உணவுகளின் மருத்துவக் குணங்கள்.
1. பேரிச்சம்பழம்
செய்வினை
– விஷம் குணமாக!
நபிகள்
நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்)
அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு
அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான
விஷமோ, செய்வினையா அவரை அண்டாது.
வாய்வுத்
தொல்லை நீங்க!
வாய்வுத்
தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு
படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு
வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம்.
2. ஜைத்தூன்
ஷைத்தான்
நெருங்காதிருக்க
“அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள்.
அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம் 40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்.
வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க
இடுப்பு
வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத்
தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல்
எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த
எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த
ஓட்டம் சீராகி விடும்.