சூட்டினோம்.
அனுதினம் உன்னிலிருந்து அகிலம் பெறும் பயன்கள் அதிகமதிகம்.
அற்புதமான அற்புதமே!
உன்னிலே அண்ணல் நபி நாயகம் (ஸல்)இருக்கின்றார்கள்.
அவர் தம் தோழர்காளும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீனும்,
காமிலான சைகுனாவும் பாதுகாக்க இருக்கின்றார்கள்.
அறிவும், அமுதும், அற்புதமும் எந்நாளும் அள்ளிவழங்கிக்கொண்டே
இரு! மேற்சொன்னவர்கள் மறுமையிலும்
உன்னை நுகர்ந்தோரை அழைப்பார்கள்!!
Categories: Poyetry