Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Saturday, April 27, 2013

ஷாகுல் ஹமீத் நாயகத்தை கத்தார் மண் அழைக்கிறது.

அஸ்ஸலாமு அலைக்கும்.
கருணைக்கடல் கஞ்சே ஷவா ஷாஹே மீரான் ஷாகுல் ஹமீத் அப்துல் காதிருன் நாஹூரிய்யில் மாணிக்கப்பூரி கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்காளது புனித மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வு கடந்த 24-04-2013 புதன்கிழமை இரவு பத்துமணிக்கு கத்தார் நாட்டில் புனித திருக்கொடி ஏற்றத்துடன் ஆன்மீக மனம் வீச உலமாக்கள், கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் நிருவாகம்,சங்க உறுப்பினர்களால் ஒன்று சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்விலே...
1ம் நாள் மாகான் சாகுல் ஹமீத் பாதுஷா அன்னவர்கள் மீது புனித மௌலித் பாராயணமும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

2ம் நாள் நிகழ்விலே ஷாகுல் ஹமீத் ஆண்டகை மீதான மௌலித் பாராயண நிகழ்வும் வழமையாக கத்தாரில் வாரா வாரம் நடைபெறும் பூமான் நபியின் அருள் மணக்கும் புனித சலவாத் மஜ்லிசும் அதனைத்தொடர்ந்து எம்மை விட்டும் மறைந்த அனைத்து முஸ்லீம்கள் மீதும் யாசீன் பாராயணம் செய்யப்பட்டு பின்னர்  மௌலவீ நஸீம் ரப்பானீ அவர்களின் உரையும் இடம்பெற்றது. 


3ம் நாள் நிகழ்விலே மகான் அவர்களின் மௌலித் பாராயணமும் மௌலவீ பஸ்மில் ரப்பானீ அவர்களுடைய ஆன்மீக உரையும் இடம்பெற்று பெரிய துஆ ஓதப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு தபர்ரூக் விநியோகமும் இரவு ஆகாரமும் வழங்கப்பட்டு புனித சலவாத்துடன் நிகழ்வு வெகு விமர்சையாக நிறைவு பெற்றது.  

அது தொடர்பில் எமக்கு கிடைக்கபெற்ற சில புகைப்படங்களை இத்தோடு இணைத்துள்ளோம்...

நன்றி.
ஹுப்புல் பத்ரிய்யீன்
தோஹா -கத்தார் .

































Tuesday, April 9, 2013

நபிகளாரின் இணையில்லா மகிமை.

அளவில்லா பாசம் பெருமானார் மீது கொள்ளுதல் எம் கட்டாயக் கடமை. அப்படி நாம் பெருமானரை காதலித்து அவர்களை அளவில்லாது நேசிக்கும் போது எப்படி நாம் கண்ணாடியில் நம்மை பார்கின்றோமோ அதே போன்று எம்மிலே நாம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவசல்லம்  அவர்களை காணமுடியும்.  

                             وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللهِ

அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களிலே ரசூலுல்லாஹ் இருக்கிறார்கள். 

நூலால் நெய்யப்பட்ட ஆடையில் நூலை காணாமல் இருக்க முடியாதோ அப்படித்தான் இதுவும். சிந்திப்போருக்கு இந்த இறைமறை வசனம் சுபச்செய்தி கூறும்.

அவ்வடிப்படையில் நாயகத்தின் மகிமைகளை யாரும் இதுவரை கூறாத அளவில் எம் இதயங்கள் உருகும் முறையில் இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய  மௌலான மௌலவீ  ஜவ்ஹருள் அமல் கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட அற்புத உரையினை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலே அளவில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம். 


யா அல்லாஹ் இந்த அறிஞருடைய வாழ்நாளை சீரான உடல் ஆரோக்கியத்தோடு 100 ஆண்டுகளுக்கு மேல் நீளமாக்கி அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்.

Tuesday, April 2, 2013

ரிபாயீ நாயகத்தை நினைவு கூர்வோம்.

ரிபாஇய்யா தரீகாவின் ஸ்தாபகர் சங்கைக்குரிய சுல்தானுல் ஆரிபீன் ஷெய்குனா செய்யித் அஹ்மத் கபீர் அர் ரிபாயீ  நாயகம் அவர்களின் நினைவு தினத்தை நினைவு கூர்ந்து அவர்கள் தொடார்பிலான சில பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.

நாயகத்தின் புனித ரவ்ளா.
நாயகம் தொடர்பான சில புகைப்படங்களை இணைத்த வீடியோ தொகுப்பு..


நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் வழித்தோன்றலாய் வந்து எம்மை விட்டும் மறைந்து வாழும் ஷெய்குனா அப்துர் ரஷீதுல் காதிரீ வர் ரிபாயீ  அன்னவர்களால் நடாத்தப்பட்ட புனித ரிபாஇய்யா ராதிப் மஜ்லிசின் சில பகுதிகள்.





1985ம் ஆண்டு நடைபெற்ற மகான் சுல்தானுல் ஆரிபீன் அன்னவர்களின் ராதிப் மஜ்லிசின் ஒரு பகுதி.

Comment.