Sunday, December 8, 2013
islamiyailakkuAnnouncement
Wednesday, May 22, 2013
islamiyailakkuSALVAATH SOLLI SALAMATH ADAIVOM
சலவாத்துல்ஆலில் கத்ரி.
صلاة العالي القدر
اَللهُمَّ صَلِّ عَلَى سَيّدِنَّا مُحَمَّدِنِ النَّبِيِّ الْاُمِّيِّ الْحَبِيْبِ الْعَالِى الْقَدْرِ الْعَظِيْمٍ الْجَاهِ بِقَدْرِ
عَظْمَةِ ذَاتِكَ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ
அல்லாஹும்ம சல்லி அலா செய்யிதினா முஹம்மதினினின் நபிய்யில் உம்மிய்யில் ஹபீபில் ஆலில் கத்ரில் அழீமில் ஜாஹி பிகத்ரி அழ்மதி தாதிக வஅலா ஆலிஹீ வஸஹ்பிஹீ வசல்லிம்.
இதனை ஒருவன் ஒவ்வொரு வெள்ளி இரவிலும் வழக்கமாக ஒரு தடவையாவது ஓதிவரின் அவன் மரணித்ததும் அவனைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே ஹாழிராஹி நல்லடக்கம் செய்வார்கள். என்று இமாம் ஸுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள். இந்தக்கருத்தை செய்யித் அஹ்மத் தஹ்லான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் தங்காளின் "மஜ்மூஆ" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதனைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே வழக்கமாக ஓதி வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து மகத்துவத்தை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

இதை எமக்கு அனுப்பிய சகோதரர் அஸாஹிம் அவர்களுக்கு எமது நன்றிகள்.
குறிப்பு:
"யா அல்லாஹ் இதை ஓதுபவர்கள் மூலமாக கிடைக்கும் நன்மைகளை போல் ஒரு மடங்கு நன்மையை இறையடி சேர்ந்த இவரது சகோதரி ஷர்மிலா அவர்களுக்கு காணிக்கையாக்குவாயாக. ஆமீன்"
Friday, May 10, 2013
Saturday, April 27, 2013
islamiyailakkuGallery
ஷாகுல் ஹமீத் நாயகத்தை கத்தார் மண் அழைக்கிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்விலே...
1ம் நாள் மாகான் சாகுல் ஹமீத் பாதுஷா அன்னவர்கள் மீது புனித மௌலித் பாராயணமும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
2ம் நாள் நிகழ்விலே ஷாகுல் ஹமீத் ஆண்டகை மீதான மௌலித் பாராயண நிகழ்வும் வழமையாக கத்தாரில் வாரா வாரம் நடைபெறும் பூமான் நபியின் அருள் மணக்கும் புனித சலவாத் மஜ்லிசும் அதனைத்தொடர்ந்து எம்மை விட்டும் மறைந்த அனைத்து முஸ்லீம்கள் மீதும் யாசீன் பாராயணம் செய்யப்பட்டு பின்னர் மௌலவீ நஸீம் ரப்பானீ அவர்களின் உரையும் இடம்பெற்றது.
3ம் நாள் நிகழ்விலே மகான் அவர்களின் மௌலித் பாராயணமும் மௌலவீ பஸ்மில் ரப்பானீ அவர்களுடைய ஆன்மீக உரையும் இடம்பெற்று பெரிய துஆ ஓதப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு தபர்ரூக் விநியோகமும் இரவு ஆகாரமும் வழங்கப்பட்டு புனித சலவாத்துடன் நிகழ்வு வெகு விமர்சையாக நிறைவு பெற்றது.
அது தொடர்பில் எமக்கு கிடைக்கபெற்ற சில புகைப்படங்களை இத்தோடு இணைத்துள்ளோம்...
நன்றி.
ஹுப்புல் பத்ரிய்யீன்
தோஹா -கத்தார் .
Tuesday, April 9, 2013
islamiyailakkuMP3 Bayan Misbaahee
நபிகளாரின் இணையில்லா மகிமை.
அளவில்லா பாசம் பெருமானார் மீது கொள்ளுதல் எம் கட்டாயக் கடமை. அப்படி நாம் பெருமானரை காதலித்து அவர்களை அளவில்லாது நேசிக்கும் போது எப்படி நாம் கண்ணாடியில் நம்மை பார்கின்றோமோ அதே போன்று எம்மிலே நாம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை காணமுடியும்.
وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللهِ
அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களிலே ரசூலுல்லாஹ் இருக்கிறார்கள்.
அவ்வடிப்படையில் நாயகத்தின் மகிமைகளை யாரும் இதுவரை கூறாத அளவில் எம் இதயங்கள் உருகும் முறையில் இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய மௌலான மௌலவீ ஜவ்ஹருள் அமல் கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட அற்புத உரையினை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலே அளவில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம்.
யா அல்லாஹ் இந்த அறிஞருடைய வாழ்நாளை சீரான உடல் ஆரோக்கியத்தோடு 100 ஆண்டுகளுக்கு மேல் நீளமாக்கி அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்.
Tuesday, April 2, 2013
ரிபாயீ நாயகத்தை நினைவு கூர்வோம்.
ரிபாஇய்யா தரீகாவின் ஸ்தாபகர் சங்கைக்குரிய சுல்தானுல் ஆரிபீன் ஷெய்குனா செய்யித் அஹ்மத் கபீர் அர் ரிபாயீ நாயகம் அவர்களின் நினைவு தினத்தை நினைவு கூர்ந்து அவர்கள் தொடார்பிலான சில பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
நாயகம் தொடர்பான சில புகைப்படங்களை இணைத்த வீடியோ தொகுப்பு..
![]() |
நாயகத்தின் புனித ரவ்ளா. |
நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் வழித்தோன்றலாய் வந்து எம்மை விட்டும் மறைந்து வாழும் ஷெய்குனா அப்துர் ரஷீதுல் காதிரீ வர் ரிபாயீ அன்னவர்களால் நடாத்தப்பட்ட புனித ரிபாஇய்யா ராதிப் மஜ்லிசின் சில பகுதிகள்.
1985ம் ஆண்டு நடைபெற்ற மகான் சுல்தானுல் ஆரிபீன் அன்னவர்களின் ராதிப் மஜ்லிசின் ஒரு பகுதி.
Tuesday, March 19, 2013
islamiyailakkuArticle
அறிந்து கொள்! "லாஇலாக இல்லல்லாஹ்".
வஹ்ஹாபிஸ கொள்கையில் உள்ளோரே...வீண்விதண்டாவாதத்தையும்
தர்க்கிப்பதயும் விட்டுவிட்டு தூய மனதுடன் அல்லாஹ்வுக்கு பயந்தவர்களாக நடுநிலையில்
நின்று சிந்தனை செய்யுங்கள்.வெற்றி கிடைக்கும்.
சுன்னத் ஜமாஅத்தோரே....பலர் கலிமாவின் தத்துவம்
தெரியாமல் வாழ்ந்து மறைகின்றனர்.உணமையை அறிந்து இபாதத்துகளை செய்வோமே...!
லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் மிகச்சரியான அர்த்தம் "அல்லாஹ் அல்லாத இலாஹு இல்லை OR அல்லாஹ்வுக்கு வேறான தெய்வம் இல்லை ” என்பதே என்று உங்களுக்கு தெரியுமா ?
அதிகம் வேண்டாம்,அரபு அகராதியை எடுத்து அதில் இல்லா என்ற வாசகத்தின் பொருள் என்ன என்று நோக்கினால் அதுغير "ஙெய்ர்" -
வேறான /அல்லது
தவிர போன்ற அர்த்தங்களை காணமுடியும்.
கலிமா அருளப்பட்டதன் நோக்கமே ஙெய்ரிய்யத் என்பது இல்லை அதாவது அல்லாஹ் வேறு ஷிருஷ்டிகள் வேறு எனும் இரண்டை தரிபடுத்துவது இல்லவே இல்லை.அல்லாஹ் மாத்திரமே உள்ளவன் என்பதை பறைசாற்றவே ஆகும்.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை என்று பொருள் கூறிக்கொண்டிருப்போரினது வாதம் :
லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ் தவிர வணக்கதிற்கு தகுதியான வேறு நாயன் இல்லை.

இவர்களின் வாதத்தை எடுத்து ஆராய்ந்தால்,இரு மிகப்பெரிய பிழைகளை காணக்கூடியதாக உள்ளது.
1- கலிமாவின் இலட்சியத்திற்கே முற்றிலும் முரணாக உள்ளமை.
2- அரபு இலக்கணத்திற்கும் மேற்படி பொருள் கொள்ளுதல் முற்றிலும் முரணாக உள்ளமை.
1-அரபு இலக்கண விதிப்படி எவ்வாறு பிழையாகும்...?
“லா இலாஹ இல்லல்லாஹ்”
2- அரபு இலக்கணத்திற்கும் மேற்படி பொருள் கொள்ளுதல் முற்றிலும் முரணாக உள்ளமை.
1-அரபு இலக்கண விதிப்படி எவ்வாறு பிழையாகும்...?
“லா இலாஹ இல்லல்லாஹ்”
இதில் இலாஹ் என்பதுதான் எழுவாய். பயனிலை எங்கே...? என நாம் மேலே குறிப்பிட்டவர்களிடம் வினவினால், இவர்கள்,"பயனிலை
தோன்றாமல் இருக்கிறது.அது حذف ஹத்ஃபு செய்யப்பட்டிருக்கிறது.அதாவது பயனிலை நீக்கப்பட்டிருக்கிறது
என சொல்வார்கள்.அத்துடன்,
லா இலாஹ முஸ்தஹிகுன் லில் இபாததீ இல்லல்லாஹ்.முஸ்தஹிகுன் என்பதுதான்
அந்த எழுவாயின் பயனிலை.அது தோன்றாமல் உள்ளது என்பர்.
அதாவது கலிமாவில் வந்துள்ள எழுவாய்க்கு பயனிலை நீக்கப்பட்டிருக்கிறது/தோன்றாமல்
உள்ளது என்று சொல்லி முஸ்தஹிகுன் என்ற சொல்லையும் கொண்டுவந்து பயனிலையாக காட்டுவது
இருக்கிறதே,அது மொழி இலக்கணத்துக்கும் பிழை.யதார்த்தத்துக்கும் பிழையாகும்.
முதலாவதாக மொழி இலக்கணத்திற்கு எவ்வாறு பிழையாகும் என நோக்குவோம்,
ஓர் அரபு மொழி இலக்கண விதி--->>
“வஷாஹ ஃபீதல் பாபி இஷ்காதுல் ஹபர்.....இதல் முராது மா சுகூதீ ஹீ ழஹர்….”
நீ பயனிலையை நீக்குவதென்றால் நீக்கு. லா என்ற சொல்லுக்குப் பின்னால்
எழுவாய் வந்தால் பயனிலையை நீக்குவதுதான் அழகு.ஆனால் நீக்கப்பட்ட பயனிலை இன்னதுதான்
என்று காட்டக்கூடிய அத்தாட்சி ஒன்று அந்தவசனத்தில் இருக்கவேண்டும்.(இதுதான் அந்த நிபந்தனை)
அதாவது (இலக்கண விதிப்படி)
லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வசனத்தில் முஸ்தஹிகுன் என்ற பயனிலை நீக்கப்பட்டிருக்கிறது.அந்த
பயனிலை முஸ்தஹிகுன் என்ற சொல்தான் என்பதை காட்டக்கூடிய ஆதாரம் லா இலாஹ இல்லல்லாஹ்வில்
எங்கே இருக்கிறது....?
இல்லவே இல்லை.ஆகையினால் நீ பயனிலையை நீக்கமுடியாது.அப்படி பயனிலையை நீக்கி
முஸ்தஹிகுன்(வணக்கத்திற்கு தகுதியான) என்று நீவைப்பது முற்றிலும் பிழையாகும் என்பது தெளிவாகுகிறது
2-கலிமாவின் இலட்சியத்திற்கு எவ்வாறு பிழையாக உள்ளது ?
அல்லாஹ் தவிர வணக்கத்திற்கு தகுதியான நாயன் யாருமில்லை எனும்போது
வரும் விபரீதம் என்ன தெரியுமா..?
வணக்கத்திற்கு தகுதி இல்லாத நாயன் யாரோ உண்டு என்று சொல்கிறாய்.உன்
கலிமா சரி வருமா...? கலிமா வந்தது எதற்காக....? நஃபீஹுல் ஆலிஹதீ
ஜம்இஹிம் - இலாகுகள் எதுவுமே கிடையாது.வணக்கத்திற்கு பாத்திரமானதோ,வணக்கத்திற்கு பாத்திரமில்லாததோ,எவை எவை எல்லாம் வணங்கப்படும் பொருளாக கொள்ளப்படுகிறதோ அவையனைத்தும்
பொதுவாக,மொத்தமாக இல்லை என வலியுறுத்துவதற்காக வந்ததே
தவிர வேறெதற்கும் வரவில்லை.
நீ முஸ்தஹிகுன் என்ற சொல்லை பயனிலையாக கொடுக்கும்போது,
வணக்கத்திற்கு பாத்திரமான நாயன் அல்லாஹ்வைத்தவிர யருமில்லை என்று
வரும்.அதன் கருத்தை ஆய்ந்து பார்.வணக்கத்திற்கு பாத்திரமில்லாத நாயன் இருக்கிறான்
என்று வரும்.கலிமாவுடைய லட்சியம் இதுவல்லவே..! வணக்கத்திற்கு
பாத்திரமான,வணக்கத்திற்கு பாத்திரமில்லாத நாயன் அனைத்தும் இல்லை என்று சொல்வதுதான்
கலிமாவின் அடிப்படை லட்சியம்.
ஆகையினால், நீ மேற்குறிப்பிட்டவாறு கலிமாவுக்கு பொருள் கொள்ள
முடியாது.அதாவது லா இலாஹ வில் வரும் இலாஹ் என்ற எழுவாய்க்கு முஸ்தஹிகுன் என்றோ அல்லது
இன்னொரு சொல்லைக் கொண்டோ பயனிலை(ஹபர்) கொடுக்க முடியாது.கொடுத்தால் மொழி இலக்கணத்துக்கும்
பிழை,கலிமாவின் இலட்சியத்திற்கும் பிழை.
ஆகவே,இங்கு பயனிலை நீக்கப்பட்டுள்ளது என்றில்லை..இதே கலிமாவில்தான்
எழுவாயும் இருக்கிறது.இதே கலிமாவில்தான் பயனிலையும் இருக்கிறது.
"லா இலாஹ இல்லா அல்லாஹ்".
இல்லா வுக்கு "ஙெய்ர்" உடைய அர்த்தம் கொடு.(ஏற்கனவே
இல்லாவுக்கு ஙெய்ர் என்ற நேரடி அர்த்தம் உள்ளது. ஆகவே,
லா இலாஹ ஙெய்ருல்லாஹ்.
லா => ஹர்புன் நஃபி , இலாஹ => லா வுடைய
இஸ்ம், இல்லா => இலாஹ்வுடைய ஹபர் (பயனிலை) , அல்லாஹ்=>முஸ்தத்னா.
இங்கு ஙெய்ருடைய அர்த்தம் இல்லாவுக்கு கொடுத்தே ஆகவேண்டும்.
அப்போது“அல்லாஹ் அல்லாத எந்த இலாஹும் இல்லை” என்ற பூரண அர்த்தம் கிடைக்கும்.
நான் ஓர் உணவகத்தில் நின்றுகொண்டு சொல்கிறேன், இங்கு "ஹலால் அல்லாத எந்த உணவும் இல்லை" என்று.நீர்
என்னவென்று புரிந்து கொள்வீர்...?அங்குள்ள உணவுகள் அனைத்தும் ஹலால் ஆனவை என்றல்லவா...!
நான் ஒரு கூட்டத்தின் நடுவே நின்று கொண்டு சொல்கிறேன், இங்கு "மாட்டைத்தவிர மனிதர் யாருமில்லை" என..கூடியிருப்போர்
என்னவென்று விளங்குவர்?எங்களை எல்லாம் மாடு என்றா சொல்கிறீர் என கோபமாக வினவுவர் அல்லவா...!
மற்றும் நான் உங்களிடம் கூறுகிறேன்,இங்கு "செம்பு அல்லாத கம்பி இல்லை" என்று.நீங்கள்
என்னவென்று அதை எடுப்பீர்..?இருக்கும் கம்பிகள் அனைத்தும் செம்பாலானவை என்றல்லவா?
ஆம்.இதுபோன்றே அன்று நபிகளார்,கண்ட கண்ட பொருட்களையெல்லாம் தங்கள் இலாஹுகளாக ஆக்கி இருந்த
மக்கத்து மக்கள் மத்தியில் எழுந்து நின்று,அல்லாஹ் அல்லாத
எந்த இலாஹும் இல்லை என்று பறைசாற்றினார்கள்.அப்போது பலர் நபிகளாரை பலர் தூற்றினர்.அதில்
ஒருவன்,"இந்த முஹம்மத் எல்லா இலாஹுகளையும் அல்லாஹ் என்று சொல்கிறார்.இது
மிகவும் ஆச்சரியமாக உள்ளதே.இது நிச்சயமாக பொய்யாகும் என்று கூறுகிறான்".மேற்படி
சம்பவத்தை அல்லாஹ்வே தன் திருமறையில் பின்வருமாறு சொல்லிக்காண்பிக்கின்றான்,
"Has he made the alihaa (gods) (all) in to One. Verily, this is a curious thing!" (38:5)
“இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒன்றாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்). (38:5(
இதைவிட ஆதாரம் வேறு என்னவேண்டும் சகோதரர்களே கலிமா சொல்லும் அர்த்தம் இதுதான் என்பதற்கு....!திருகலிமா சொல்லும் தத்துவத்தை குரானில் அல்லாஹ் அள்ளி இறைத்துள்ளான் சகோதரர்களே பாருங்கள்.....
v அல்ஹம்துலில்லாஹ்(எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே..!)
உம்மை நான் புகழ்வதும் என்னை நீர் புகழ்வதும் அல்லாஹ்வுக்கே என்றால் எங்கணம்...சிந்தனை செய்வீர்.
v இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன்..உன்னையே வணங்குகிறேன்.உன்னிடமே உதவி தேடுகிறேன்.ஒரு நாளைக்கு நாம் எத்தனை பேரிடம் உதவி கேட்கிறோம்...சிந்தனை செய்வீர்.
v இல்லல்லாஹ் இல்லல்லாஹ் என்று நீர் திக்ர் செய்கிறீர்.அதன் தத்துவம் புரிந்து செய்கிறீரா?
v கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;எல்லாம் அறிந்தவன்
(திருக்குர்ஆன் 2 - 115)
(எங்கு பார்த்தாலும் அல்லாஹ் என்று குர் ஆன் சொல்வதை கவனித்தீரா!)
v அவனைப் போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.’ (அஷ்ஷுரா: 42)
(அப்போ,செவியேற்பவர் பார்ப்பவர்களெல்லாம் யாரோ..!)
v "குல்லு ஸைய்யின் காலிகுன்.இல்லா வஜ்ஹஹு" (திருக்குர்ஆன்)
"அனைத்துவஸ்துக்களுமே பொய்யானாவை (இல்லாதவை).அல்லாஹ்வின் திரு முகத்தை (அவனை) தவிர"
v ''கவிஞர்கள் சொன்ன வார்த்தைகளில் மிகவும் உண்மை வாய்ந்தது, அல்லாஹ் அல்லாத அனைத்தும் பொய்யானது என்ற லபீத் கவிஞனின் வார்த்தையாகும்'' என்று நபிமணி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்
- ஸஹீஹுல் புஹாரீ பாகம் - 51, பக்கம் 541
(அப்போ,நம் கண்ணுக்கு இருப்பதாக தெரிவதெல்லாம் என்ன..?)
v (நபியே..!)நீர் கூறுவீராக...: அல்லாஹ்..!அவன் ஏகன்...!
அல்-குர்ஆன் ( 112:1 )
(அவன் ஏகன் என்றால் என்ன? அல்லாஹ் ஏகமானவன் என்றல்லவா?)
v (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே;
பிந்தியவனும் அவனே;
வெளியானவனும் அவனே; உள்ளானவனும்அவனே;
மேலும்,,,
அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.
அல்-குர்ஆன் ( 57:3 )
v நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்..!
அல்-குர்ஆன் ( 50:16 )
v ஆயினும், நாமோ (மனிதனாகிய)அவனுக்கு, உங்களை விட சமீபமாக இருக்கிறோம்.
எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை...!
அல்-குர்ஆன் ( 56:85 )
(பார்க்கிறார்களில்லை என்று அல்லாஹ் குறிப்பிடுவது எதற்காக?சிந்தனை செய்வீர்)
v அலா இன்னஹும் பீமிர்யத்தின் மின்லிகாயி றப்பிஹிம்
“அவர்கள் அல்லாஹ்வைக் காண்பதில் சந்தேகமுள்ளவர்களாயிருக்கின்றார்கள்.
அலா இன்னஹு
பீகுல்லி ஷையின் முஹீத் “நிச்சயமாக அல்லாஹ்வானவன் ஒவ்வொரு வஸ்துவையும் சூழ்ந்தவாயிருக்கிறான்”
அறிந்துகொள்
நிச்சயமாக அவர்கள் (மக்கத்து காபிரீன்கள்) அவர்களின் ரப்பாகிய அல்லாஹ்வை சந்திப்பதில்
கடுமையான சந்தேகமுடையவர்கள் ஆவர் அறிந்துகொள் நிச்சயமாக அவன் (அல்லாஹ்) ஒவ்வொறு வஸ்துவையும்
சூழ்தவனாய் இருக்கின்றான்'.
அல் குர்ஆன் சூறத்து ஹாமீம் அஸ்ஸஜதா 54ம் வசனம்
(அவனை காண்பதில் சந்தேகம் வேண்டாம்.அவன் ஒவ்வொரு வஸ்துவாகவும் உள்ளான் என்பதை இதைவிட அழகாக சொல்ல முடியுமா?)
v அன்றியும், (மனிதனுடைய )பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்..!
அல்-குர்ஆன் ( 50:16 )
(பிடரி நரம்பை விட நெருக்கமான நெருக்கம் என்றால் என்ன...? சேட்டுக்கு பஞ்சு உள்ள நெருக்கம்.குமிழிக்கு நீர் உள்ள நெருக்கம்.)
v "மண் அறப நப்ஸஹூ பகத் அறப றப்பஹூ"
தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்து விட்டான் என்று கண்மனி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
v "ஏழு வானத்தில் உள்ளவர்கலும்,பூமியில் உள்ளவர்கலும் இறைவனையே துதி செய்கின்றனர்."அல்-குர்ஆன்
(அல்லாஹ்வின் ஆழமான பேச்சு.வஹ்ததுள் வுஜூத்,ஏகத்துவ ஞானத்தை உணர்த்தும் பேச்சு...
ஹிந்து யாரை துதி செய்கிறான்???
கிறுஸ்தவர்கள் யாரை துதி செய்கிறார்கள்???
புத்தர்கள் யாரை துதி செகின்றார்கள்????
முஸ்லீம்கள் யாரை துதி செய்கிறாரகள்?????
விளக்க முடியுமா)
v அவனே முந்தியவன். அவனே பிந்தியவன். அவனே வெளியானவன். அவனே உள்ளானவன். அவன் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்.(சூரதுல் ஹதீத்)
பஹுவ ஹக்குன் பில்ஹகீகா
குல்லுமன் யஃரிபு ஹாதா
ஹாஸ அஸ்றாறத் தரீகா..”
உலகம்
என்பது ஒரு மாயை. ஆனால் அது எதார்தத்தில் அல்லாஹ்வாக இருக்கிறது. இவ்வுண்மையைத் தெரிந்து
கொண்டவர்கள் அனைவரும் தரீகாவின் இரகசியங்களைப் புரிந்து கொண்டவர்களாவர்.
முஹ்யித்தீன்
இப்னு அறபீ (றழி),
அல்புதூஹாதுல் மக்கிய்யா
நபிமொழியொன்று...
நூற்றாண்டுகளில் மிகச்சிறந்த
நூற்றாண்டு என்னுடைய நூற்றாண்டு.அதன் பின்னர் சிறந்தது அடுத்த நூற்றாண்டு.அதன் பின்னர்
சிறந்தது அதற்கடுத்த நூற்றாண்டு.அதன் ( 3 நூற்றாண்டுகளின்)பின்னர்
ஒரு பொய் பரவும் என்று கண்மணி நபிகளார் நவின்றார்கள்.
ஆரிபீன்களும் இமாம்களும்
அந்த ஒரு பொய் எது என்று குறிப்பிடுகையில் "அது கலிமாவை விளங்கிக் கொள்ளும் கருத்தில்"
என குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ் வேறு..படைப்பு வேறு...
அதாவது அல்லாஹ் வேறாக இருக்கிறான்.படைப்பு வேறாக இருக்கின்றன...என
இரண்டு இருப்பை யார் தரிபடுத்துகிறார்களோ அவர்கள் தெளிவான ஷிர்கில் இருக்கிறார்கள்.
அல்லாஹ் மாத்திரமே இருக்கிறான்...(படைப்பாகவும்
அவனே வெளியாகி உள்ளான் என யார் ஈமான் கொள்கிறார்களோ அவர்கள் சத்தியமாக வெற்றியாளர்களே...
இன்னுமொரு கட்டுரையில்
லா இலாஹ இல்லல்லாஹ் வில் உள்ள லாவுக்கு பின்னால் "இலாஹ" (இஸ்முல் ஜின்ஸிய்யா)
என்று வந்ததன் விளக்கம் என்ன..? லாவுக்கு பின்னால் "இலாஹுன்" (இஸ்முல்
தப்ரிய்யா) என்று வந்ததால் அதன் விளக்கம் என்ன..? என்று விரிவாக பார்ப்போம்
இன்ஷா அல்லாஹ்.
அற்புதம் இணையத்துக்காக.
ஆன்மீக நண்பன்.
இப்னு இஸ்மாயீல்.
Sunday, March 17, 2013
islamiyailakkuMP3 Bayan Misbaahee, Poyetry
வைத்தியக்கலாநிதியின் அகமியங்களும் மௌலித் ஷரீபும்.
முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடையில் வாழும் முக்தி பெற்ற நாதரான வைத்தியக்கலாநிதி என பார்போற்றும் சீலரான நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களது காலத்தவர்களான செய்யிதுனா செய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாவூத் வலியுல்லாஹ் அன்னவர்களது நினைவு தினம் இம்மாதம் அன்னவர்களது நேசர்களால் கொண்டாடப்பட இருக்கும் வேளையில்,
அன்னாரது அகமியங்களை எடுத்தியம்பும் இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா காதிமுல் கவ்மி கலாநிதி ஜவ்ஹருள் அமல் ஷெய்குனா அல் ஹாஜ் மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்வடைகிறோம்.
Subscribe to:
Posts (Atom)