Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Friday, October 26, 2012

ஈத் முபாறக்.

எமதன்பான  வாசகர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த ஈதுல்  அழ்ஹா ஹஜ்ஜுப்  பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
 
ஈத் முபாறக்.

Thursday, October 25, 2012

புனித ஹஜ்ஜும் அறபா நோன்பும்.

புனித துல்ஹஜ் மாதம்  இது. அருள் நிறைந்த இம்மாதம் சகல நாடுகளில் இருந்தும் முஸ்லீம்கள் நிற, மொழி வேறுபாடின்றி அல்லாஹு தஆலாவை அடையும் ஒரே நோக்கிலே அந்தப் புனித இடத்தை நாடிப் பயணிக்கின்றனர்.

அல்லாஹ் எமக்கு விதியாக்கிய ஐம் பெரும் கடமைகளில் ஹஜ் இறுதியானதாகும். இதற்கு உடல் வலிமை, பொருளாதாரம் என்ற இரு காரணிகளும் இன்றி அமையாததாகும்.

அல்லாஹ் இந்நிபந்தனைகள் இருப்பின் முஸ்லீம்கள் மீது கடமையாக ஹஜ் செய்வதை ஆக்கினான் நபி இப்ராஹீம் (அலை அவர்களுக்கும், அன்னை ஹாஜரா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும், அவர்களது அருமை மகனார் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அல்லாஹுத் தஆலா பல்வேறு சோதனைகளை வழங்கினான். அவன் அளித்த கட்டளைகளுக்கு மாறுபடாமல் மனோ இச்சைக்கு மாறு செய்து நடந்த காரணத்தால் அல்லாஹ் அவர்களது வாழ்வில் நடந்த அந்த நிகழ்வுகளை, தனது ஹபீப் ஆகிய கண்மணி நாயகம் ஸல்-அம் அவர்களது உம்மத்துக்களாகிய எம்மீது கடமை ஆக்கி இருக்கிறான்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் பலவீனனாக இருக்கிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “யுத்தமில்லாத ஜிஹாதுக்கு செல்வீராக! அதுதான் ஹஜ்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நூல் : தப்ரானி

அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்;” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்; : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

“உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர்அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ
 
இப்படி அதிகமான ஹதீதுகள் ஹஜ் உடைய மகிமை பற்றிய ஹதீதுகள் இடம்பெற்றிருக்கின்றன.
 
இன்று சிலர் சொல்கிறார்கள் முன்னோர்கள் செய்த நல் அமல்களை செய்யக்கூடாது, அதெல்லாம் வழிகேடு என்று அறியாமையால் பிதற்றுகிறார்கள். ஆனால் முன்னோர்களில் ஒருவரான நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்அவர்களது வாழ்க்கையினையே அல்லாஹ் எமக்கு கடமை ஆக்கி இருக்கிறான். முன்னோர்கள் செய்த அவர்கள் ஏவிய நல் அமல்களை செய்யமுடியும் என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் என்ன வேண்டும்.
 
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வாழ்க்கை, தியாகம் அல்லாஹ்வுக்காக இருந்தது அதனால் அல்லாஹ் அவர்களது வாழ்கையை எமக்கு கடமை ஆக்கினான். இதை ஆதாரமாக எடுத்து நாம் நல்லோர்கள் செய்த நல்ல விடயங்களை சுன்னத்தான அமல்களாக செய்து கொள்ள முடியும் என்பது தெளிவாகிறதல்லவா.
 
இன்னும் அறபா உடைய நாளில் சுன்னத்தான நோன்பு நோற்பது மிகச்சிறந்த நல் அமலாக இருக்கிறது. இந்த நோன்பை ஹஜ்ஜுக்கு செல்லாத முஸ்லீம்கள் நோற்றுக்கொள்ளவேண்டும். ஹாஜிகளுக்கு இது அவசியமில்லை. இந்த நாள் துல்ஹாஜ் மாதம் 9ம் நாள் பெருநாளுக்கு முந்திய தினம் ஆகும்.
 
இந்த நோன்புக்கு அல்லாஹ் அளித்துள்ள பேறு அளப்பெரியது. இப்படியான ஒரு நாளை இந்த ஆண்டு நாம் தவறவிட்டு விடக்கூடாது. இன்று சில நாடுகளில் முஸ்லீம்கள் இந்த நோன்பை நோற்றிருக்கிரார்கள். சில நாடுகளில் பிறை தென்பட்டதன் படி நாளை நோற்க இருக்கிறார்கள்.
 
عن أبي قتادة أن النبي صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال
يكفر السنة الماضية والباقية
 
அபூ கதாதா ரழி அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகிறது நபி ஸல்-அம் அவர்களிடம் அறபா நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதுவுமோ கடந்த ஆண்டுக்குரிய பாவங்களையும், வரக்கூடிய ஆண்டுக்குரிய பாவங்களையும் அழித்துவிடும் என சொன்னார் அருமை நாயகம் ஸல்-அம் அவர்கள்.
 ஸஹீஹ் முஸ்லிம். 
 
ஆக அன்புக்குரியவர்களே எதிர்வரும் ஆண்டிலே நாம்  இருப்போமா என்பது உத்தரவாதம் இல்லை. எனவே கிடைத்துள்ள இந்த ஆண்டிலேயே நாம் இந்த புனிதமான நோன்பை நோற்றுக் கொள்வோமாக.
 
புனித அறபா உடைய நாளிலே "லா இலாஹா இல்லால்லாஹ்", "அல்ஹம்துலில்லாஹ்","அல்லாஹு அக்பர்"போன்ற தஸ்பீகுகளையும், பெருமானார் ஸல்-அம் அவர்கள் மீதிலான சலவாத்தினையும் அதிகம் அதிகம் ஓதி எமது தேவைகளை அல்லாஹ்விடம் பயபக்தியோடு கேட்போமாக. 
 
நன்றி.
 
 

Saturday, October 20, 2012

பிரபஞ்ச ரகசியம். - உரை

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாம் என்பதை இரண்டு நிலைகளில் நோக்கலாம். 
 
 1. மேலோட்டம்.
 2. உள்ளோட்டம்.

இதில் மேலோட்டம் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும். உள்ளோட்டம் என்பது அனைவருடைய பகுத்தறிவுக்கும் சரி எனப்படாது. அல்லாஹ் சர்வலோக ரட்சகன்; அவனுடைய பேச்சுதான் இறைவேதம். 

சாதாரண மனிதர்கள் பேசும் போதே அதனை வெளியோட்டமாக பார்த்தல் சாதரணமாக தெரிந்தாலும், ஆழமாக சிந்தனை செய்து பார்த்தல் அதில் எதார்த்தமான தாற்ப்பெரியம் மிக்க கருத்துக்கள் நிறைந்திருப்பது விளங்கும். சாதாரண மனிதர்களுடைய பேச்சிலேயே இப்படி இருப்பின். அனைத்தையும் படைத்த அந்த நாயனின் பேச்சு எத்தனை வலுப்பமானதாய் இருக்கும், அவனது ஹபீபாகிய, உலகம் தோன்ற காரணமான அந்த முத்து நபியின் பேச்சில் எத்துனை ஆழம் பொதிந்திருக்கும்.

உதாரணமாக அறபா வெளியில்  நபி பெருமானார் உரையாற்றும் போது
  اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتى ورضيت لكم الإسلام دينا  ((அல்யவ்ம அக்மல்து லகும் தீனக்கும்....)) என்ற திருமறை வசனம் அருளப்பட்ட போது ஒரு சில சகபாக்களைத்தவிர ஏனையோர் சிரித்து சந்தோசப்பட்டனர். ஒரு சில சகாபாப் பெருமக்கள் அந்த வசனத்தின் உள்ளோட்டத்தை, ஆழத்தை உணர்ந்தார்கள் அதன் விளைவாக அழத்தொடங்கி விட்டார்கள். ஏன் என்று வினவப்பட்ட போது நபி பெருமானார் (ஸல்-அம்)) எம்மை விட்டுப் பிரியப்போகிரர்கள் என்று சொன்னார்கள். 

இந்த வசனத்தை மோலோட்டமாக பார்த்தால் இப்படி ஒரு ஆழமான தத்துவம் அதில் புதைந்திருப்பதை உணர முடிகிறதா? அன்பு சகோதர, சகோதரிகளே! இது போன்றுதான் இறைவனின் புனித வசனங்களும் பெருமானாரின் அருள் மொழிகளும் இருக்கின்றன. 

அந்த அடிப்படையில் ஆழமான திருமறையின் அருள் வசனங்களுக்கும், பெருமானாரின் அருள் மொழிகளுக்கும் ஆழமான கருத்துக்களை ஆராய்ந்து அறிஞர்களால் ஆற்றப்பட்ம் உரைகளின் வரிசையில், சங்கைக்குரிய ஷம்சுல் உலமா, ஜவ்ஹருள் அமல், கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் ஆற்றப்பட்ட "பிரபஞ்ச ரகசியம்" என்னும் ஆன்மீக உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, October 11, 2012

அழகிய அரபெழுத்தணி... (புகைப்படங்கள்)

அரபு மொழி என்பது ஏனைய மொழிகளை விட சிறப்பான ஒரு மொழி என்றே சொல்லலாம். ஏன் எனில் அகிலத்தின் அருட்கொடை, அல்லாஹ்வின் காதலர் அண்ணல் நபி (ஸல்-அம்) அவர்கள் ஒரு அரபியராகவே பிறந்தார்கள். அல்லாஹ்வின் புனித வேதம், அவன் பாதுகாப்பதாக வாக்களித்த  புனித அல்குர்ஆன் கூட அரபு மொழியிலேயே இறக்கி அருளப்பட்டது. 

அரபு மொழியைப் பொறுத்தவரை ஆழம் அதிகம் எனலாம். ஏன் என்றால் சிறிய வார்த்தைப் பிரயோகம் மேலோட்டமான ஒரு அர்த்தத்தை தருவதுடன் ஆழமான பல்வேறு அர்த்தங்களை அது பொதிந்திருக்கும். இதற்கு அல்குரானின் வசனங்களும், நபி பெருமானாரின் பொன்மொழிகளும் சான்று பகரும். 

அரபு மொழியைப் பொறுத்தவரை எழுத்தணிக்கலை என்ற மற்றுமொரு சிறப்பம்சமும் இருக்கிறது. அந்த அடிப்படையில் நாம் கண்ட சில எழுத்தணிக் கலைகளின் அழகிய புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.

 அஸ்மாஉல் ஹுஸ்னா, அல்லாஹ்.
அல்லாஹ்.


அல்லாஹு அக்பர்.

லாஇலாஹ இல்லா அந்த சுப்ஹானக இன்னீ குந்து மீனழ்ழால்லிமீன் 


 முஹம்மத் (ஸல்-அம்)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

செய்யிதுனா ஹபீபுல்லாஹ் (ஸல்-அம்)

லாஇலாஹ இல்லல்லாஹ்.
 லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.



முஹம்மத் (ஸல்-அம்)

முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.

ரமழான் கரீம்.

சூரத்துல் பாதிஹா.

அல்லாஹ்.

அல்லாஹ்.

சலவாத்.

 முஹம்மத் (ஸல்-அம்)

தாலஅல்பத்ரு அலைனா.

Wednesday, October 10, 2012

பெருமானாரின் திருப்புகழ்...

இன்று உலகிலுள்ள மனிதர்களில் எத்தனையோ பேர் தம்மை சூழ்ந்துள்ள பல்வேறு பட்டவர்களை, தங்களது பல்வேறு உலகத்தேவைகளுக்காகவும், தமது சுய நலன்களுக்காகவும் புகழ்கிறார்கள். ஆனால் பேதலித்த புத்தி உடையோர், பெருமானரின் விடயங்களிலும், வலீமார்களின் விடயங்களிலும் தரக்குறைவு செய்கிறார்கள். பெருமானாரைப் புகழ்ந்ததால் அதை மறுக்கிறார்கள்.

 இன்று நாம் வாழும் வாழ்க்கை தொட்டு, ஈமான் இஸ்லாம் என அனைத்தும் தோன்றக் காரணம் அவர்கள்தான் என்பதை உணராத காரணத்தால் தங்களது அறியாமையினை அள்ளி இறைக்கிறார்கள். மக்களோ குழப்பத்தில், ஷெய்தானுடைய சதி வலையில் வீழ்கிறார்கள். 

ஒன்றை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அல்லாஹ் அவனது முன்வந்த வேதங்களில் முன்னறிவிப்பு செய்த, புனித அல்குர்ஆனில் அவனே புகழ்ந்தும், மலக்குகளாகிய தனதமரர்களும் தானும்  சலவாத்தும், சலாமும் அந்த முத்து நபிமீது உரைப்பதாய் சொல்வதுடன், ஈமான் கொண்ட முஃமீன்களான தனதடியார்களை விளித்து சலவாத்தும், சலாமும் சொல்லுமாரு பணித்திருக்கும் வேளையில்; அதை மருத்துதுரைப்பவன் எத்தகையவன் என்பது உங்களுக்கே தெளிவாகி இருக்கும். 

நாளை மறுமையில்; நான் எனது ஹபீப் (காதலனை) புகழ்ந்து நீங்களும் புகழுங்கள் என்று கூறி இருக்க நீ ஏன் அதை மறுத்து புகழக்கூடாது என கூறினாய், பிராச்சாரித்தாய்? எனது பேச்சை நிராகரிக்க நீ யார்? எனக்கேட்டால் இவர்களால் என்ன சொல்ல முடியும். மறுமை நாளின் அதிபதியல்லவா எம் றப்பு நாயன்...

எனவே, எமது இஸ்லாமிய சகோதரி ஒருவர் தானே கவி எழுதி தானே பாடி, Qaseeda.tk என்னும் இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்ட பெருமானார் புகழ் மாலையை அந்த சகோதரியின் அனுமதியுடன் எமது இணையம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம்.


நன்றி
Qaseeda.tk & ஷபிய்யத் காதிரிய்யா.

Tuesday, October 9, 2012

பெயர் மாற்றம் அற்புதம்....

புஸ்தானுல் ஆஷிகீன்.
இஸ்லாமிய இலக்கே ! உலகின் ஒளி விளக்கே!!                                 
இஸ்லாத்திற்கு நீசெய்த தொண்டு, உலகிற்கு நீகொடுத்த ஒளி  
இரண்டும் உன்பெயரை மாற்றியுள்ளது.!
மாணவர்கள் ஆசிரியர்களாக, ஆலிம்கலாக மாறுவதுபோலும்,  
பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டு பல் கலைக்கழகங்கலாவதுபோலும்  
மந்திரிமார் முதல்வராகவும்,முதல்வர் ஜனாதிபதியாவதுபோலும்  
நீ ஆகிவிட்டாய்.

நீ எமது செல்லக்குழந்தை! ஆச்சரியமுள்ள அதிசயக்குழந்தை
அதனால்தான் உன் பெயரை அற்புதம் என மாற்றினோம்.
அதிலும் ஒரு தாற்பரியம்.

"அற்புதம் என்பதின் அறபுப்பதம் கறாமத்.                                 
இறையாற்றல்எவரிலிருந்து வெயிப்புறப்படுமோ
அவரயேவலீ என்போம்.
அவரின் ஆற்றலை   கறாமத்  ‘அற்புதம்  எனப்பகர்வோம்.
எனவே நீ அதிசயம் புரியும் அறிவுக்குழந்தையாக உள்ளதால் 
 உனக்கு ஆற்றல் பெயரை அற்புதமெனச்சூட்டினோம்.

அனுதினம் உன்னிலிருந்து அகிலம் பெறும் பயன்கள் அதிகமதிகம்.
அற்புதமான அற்புதமே!
உன்னிலே அண்ணல் நபி நாயகம் (ஸல்)இருக்கின்றார்கள்.
அவர் தம் தோழர்காளும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீனும்,                           
காமிலான சைகுனாவும் பாதுகாக்க இருக்கின்றார்கள்.                                    
அறிவும், அமுதும், அற்புதமும் எந்நாளும் அள்ளிவழங்கிக்கொண்டே  
இரு! மேற்சொன்னவர்கள் மறுமையிலும்  
உன்னை நுகர்ந்தோரை அழைப்பார்கள்!!

Wednesday, October 3, 2012

பெயர் மாற்றம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் வாசகர்களே! இது வரை இஸ்லாமிய இலக்கு என்னும் பெயரில் இயங்கி வந்த எமது இணையத்தளம் இனிமேல் அற்புதம் என்ற பெயரில் செயற்படும். எமது அபிமானிகள் "அற்புதம்" என்னும் பெயரில் மாத்திரமே இனி பார்வை இட முடியும். 

Atputham 

Comment.