லைலதுல் கத்ர்.

Posted by islamiyailakku on 7:48 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் நேயர்களே புனிதமிக்க லைலதுல் கதர் இரவு எம் சமூகத்துக்கு அல்லாஹ் அளித்த மாபெரும் ரஹ்மத்தாகும். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு என்றால் எத்தனை பாக்கியம் அன்பர்களே! ஒரு நாள் இரவு நல் அமல்களில் ஈடுபடுவதால் ஆயிரம் மாதங்கள் அமல் செய்த பேற்றை அடைந்து கொள்கின்றோமே அதற்காகவே காலம் முழுக்க நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கின்றோம்.

இந்த இரவில் அளவுக்கதிகமான ரஹ்மத்தை அல்லாஹ் இந்த பூமியில் இறக்குகின்றான், மலக்குகள் இறங்குகின்றார்கள், முஃமீன்களுக்கு சலாம் உரைக்கின்றார்கள், நல் அமல்கள் செய்வோருக்காக பிழை பொறுக்கத் தேடுகின்றார்கள். இந்த மகத்தான இரவையும் தவரவிடக்கூடியவர்கள் எம்மிலும் எத்தனையோர் பேர் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இந்த இரவில் இரண்டு ரக் அத்துக்கள் தொழுது ஒவ்வொரு ரக் அத்திலும் சூரத்துல் பாத்திஹா ஒரு தடவையும், சூரத்துல் இக்லாஸ் (குல்ஹுவல்லாஹு) ஏழு தடவையும் யார் ஓதி சலாம் கொடுத்து பின்னர் எழுபது தடவைகள் استغفر الله واتوب اليه (அஸ்தஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி) என்று ஒதுகிராரோ அவர் அந்த இடத்தை விட்டு எழும்பும் முன்னர் அவரது பாவங்களும் அவரது பெற்றோரது பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும். இன்னும் அவருக்காக சுவனத்திலே மரங்களை நட்டவும், மாளிகைகளை கட்டவும், ஆறுகளை உருவாக்கவும் அல்லாஹ் மலக்குகளை சுவனபதிகளுக்கு அனுப்புகிறான். இன்னும் அவற்றை காட்டப்படாமல்  அவர் மரணிக்கமாட்டார். (தப்சீர் ஹனபீ)

அவ்வடிப்படையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ கலாநிதி ஜவ்ஹருல் அமல் அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் லைலதுல் கத்ர் பற்றி ஆற்றப்பட்ட உரையினை வழங்குகின்றோம்.

Categories: