Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Friday, October 28, 2011

பெருமானாரின் இறுதி உபதேசத்தில் உண்டான மக்களுக்கான முக்கிய கட்டளைகள்.


1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….பெருமானார்(ஸல்) அவர்கள் அறபா  பெருவெளியில்  உரை நிகழ்த்தினார்கள் :-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.(
மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது)
இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.(
மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல..,
அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ, பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

Monday, October 24, 2011

இறைவனும் மன்னிப்பும்.

இலங்கை நாட்டின் ஆன்மீக மணி மகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி அவர்களால் ஆற்றப்பட்ட உரை.

Sunday, October 23, 2011

காமிலான ஷெய்கின் இலட்சணங்கள்.

  1. பெருமானார் (ஸல்) அவர்கள் வரை சென்றடைகின்ற ஸில்ஸிலாவை  (ஞான குருமார் சங்கிலித் தொடரை)க் கொண்ட நல்ல ஒரு ஷெய்கிடம் ஞான தீட்சை பெற்று ஞானத்திலும் அறிவிலும் சாம்பூரணத் தன்மையிலும் மற்றவருக்கு அருள் பாலிக்கின்ற விசயத்திலும் நல்ல பக்குவம் அடைந்திருப்பதுடன் தான் தீட்சை வழங்குவதற்கு இஜாஸாவும் (அனுமதி) பெற்றிருப்பவராக இருப்பார்.
  2. மார்க்க சட்டக் கலையிலும் கொள்கை சித்தாந்தத்திலும் ஞானக் கலையிலும் ஆழ்ந்த அறிவு (இல்மு) உள்ளவராக இருப்பதுடன் அதன்படி அமல் செய்கின்றவராயும் இருப்பார். அவ்வாறு இல்லை எனின் மனிதர்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்கிக் கொள்வார்கள். (அந்த மடையர்களான தலைவர்கள்) தானும் வழி கெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்துவிடுவார்கள் என்ற பெருமானாரின் சொல்லுக்கு இலக்காக நேரிடும்.
  3. முரீதுகளின் மூலம் ஏதேனும் பொருட்களையோ பணம் காசுகலையோ கிஞ்சிற்றும் எதிர்பார்க்காமல் அல்லாஹ்வுக்காக கடமையாற்றுபவராக  இருப்பதுடன்  முரீதுப் பிள்ளைகள் மனமுவந்து தூய்மையான எண்ணத்துடன் ஏதேனும் ஹதியாக்கள் தந்தாள் மட்டுமே ஒப்புக்கொள்பவராகவும் இருப்பார். 
  4. ஏதேனும் சருகுதல்கள் எட்பட்டுவிடின் உடனடியாக தவ்பா செய்து மீண்டு விடுவார்கள். (அத் தஸவ்வுப்- பக்கம் 90 )
  5. முரீதுப் பிள்ளைகளை ஒப்புக் கொள்வதன் மீது பேராசை கொள்ளாமல் ஞானப் பாட்டையும் நுட்பத்தையும் முக்கியத்துவத்தையும் கடின முறையைக் கையாளாமல் அவர்களுக்கு இதமாக போதிப்பவராகவும் இருப்பார்.
  6. தனது முரீதுப் பிள்ளை தன்னல்லாத மற்ற ஞான குருமார்களை விடுத்து தன்னை மட்டுமே பற்றிப் பிடிப்பவராக இருக்கிறாரா? என்பதைப் பரீட்சித்துப் பார்த்து உண்மையானவராகவும் அதில் ஆசை கொண்டவராகவும் மனத்தூய்மை உள்ளவராகவும் இருப்பதாக பெற்றுக் கொண்டால் அவரை மனமுவந்து ஏற்று ஒரு எஜமான் ஒரு அடிமையை எவ்வாறு கவனித்துக் கொள்வாரோ அது போன்று கவனித்துக் கொள்வதுடன் தன சொந்த மகனை வளர்ப்பது போன்று வளர்த்து வருவதுடன் ஒழுக்க முறைகளையும் கற்பிப்பவராக இருப்பார்.
  7. முரீதுக்கு ஏற்படுகின்ற சிறு குற்றங்களை பெரிது படுத்தாமல் இருப்பார் மறதியாகவோ அல்லது போடு போக்காகவோ ஏற்பட்டுவிட்ட தவறுகளை உடனடியாக பிடித்து விடாமல் சற்று விட்டுப் பிடிப்பவராக இருப்பார். ஆனால் தாம் ஏவிய கட்டளைக்கு மாறுபடுதலின் பால் சேர்த்து வைக்கின்ற வகையிலோ அல்லது தமது சொல், செயல்களின் மீது குறுக்கீடு தெரிவிப்பது அளவில் சேர்த்து வைக்கின்ற வகையிலோ முரீதின் செயல் அமைந்திருக்குமாயின் உடனடியாக அவனை கண்டிப்புடன் எச்சரிக்கை செய்வார் அந்த செயல்களில் இருந்து நீங்கி பிழை பொறுக்கத் தேடி அதற்காக கவலையும் கொண்டால் திரும்ப அது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று நிபந்தனை இடுபவராக இருப்பார். (ரூஹுல் பயான் பாகம் 05 பக்கம் 278 )
  8. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்றாடம் இரவு நேரங்களில் தனித்திருந்து தியானத்தில் ஈடுபடுவது போல ஒவ்வொடு நாளும் தஹஜ்ஜுத் மற்றும் இறை வணக்கங்களை நிறைவேற்றி வருவார்.

Thursday, October 20, 2011

ரூஹின் தந்தை!

இலங்கை நாட்டின் ஆன்மீக மணி மகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி அவர்களால் ஆற்றப்பட்ட உரை.

Tuesday, October 18, 2011

ஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா?

கேள்வி:

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்கிறபோது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் நாடியவற்றை இறைவனிடம் கேட்பது சுன்னத்தா? அல்லது முதுகை கிப்லாவின் பக்கம் ஆக்கி மண்றையை முன்னோக்கி நின்று துஆ செய்வது சுன்னத்தா?
பதில் சொல்பவர்: (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி என்ற அமைப்பின் அடிப்படை உறுப்பினரும், முன்னாள் எகிப்து முப்தியுமான பெரியார் ஹுஸைன் முஹம்மது மக்லூப் அவர்கள்)

மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ராவிகளில் ஒருவரான இப்னு ஹமீது என்பவர் மூலமாக கிதாபுஷ்ஷிபா என்ற நூலில் காழி இயாழ் அறிவிக்கிறார்கள்:

அபூஜஃபர் மன்ஸூர் நாழிர் என்பார் பெருமானாருடைய பள்ளிவாசலை பரிபாலனம் செய்து வந்தார். அவருக்கு மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொன்னார்கள், 'அமீருல் முஃமினீன்! இந்த பள்ளிவாசலில் உமது சப்தத்தை உயர்த்த வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் ஒரு கூட்டத்துக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும்முகமாக இவ்வாறு கூறுகின்றான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சப்தத்தை விட உங்களுடைய சப்தத்தை உயர்த்த வேண்டாம். உங்களில் சிலர், சிலரிடம் சப்தமிட்டுப் பேசுவதைப் போன்று அண்ணலாரிடம் சப்தமுயர்த்திப் பேச வேண்டாம். அப்படிச் செய்தால் உங்கள் அமல்கள் அழிந்து விடும். அதனை நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்கள்' (அல்-குர்ஆன் 49:2) என்றும்,

ஒரு கூட்டத்தினரை புகழும்முகமாக இறைவன், 'நிச்சயமாக எவர் அல்லாஹ்வுடைய தூதரின் முன் மரியதைக்காக தங்களது குரலைத் தாழ்த்திக் கொள்கின்றனரோ அத்தகையோருடைய இதயங்களை பரிசுத்தப்படுத்துவதற்காக இறைவன் சோதனை செய்தான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு' (அல்-குர்ஆன் 49:3) என்றும்,

Saturday, October 15, 2011

இஸ்லாத்தில் கல்வத்!

இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr.  மௌலவீ  அல் ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள் ஆற்றிய உரையினை உங்களுக்கு வழங்குகிறோம்.
 

Thursday, October 13, 2011

இமாம் ஹசன் மற்றும் இமாம் ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களும் - அல்லாஹ்வின் முடிவும்.


ஆக்கம்: ஜெம்சித் முஹம்மது இஸ்மாயீல் 
          ஒரு முறை இமாம் ஹசனார் அவர்களும் இமாம் ஹுசைனார் அவர்களும் ஒரு குறிப்பேட்டில் சில சொற்களை எழுதிக்கொண்டு இருவரும் தத்தந் கையெழுத்து தான் அழகு என்று கூறிக்கொண்டு இருந்தார்கள்.
அவ்விருவருமே கடைசி வரையில் சமாதானம் ஆகவில்லை. இமாம் ஹசனார் அவர்கள் கூறினார்கள் ஒ ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு ) அடம் பிடிக்காதே. நாம் இருவரும் பாட்டனாரிடம் போய் கேட்போம். அவர்கள் கூறட்டும் உன்னுடைய கையெழுத்து அழகானதா இல்லை என்னுடைய கையெழுத்து அழகானதா என்று. இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு இதற்க்கு சம்மதித்தார்கள்.


இரு சிறுவர்களும் தம்முடைய  பாட்டனார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருச்சன்னிதானதிற்கு வருகை தந்தார்கள்.

இமாம் ஹசனார் அவர்கள் கூறலானார்கள்...

என் அருமை பாட்டனாரே தாங்களே இதை பாருங்கள் என்னுடைய கையெழுத்து தானே அழகாக இருக்கின்றது. என் தம்பி (இமாம்) ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) தன்னுடைய கையெழுத்து தான் அழகாக இருக்கின்றது என்று அடம் பிடிகின்றார். நீங்களே கூறுங்கள் யா ரசூல்லுல்லாஹ்.

Wednesday, October 12, 2011

தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்.



அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு வாசகர்களே
கடந்த  நோன்புப் பெருநாள்  தினத்தன்று இலங்கை  நாட்டில் காத்தான்குடி நகரில் உள்ள புனித  காதிரிய்யாஹ் திருச்சபயினால் வெளியிடப்பட்ட தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ் என்ற பெயர் கொண்டு சங்கைக்குரிய கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அன்னவர்களால் எழுதி வெளியிடப்பட்ட புனிதா கசீததுல் புர்தஹ் ஷரீபுக்கான 301 வது விரிவுரை நூலில் அவர்கள் எழுதி உள்ள பெருமானார் (ஸல்-அம்) அவர்களின் மகிமைகளை உங்களுக்கு இன்றுமுதல் இத்தலைப்பில் தொடராக நாங்கள் வழங்க உள்ளோம் அல்ஹம்துலில்லாஹ். (இதை யாத்தளித்த அந்த மா மனிதரை அல்லாஹ் நீடுழி வாழ   வைப்பான் ஆமீன்...)
யார் அந்த நபிகள் கோமான் !
 அன்புச் சகோதரா!
நபிகள்  நாயகம் (ஸல்-அம்) அவர்கள் யார? என்ற தலைப்பில் மூன்று விடயங்களை ஆராயவேண்டும். 
  1. நபி (ஸல்) அவர்கள் மனிதனா? இல்லையா? என்பது.    
  2. அவர்கள் நம்போன்ற மனிதனா? இல்லையாஎன்பது. 
  3. அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதனா ? இல்லையாஎன்பது.    

Monday, October 10, 2011

சூபிசம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
சங்கைக்குரிய மௌலவீ கலாநிதி தீன்முஹம்மத் அஸ்ஹரீ அவர்கள் ஆற்றிய சூபிசம் பற்றிய உரையினை உங்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்வடைகிறோம்.

Thursday, October 6, 2011

இஸ்லாமிய மத்ஹபுடைய நான்கு இமாம்கள் பற்றி சிறு குறிப்புகள்.


ஹனபீ இமாம் (ரழி)
ஹிஜ்ரி 80 இல் பிறந்து 70 ஆண்டுகள் வாழ்ந்து ஹிஜ்ரி150 இல் மறைந்து பக்தாதில்  நல்லடக்கமாகி  உள்ளார்கள்.  பிக்ஹு என்ற மார்க்க சட்டக் கலைக்கு மூல  கர்தாவானவர்கள் என்று இமாமுனா ஷாபிஈ (ரழி) அவர்களால் போற்றப்பட்டவர்களும் மிகப்பெரும் செல்வச் சீமானாக இருந்தும் அதனை உதறித்தள்ளிவிட்டு இஷா தொழுகைக்காக செய்த வுழூ உடனேயே சுபஹுத்
தொழுகையை 40 ஆண்டுகாலம் நிறைவேற்றி வந்தவர்களும் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களின் ஆன்மார்ந்த அன்பர்களாகிய சஹாபாப் பெருமக்கள் வாழ்ந்துவந்த பொற்காலத்தில் வாழும் பாக்கியம் பெற்றவர்களும் குர் ஆன் ஹதீஸ் இஜ்மாஃ ஆகியவைகளின் மூலம் கியாஸ்( قياس) ஆய்வு செய்து பல்லாயிரக் கணக்கான மார்க்க சட்டங்களை இவ்வுலகுக்கு வகுத்துத் தந்த நாற்பெரும் மேதைகளான இமாம்களில் முதன்மைக்குரியவர்களும் முக்கியத்துவம் பெற்றவர்களுமான
الامام الاعظم والهمام الاقدم افضل ائمة المجتهدين
 
அபூ ஹனீபா நுஃமான் இப்னு தாபித் (ரழி)
                  *****************************************

Wednesday, October 5, 2011

ஈகைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.




உலகமெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த ஈகைத்திருநாள் நல் வாழ்த்துக்கள். عيد مبارك    
-இஸ்லாமிய இலக்கு-


Monday, October 3, 2011

தாயிப் நகரிலே தாஹா நபி (ஸல்).

நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாயிப்பிற்குச் சென்றார்கள். (இது கி.பி. 619 மே மாதம் இறுதி அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் ஆகும்). நபி (ஸல்) அவர்கள் தங்களது அடிமை ஜைது இப்னு ஹாஸாவுடன் கால்நடையாகச் சென்றார்கள். திரும்பும்போதும் கால்நடையாகவே திரும்பினார்கள். வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும், அக்கூட்டத்தால் எவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தாயிப்பிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபிஎன்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், அவர்களில் ஒருவன் உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்என்று கூறினான். மற்றொருவன் அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான்.

மூன்றாமவன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்லஎன்று கூறினான். அப்போது நபி (ஸல்) இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்துவிடுங்கள்என்று கூறினார்கள்.

நபி (ஸல்) தாம்ஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.

Comment.