தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்.

Posted by islamiyailakku on 1:45 AM


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு வாசகர்களே
கடந்த  நோன்புப் பெருநாள்  தினத்தன்று இலங்கை  நாட்டில் காத்தான்குடி நகரில் உள்ள புனித  காதிரிய்யாஹ் திருச்சபயினால் வெளியிடப்பட்ட தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ் என்ற பெயர் கொண்டு சங்கைக்குரிய கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அன்னவர்களால் எழுதி வெளியிடப்பட்ட புனிதா கசீததுல் புர்தஹ் ஷரீபுக்கான 301 வது விரிவுரை நூலில் அவர்கள் எழுதி உள்ள பெருமானார் (ஸல்-அம்) அவர்களின் மகிமைகளை உங்களுக்கு இன்றுமுதல் இத்தலைப்பில் தொடராக நாங்கள் வழங்க உள்ளோம் அல்ஹம்துலில்லாஹ். (இதை யாத்தளித்த அந்த மா மனிதரை அல்லாஹ் நீடுழி வாழ   வைப்பான் ஆமீன்...)
யார் அந்த நபிகள் கோமான் !
 அன்புச் சகோதரா!
நபிகள்  நாயகம் (ஸல்-அம்) அவர்கள் யார? என்ற தலைப்பில் மூன்று விடயங்களை ஆராயவேண்டும். 
  1. நபி (ஸல்) அவர்கள் மனிதனா? இல்லையா? என்பது.    
  2. அவர்கள் நம்போன்ற மனிதனா? இல்லையாஎன்பது. 
  3. அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதனா ? இல்லையாஎன்பது.    


மேற்கண்ட மூன்று விடயங்களிலும் முதலாவது விடயத்துக்கு "அவர்கள் மனிதனே அன்றி இறைவனுமில்லை ஜின்னுமில்லை மலைக்கு அமரரும் இல்லை" என்று ஒரே பதில்  கூறி விடலாம் இதை நிரூபிக்க விரிவான விளக்கம் தேவையில்லை  திருக்கலிமா சொன்ன விசுவாசிகளுக்கிடையே கருத்து வேறுபாடுமில்லை.
எனினும் சூபிகளும், ஞானிகளும் தமக்குரிய பாணியில் இது தொடர்பாக இது தொடர்பாக ஆழமான விளக்கம் கூறுவார்கள்.அவர்களிடமே அதை கேட்டறிந்து கொள்ள வேண்டும். ஆயினும் இரண்டாம் மூன்றாம் விடயங்களை மட்டும் விவரமாக ஆராய்வோம்  பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்பவர்களுக்கு இவ்விரு விடயங்களும் தெளிவாகும்.
நபீ (ஸல்) அவர்கள் இறைவனா? மனிதனா? மலக் என்ற அமரரா? அல்லது ஜின்னா?
இப்படியான கேள்விகள் இன்று நேற்று எழுந்த கேள்விகள் அல்ல. நபீ ஸல் அவர்களின் காலத்திலேயே இப்படியான கேள்விகள் அன்று வாழ்ந்த மக்களின் நெஞ்சங்களை துளைத்துக் கொண்டிருந்தன  இதனால்தான்
قل انما انا بشر مثلكم يوحى الي انما لهكم اله واحد 
(முஹம்மதே நான் உங்கள் போன்ற மனிதன் என்று அந்த மக்களிடம் சொல்லுங்கள்) (18:110)
என்ற திருக்குர்ஆன் வசனம் இறங்கிற்று.
நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அந்த மகளின் நெஞ்சங்களை மேற்கண்ட கேள்விகள் துளைக்கவில்லையாயின் நான் உங்கள் போன்ற மனிதனென்று நாயகம்  ஸல் அவர்கள் சொல்லியிருக்கத் தேவையில்லை ஏனெனில் அவர்கள் மனிதன் என்பது அந்த மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம் ஒன்றாகவே இருந்தது.
நபீ (ஸல்)  அவர்களின் "முஃஜிசாத்" அபார அற்புதங்களையும் அகமியங்களையும் நேரில் கண்ட அந்த மக்களுக்கு மேற்கண்டவாறு அவர்கள் பற்றி எண்ணத் தோன்றியது.
அந்த மக்கள் நெஞ்சங்களில் நிழலாடிய கேள்விகளை அறிந்த அல்லாஹ் மேற்கண்டவாறு 
சொல்லும்படி அவர்களுக்கு வஹீ மூலம் கட்டளை இட்டான் "இன்னமா அன பஷருன் மித்லுகும்" நான் உங்கள் போன்ற மனிதனே அன்றி "இலாஹ்" கடவுள் அல்ல என்று ஆணித்தரமாகக் கூறினார்கள். இந்த விபரம் மூலம் அன்று வாழ்ந்தவர்களில் சிலர் நபீயை அல்லாஹ் என்றும் இன்னும் சிலர் மலக்கென்றும் , வேறு சிலர் ஜின் என்றும் எண்ணினார்கள் என்பது புலனாகும்.
(நபீ (ஸல்) அவர்கள் நம்போன்ற இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் இரண்டு காதுகளையும்  மற்றும் மனித உறுப்புகள்  போல் ஏனைய உறுப்புகளையும்  உடையவர்கள்)


மேற்கண்ட அந்த அம்சங்களில் மட்டும்தான் அவர்கள் நம்போன்ற மனிதன். விசேடமாக  நம்மில் இல்லாத, நமது உறுப்புக்கு  மாறான எந்த ஓர் உறுப்பும் அவர்கள் திரு உடலில் இருக்கவில்லை சாதாரண மனிதனுக்குரிய உடலமைப்பிலேயே நபீ (ஸல்) அவர்களது  திரு உடலும் இருந்தது.


அவர்கள் நம்மைப்போல் காலால் நடப்பார்கள் கையால் பற்றுவார்கள் கண்களால் பார்ப்பார்கள் காதால் கேட்பார்கள் உலகத்தோடு ஒட்டிய சில நடவடிக்கைகள் தவிர ஏனைய எல்லா நடவடிக்கைகளிலும் நம்போன்றுதான் நபீ (ஸல்) அவர்கள் நடந்து  கொள்வார்கள்.  

மேற்கண்ட உடலமைப்பு அம்சத்தில் மட்டும்தான் அவர்கள் நம்போன்ற மனிதன். நமக்கு மாற்றமாக அவர்கள் தலையால் நடப்பதுமில்லை காலால் சாப்பிடுவதுமில்லை கண்ணால் கேட்பதுமில்லை காதால்   பார்பதுமிலை.

எனினும் எதார்தத்திலும் அந்தஸ்திலும் நமக்கு முற்றிலும் உலகில் பிறந்த இதன் பிறகு பிறக்கப் போகின்ற எந்த  எந்த ஒரு மனிதனும் அவ்விரண்டிலும் அவர்களை நெருங்கவும் இல்லை நெருங்கவும் முடியாது.

(தொடரும்......)

Categories: ,