நபி மொழிகள்.

Posted by islamiyailakku on 5:00 PM
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ரமழான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள் (மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1906ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 





கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1907







கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்! என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால், நான் நோன்பாளி! என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான் தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
1904


கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ரமழானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில்  எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாளில் நோன்பு நோற்கலாம்.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
1914


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சஹர் செய்யுங்கள் நிச்சயமாக சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) இருக்கிறது.


அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி
1923


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பாரர்கள்.


சஹ்ல் பின் சஅத் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
1957


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தமது நோன்பை முழுமைப்படுத்தட்டும். ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
1933


நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) ரமழான் மாதத்தில் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களைச் சந்திக்கும் வேளையில் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் அதிகமதிகம் வாரி வாரி வழஙகுவார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) ரமழானின் ஒவ்வோர் இரவும் ரமழான் முடியும்வரை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களை சந்திப்பார்கள். நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றைவிட அதிகமாக நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வாரி வழஙகுவார்கள்.


இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
1902


கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
1903


அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலைநிறுத்துவது. 3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது. 4. (உரிய தகுதியை  உடையோர் இறையில்லம் கஃபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமழானில் நோன்பு நோற்பது.







இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹீஹுல் புகாரி -
08


அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களை பேச வேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி" என்று இரு முறை கூறட்டும். என் உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மீது ஆணையாக! நோன்பாளியின் வாயில் இருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட சிறந்ததாகும். (மேலும்) எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும் இச்சையையும் விட்டுவிடுகிறார். நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும் (என்று அல்லாஹ் கூறினான்.)


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 1894


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ரமழான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
1898


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
1899


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ரய்யான்என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! நோன்பாளிகள் எங்கே, என்று கேட்கப்படும் உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்.


சஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
1896
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ரமழான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரீ (1898), முஸ்லிம் (1956)

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

எவர் ஒருவர் பஜ்ருடைய நேரத்துக்கு முன் நோன்புக்கான நிய்யத்தினை வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு நோற்றல் இல்லை


முஸ்னத் அஹ்மத், இப்னு ஹூஸைமா, இப்னு ஹிப்பான்



கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

நமது நோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்.

அபூதாவுத்



கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நம்பிக்கை கொண்டு (நற்கூலியை எதிர்பார்த்து) ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
37



கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும் எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபடவேண்டாம், யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி! என்று இரு முறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும் பானத்தையும் இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அல்லாஹ் கூறுகிறான்)


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி
1894


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்.

அஹ்மத்


நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்என அல்லாஹ் கூறுவதாக கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.

திர்மிதி


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை.

அஹ்மத், இப்னுமாஜா



கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நோன்பும் , அல்குர்ஆனும் மறுமை நாளில் அடியானுக்காகப் பரிந்துரை செய்யும். நோன்பு அல்லாஹ்விடம், இரட்சகனே! நான் இந்த அடியானை உணவு முதலான விருப்பங்களிலிருந்து தடுத்துவைத்தேன். நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன் என்று கூறும். அல்குர்ஆன் அல்லாஹ்விடம், இரவுப் பொழுதுகளில் நான் இந்த அடியானை விழித்திருக்கச் செய்தேன். எனவே நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன் எனக் கூறும்.

அஹ்மத், ஹாகிம்



கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நோன்பாளி ஒருவர் அதிகமதிகம் குர்ஆன் ஓதுவதிலும் துஆ, திக்ர்களிலும் ஸதகா கொடுப்பதிலும் ஈடுபடுவதோடு, தீயவற்றைப் பேசுவதிலிருந்து நாவைப் பாதுகாத்துக் கொள்வதும் இன்றியமையாததாகும்.

அப்துல்லாஹ் இப்னு அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

திர்மிதி



கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நன்கு பழுத்த பேரீச்சம் பழத்தினையோ நீரையோ அவ்வாறின்றேல் வேறேதேனும் உணவினையோ உட்கொள்வதன் மூலம் நோன்பு திறத்தல் சுன்னத் ஆகும்.

அபூதாவுத், திர்மிதி, ஹாகிம்



கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒருவர் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்வாரேயானால், அவர் அந்த நோன்பாளி பெற்ற அதேயளவு நன்மையைப் பெறுவார்.

திர்மிதி, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், அஹ்மத்


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் பலதடவை பல் துலக்கினார்கள்.

ஆமிர் இப்னு ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு

அபூதாவுத், அஹ்மத், திர்மிதி



ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுவதாவது, “மாதவிடாயினால் விடுபடும் நோன்புகளைப் பின்னர் கழாச் செய்யுமாறு நாம் ஏவப்பட்டோம். ஆனால், விடுபட்ட தொழுகைகளைக் கழாச் செய்யுமாறு ஏவப்படவில்லை.

புகாரி, முஸ்லிம்
****************************************
Categories: ,