பாலை மனலில் மனம் கமழும் அஜ்மீரின் ரோஜா ஏந்தல் ஹாஜா.
கடந்த மாதம் ஹஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழி அவர்களின் நினைவுதினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அவ்வடிப்படையில் அரபு மண்ணிலும் அண்ணல் ஹஜாவின் மனம் வீச அல்லாஹ் விரும்பினான்.
அதன் விளைவே கத்தார் நாட்டில் ஹுப்புல் பத்ரியீன் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தொண்ணூறு இலட்சம் மக்களை இஸ்லாத்தில் அழைத்த மாபெரும் மகான் அண்ணல் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அவர்களதும் அன்னாரின் அருந்த்தவ மைந்தர் சாஹிபே ஜலால் ஹஜா பக்ருத்தீன் சிஷ்தீ அவர்களதும் இரண்டாம் வருட ஹாஜாஜீ உரூஸ் மனாகிப் மஜ்லிஸ் கடந்த 20/07/2012 நள்ளிரவு 12 மணிக்கு மௌலவீ நுழாருல்லாஹ் றப்பானீ அவர்கள் பாத்திஹா ஓத மௌலவீ முரீத் றப்பானீ அவர்கள் துஅஹ் ஓத முராதிய்யஹ் முழக்கத்துடன் புனித திருக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.
திருக்கொடி ஏற்றத்தினை அடுத்து ஹுப்புல் பத்ரிய்யீன் அங்கத்தவர்களில் ஒருவரான முஹம்மது பிஹாம் அவர்களால் ஹாஜா நாயகம் அவர்களின் புகழேந்திவந்த இனிய இஸ்லாமிய கீதம் ஒன்று பாடப்பட்டது.
அதனை அடுத்து மகான்களின் பெயரிலான புனித மௌலித் பாராயண மஜ்லிஸ் நிகழ்வு நடைபெற்றது.
மஜ்லிஸ் நிகழ்விலே அடுத்து முஹிப்பீன்கள் அனைவரும் எழுந்து நின்று சங்கையாக ஹாலிறூ பாச்சரம் இசைத்தனர்.
அடுத்த நிகழ்வாக மௌலவீ MA நஸீம் அஹ்மத் றப்பானீ அவர்களால் மகான் ஹாஜா நாயகம் அவர்கள் பற்றியும், ரமழான் பற்றியும் மார்க்க சொற்பொழிவு ஆற்றப்பட்டது
அதனைத்தொடர்ந்து ஹுப்புல் பத்ரியீன் செயலாளர் MHM அஸாஹிம் அவர்களால் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிதி, உடல் உதவிகள் செய்த, நிகழ்வில் கலந்து கொண்ட உலமாக்கள், சங்க உருப்பினர்களுக்கும் நன்றிகளைத்தெரிவித்து நன்றி உரை ஆற்றினார்.
நிகழ்வின் இறுதியில் சங்கைக்குரிய மௌலவீ AAM பாயாஸ் றப்பானீ அவர்களால் துஆப் பிரார்த்தனை செய்யப்பட்டு நிகழ்வுகள் சலவாத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
அன்று சங்கையான ரமழான் முதல் நோன்பு என்ற படியால் நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு சஹர் உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல்
நிருவாகம்
ஹுப்புல் பத்ரியீன்
தோஹா - கத்தார்.