இஸ்லாமிய மத்ஹபுடைய நான்கு இமாம்கள் பற்றி சிறு குறிப்புகள்.

Posted by islamiyailakku on 9:37 AM

ஹனபீ இமாம் (ரழி)
ஹிஜ்ரி 80 இல் பிறந்து 70 ஆண்டுகள் வாழ்ந்து ஹிஜ்ரி150 இல் மறைந்து பக்தாதில்  நல்லடக்கமாகி  உள்ளார்கள்.  பிக்ஹு என்ற மார்க்க சட்டக் கலைக்கு மூல  கர்தாவானவர்கள் என்று இமாமுனா ஷாபிஈ (ரழி) அவர்களால் போற்றப்பட்டவர்களும் மிகப்பெரும் செல்வச் சீமானாக இருந்தும் அதனை உதறித்தள்ளிவிட்டு இஷா தொழுகைக்காக செய்த வுழூ உடனேயே சுபஹுத்
தொழுகையை 40 ஆண்டுகாலம் நிறைவேற்றி வந்தவர்களும் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களின் ஆன்மார்ந்த அன்பர்களாகிய சஹாபாப் பெருமக்கள் வாழ்ந்துவந்த பொற்காலத்தில் வாழும் பாக்கியம் பெற்றவர்களும் குர் ஆன் ஹதீஸ் இஜ்மாஃ ஆகியவைகளின் மூலம் கியாஸ்( قياس) ஆய்வு செய்து பல்லாயிரக் கணக்கான மார்க்க சட்டங்களை இவ்வுலகுக்கு வகுத்துத் தந்த நாற்பெரும் மேதைகளான இமாம்களில் முதன்மைக்குரியவர்களும் முக்கியத்துவம் பெற்றவர்களுமான
الامام الاعظم والهمام الاقدم افضل ائمة المجتهدين
 
அபூ ஹனீபா நுஃமான் இப்னு தாபித் (ரழி)
                  *****************************************


மாலிக் இமாம் (ரழி)
ஹிஜ்ரி 93 இல் பிறந்து 86 ஆண்டு காலம் வாழ்ந்து 179 இல்  மறைந்து  புனித ஜன்னத்துல் பகீஇல் நலடக்கம் ஆகி உள்ளவர்களும் புனித மதீனா நகரில் மஸ்ஜிதுன் நபவியில் பன் நெடுங்காலம் பிக்ஹு ஹதீஸ் போன்ற கலைகளில் شيخ العلماء - அறிஞர்களின் ஆசான்
 استاذ الائمه - இமாம்களின் ஆசிரியர் என்று போற்றப்பட்டவர்களும் அஸ்சிஹாஹுஸ் என்ற பிசித்தி பெற்ற ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றாக முஹத்திஸ்களில் சிலரால் கருதப்படுகின்ற ( موطا ) முவத்தா என்ற பெருமானாரின் பொன்  மொழித்  தொகுப்பை இவ்வுலகிற்கு  தொகுத்து தந்தவர்களும் امام المدينة " புனித மதீனா நகரின் பெருந்தலைவர் என்று மக்களால் கௌரவிக்கப் பட்டவர்களாக இருந்தும் புனித  மதீனா நகரின் பெருமையை கருதி அதன் சுற்று வட்டாரத்துக்குள் எந்தப் பகுதியிலும் பாதணி அணிந்தோ சிறு நீர் கழித்தோ அல்லது வாகனித்தோ இல்லாமல் பெருமானார் (ஸல்) அவர்களின் புனிதத்தையும் கண்ணியத்தையும் தம் வாழ்விலும் வாக்கிலும் கடைசி வரை காத்து நின்று காரூண்ய சீலராக திகழ்ந்த 
امام دار الحجرة واوحد الائمة الاعلام 
அபூ அப்தில்லாஹ் மாலிக் இப்னு அனஸ் (ரழி)
                   ***************************************** 

ஷாபிஈ இமாம் (ரழி)  
 ஹிஜ்ரி 150 இல் பிறந்து 54 ஆண்டுகள் வாழ்ந்து 204 இல்  மறைந்து மிஸ்ரு (எகிப்து) நாட்டில் நல்லடக்கமாகி உள்ளவர்களும் தம்மை கடுமையான ஏழ்மையும் வறுமையும் வாட்டியபோதும் மூலநோய் (PILES) ஒரு பக்கத் தலை வலி போன்ற  9 வகையான பயங்கர நோய்கள் தம்  உடலை வருத்திய போதும் அவைகளை பற்றி கிஞ்சித்தும் கருதாமல் தம்   உடலையும் உயிரையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் செய்து பல வணக்க வழிபாடுகளில் ஈடு பட்டிருப்பதுடன் ஒவ்வொரு நாளும் ஒரு குர்ஆன் ஷரீப் ஓதி முடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவும் தம் வாழ்வை மார்கத்திற்காக அர்ப்பணம் செய்து கிதாபுல் உம்மு كتاب الام  போன்ற மிகப்பெரும் சட்ட நூல்களை இயற்றித் தந்தவர்களும் தாய் வழியிலும் தந்தை வழியிலும் பெருமானார் (ஸல்) அவர்களின் புனிதமிகு பரம்பரையான குறைஷ் குலத்தை சேர்ந்தவர்களாக இருந்து மாலிக் இமாம் (ரழி) அவர்களிடம் கற்கும் தகைமையை கொண்டவர்களாகவும் ஹன்பலி இமாம் அவர்களுக்கு கற்பிக்கும் பெருமையைப்  பெற்றவர்களாகவும் திகழ்ந்த 

الامام القربشي المطلبي اشرف الائمة المجتحدين
 அபூ அப்தில்லாஹ் முஹம்மது இப்னு இத்ரீஸ்  அஷ்ஷாபி இய்யி (ரழி)
                                           *****************************************
  ஹம்பலி இமாம் (ரழி) 
 ஹிஜ்ரி 164 இல்பிறந்து 77 ஆண்டுகள்  உலகில் வாழ்ந்து  ஹிஜ்ரி 241 இல் மறைந்து இராக்கின் பக்தாதில் நல்லடக்கமாகி  உள்ளவர்களும் சுகமாக இருப்பதற்கு வசதி வாய்ப்புகள் வாய்க்கப்பெற்றும் காய்ந்த ரொட்டியை தண்ணீரில் துவைத்து உப்பைத் தொட்டு உண்ணும் பழக்கத்தை கொண்டவர்களாகவும் சில நேரங்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்து பேரீத்தம் பலத்திலும் கூழிலும் நோன்பு திறப்பவரகளாகவும் நாளொன்றுக்கு முன்னூறு ரக்அத்துக்கள்  தொழுது இரவு பகல் ஒவ்வொன்றிலும் குர்ஆன் ஷரீப் ஓதி ஹத்மு  செய்வதை தமது அன்றாட ஓதலாக ஆக்கிக்கொண்டவர்களாகவும் தமது சொந்த ஊரான பக்தாதில் இருந்து கால் நடையாக மூன்று முறையும் வாகநித்து இருமுறையும் புனித ஹஜ்ஜுக் கடமை நிறைவேற்றியவர்களாகவும் குர்ஆன் ஷரீப் படைக்கப்பட்டதா? படைக்கப்படாததா என்ற சர்ச்சை எழுந்தபோது குர்ஆன் ஷரீப் படைக்கப்பட்டதுதான் என்று  சொல்லுமாறு சிறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்து வம்பித்தபோதும்  ஓசையோ எழுத்தோ இல்லாத அல்லாஹுத்தஆலாவுடைய  உண்மையான கலாமாகிய குர்ஆன் ஷரீப் படைக்கப்படாததுதான் என்று கூறியதற்காக 29 முறை சாட்டையால் அடித்து வதைக்கப்பட்டு  தமது  பொன் மேனி சின்னா பின்னமாக சிதைக்கப் பட்டு பிற துன்பங்களால் இம்சிக்கப்பட்டு இறைவனடி  சேர்ந்தவர்களும் தமது ஜனாஸாவை லட்சோப லட்சம் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக நல்லடக்கம் செய்யும் வேளையில் இருபதாயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்பதற்கு காரணமாய் இருந்தவர்களும் பேணுதல் உள்ளவர்களால் பின்பற்றப் படுபவர்கள் என்றும் மார்க்க சட்ட ஞானத்தில் பூரணத்துவம் பெற்றவர்கள் என்றும் போற்றப்பட்டவர்க்களுமான 
امام الاورعين واكمل الفقهاء في علوم الدين
அபூ அப்தில்லாஹ் அஹ்மதிப்னு ஹம்பல் (ரழி)
                                     
Categories: ,