மனம் மகிழும் ஈத் மீலாத் நல் வாழ்த்துக்கள்.
Posted by islamiyailakku on 7:37 AM
மன்னர்க்கு மன்னரான, நீங்களும் நாமும் இவ்வகிலமும் தோன்றக் காரணமான எம் பெருமான் صلى الله عليه وسلم அவர்கள் இப்பூவுலகில் அவதரித்த கண்ணியமிக்க இம்மாதத்தில் மனம் மகிழும் எம் இனிய உறவுகள் அனைவருக்கும் ஈத் மீலாத் நல்வாழ்த்துக்கள்.
இம்மாதத்தை கண்ணியம் செய்வதோடும் பெருமானார் صلى الله عليه وسلم அவர்களின் புகழ் பாடுவதொடும் எம் செயற்பாடுகளை நிறுத்திவிடாமல், அவர்களது வாழ்க்கை முறையினை, அவர்கள் சொன்னவற்றை, அவர்கள் ஏவிய, அங்கீகரித்த விடயங்களை எடுத்து நடப்பதோடு, அவர்கள் தடுத்த விடயங்களிலிருந்து விடுபட்டு எம்மையும் எமது உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு வல்ல நாயனும், கண்மணியாம் செய்யிதுனா முஹம்மதுன் صلى الله عليه وسلم அவர்களும் எமக்கும் அருள் புரிய வேண்டும். ஆமீன்.
Categories: Announcement