Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Wednesday, August 22, 2012

ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் பத்ர் சஹாபாக்கள் நினைவு நாள்.

கடந்த 09ம் திகதி கத்தார் நாட்டில் வாழும் சுன்னத் வல் ஜமாஅத் வழி வாழ், சஹாபாக்கள் மீது பேரன்பு கொண்ட சகோதரர்களால் பத்ர் சஹாபாக்களையும்,  பத்ருப்போரையும் நினைவு கூர்ந்து மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. அல் ஹம்துலில்லாஹ்.

இந்த சகோதரர்கள் பத்ர் சஹாபாக்களின் பெயரை வைத்து ஒரு சங்கத்தை உருவாக்கி அச்சங்கத்தின் மூலம் பள்ளிவாயல் வளர்ச்சிப் பணி, மார்க்க வலுவூட்டல் பணி, சமூக நலப்பணி என தம்மை தமது மண்ணின் நலன் காக்கவும்,  தமது முஸ்லீம் சகோதரர்களின் நலன் காக்கவும் அர்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். மாஷா அல்லாஹ்.

இவர்களின் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் எமது இணையத்தளத்துக்கு அவை அனுப்பி வைக்கப்படுவது வழமையே அவற்றை  எமது இணையம்  பெரும்பாலும் எக்குறையுமின்றி முழுமையாகவே பதிவேற்றம் செய்து  வருகிறது. 

அவ்வடிப்படையில் அவர்களால் பத்ர் சஹாபாக்களின் புனித மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வின் புகைப்படங்களும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அவையும் இதோ உங்களின் பார்வைக்கு...

(((புகைப்படங்களை பெரிதாக பார்வை இட அவற்றின் மீது கிளிக் செய்யவும்.)))




 புனித திருக்கொடி ஏற்றத்துடன் நிகவு ஆரம்பிக்கபட்ட காட்சிகள்.


 சங்க உறுப்பினர் சகோதரர் பிஹாம் அவர்களால்
பத்ர் சஹாபாக்கள் மேலான புகழ் பாச்சரம் பாடப்படும் காட்சி.

 நிகழ்வு பாத்திஹா சொல்லி ஆரம்பிக்கப்படும் போது எடுக்கப்பட்ட காட்சி.







மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வு நடைபெறும் போது எடுக்கப்பட காட்சி.



 நிகழ்வில் கலந்து கொண்ட சங்கைக்குரிய மௌலவீ பாயாஸ் றப்பானீ
அவர்கள் உரை ஆற்றும் வேளை.





இறுதியாக துஆஹ் பிரார்த்தனை நடைபெற்று 
தபர்ரூக் விநியோகிக்கப் பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள். 

நன்றி 
தகவல்
ஹுப்புல் பத்ரிய்யீன் 
தோஹா கத்தார்.



Saturday, August 18, 2012

மனம் நிறைந்த ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்.


எமதன்பிற்குரிய வாசகர்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த ஈதுல் பித்ர்  நல்வாழ்த்துக்கள். 

 عيد مبارك 
சங்கைக்குரிய இலங்கை நாட்டைச் சேர்ந்த ஷம்சுல் உலமா கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிச்பாஹீ அவர்கள் ஆற்றிய ஈதுல் பித்ர் எனும் உரை பதிவேற்றப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்.


Tuesday, August 14, 2012

லைலதுல் கத்ர்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் நேயர்களே புனிதமிக்க லைலதுல் கதர் இரவு எம் சமூகத்துக்கு அல்லாஹ் அளித்த மாபெரும் ரஹ்மத்தாகும். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு என்றால் எத்தனை பாக்கியம் அன்பர்களே! ஒரு நாள் இரவு நல் அமல்களில் ஈடுபடுவதால் ஆயிரம் மாதங்கள் அமல் செய்த பேற்றை அடைந்து கொள்கின்றோமே அதற்காகவே காலம் முழுக்க நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கின்றோம்.

இந்த இரவில் அளவுக்கதிகமான ரஹ்மத்தை அல்லாஹ் இந்த பூமியில் இறக்குகின்றான், மலக்குகள் இறங்குகின்றார்கள், முஃமீன்களுக்கு சலாம் உரைக்கின்றார்கள், நல் அமல்கள் செய்வோருக்காக பிழை பொறுக்கத் தேடுகின்றார்கள். இந்த மகத்தான இரவையும் தவரவிடக்கூடியவர்கள் எம்மிலும் எத்தனையோர் பேர் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இந்த இரவில் இரண்டு ரக் அத்துக்கள் தொழுது ஒவ்வொரு ரக் அத்திலும் சூரத்துல் பாத்திஹா ஒரு தடவையும், சூரத்துல் இக்லாஸ் (குல்ஹுவல்லாஹு) ஏழு தடவையும் யார் ஓதி சலாம் கொடுத்து பின்னர் எழுபது தடவைகள் استغفر الله واتوب اليه (அஸ்தஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி) என்று ஒதுகிராரோ அவர் அந்த இடத்தை விட்டு எழும்பும் முன்னர் அவரது பாவங்களும் அவரது பெற்றோரது பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும். இன்னும் அவருக்காக சுவனத்திலே மரங்களை நட்டவும், மாளிகைகளை கட்டவும், ஆறுகளை உருவாக்கவும் அல்லாஹ் மலக்குகளை சுவனபதிகளுக்கு அனுப்புகிறான். இன்னும் அவற்றை காட்டப்படாமல்  அவர் மரணிக்கமாட்டார். (தப்சீர் ஹனபீ)

அவ்வடிப்படையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ கலாநிதி ஜவ்ஹருல் அமல் அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் லைலதுல் கத்ர் பற்றி ஆற்றப்பட்ட உரையினை வழங்குகின்றோம்.

Monday, August 13, 2012

நோன்பின் சிறப்பம்சம்.

 இன்னும் சில நாட்களே புனித ரமளானில் எமக்கு மீதமாயுள்ளது. எஞ்சியுள்ள நாட்களிலும் அல்லாஹ் அவனது பாதையில் நடந்து நல்லமல்கள் செய்யும் கூட்டத்தில் எம்மையும் ஆகிவைப்பனாக. ஆமீன்! 
 
"அல்லாஹும்மஃதிக்னா மினன்னாரி வஅத்கில்னல்  ஜன்னத யாரப்பல் ஆலமீன்"

இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா, ஜவ்ஹருல் அமல், கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் ஆற்றப்பட்ட நோன்பின் சிறப்பு எனும் தலைப்பிலான விசேட உரையினை எமதிணையம் பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

Thursday, August 2, 2012

இஸ்லாம் கூறும் அறியப்படவேண்டிய நோன்பின் சட்டங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

புனித ரமழான்  மாதம் அதிகமான சகோதரர்கள் நோன்பு நோற்கிறார்கள். ஆனாலும் அதன் சட்டங்களை அறிந்து நோற்பவர்கள் மிக மிக குறைவாகவே  இருக்கிரார்கள். எனவேதான் இஸ்லாம் கூறும் இந்த புனிதமிக்க நோன்பின் சட்டங்களை அறிந்து அதன்படி நோன்பை நோற்று பயன் பெரும் வகையில் "சங்கையான நோன்பின் சட்டங்கள்" என்னும் தலைப்பில் சங்கைக்குரிய  உலமா ஜவ்ஹருல் அமல் கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அவர்களால் ஆற்றப்பட்ட  உரையினை வழங்குவதில் எமது இணையம் மகிழ்வடைகிறது.


Comment.