Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Sunday, January 27, 2013

மாநபி மீது மௌலித்!

மாநபி மீது  ஓதுவோம் என்னும் தலைப்பில் சங்கைக்குரிய மௌலவீ M ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி அவர்களால் எழுதப்பட்ட நூலினை அனைவரும் பயன்பெறும் வகையில் இங்கு வெளியிடுகின்றோம். 

Friday, January 25, 2013

கத்தார் நாட்டில் நடைபெற்ற மீலாதுன் நபி பெருவிழா.

 முழு உலகிற்கும் அருளாக வந்துதித்த எம்பெருமானார் முஹம்மதுர் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகத்துவம் நிறைந்த பிறப்பை கொண்டாடி மகிழுமுகமாக கத்தார் - ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவையினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மீலாதுன் நபிப் பெருவிழா கடந்த 25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் இலங்கையிலிருந்து வந்து கத்தாரில் தொழில்புரியும் சுமார்150 ற்கும் அதிகமான சகோதரர்கள் உற்சாகத்துடன் பங்குகொண்டனர்.

அதிகாலை3.00 மணிக்கு இஸ்லாமிய ஞாபகார்த்த சின்னமாகிய புனித கோடியேற்றத்துடன் ஆரம்பமாகிய விழாவில் மார்க்க உபந்நியாசம்பெருமானாரின் புகழ் ஓதும் மௌலீத் மஜ்லிஸ்ஸலவாத் மஜ்லிஸ்இஸ்லாமிய பாடல்முழு உலகினதும் சுபீட்சம்வேண்டி துஆ பிராத்தனை என்பன இடம்பெற்று இறுதியாக சுபுஹுத் தொழுகையுடனும் தபர்ருக் நார்சா விநியோகத்துடனும் கலை 6.30 மணியளவில் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.








நன்றி.
M.H முஹம்மத் அஸாஹிம்
செயலாளர்,
ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவை,
தோஹா - கத்தார்

Wednesday, January 23, 2013

கத்தார் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மீலாத் விழா..


அன்புள்ளீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

எங்கள் உயிரினும் இனிய கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த புனித பிறப்பை கொண்டாடி மகிழுமுகமாக வழமைபோன்று கத்தார்-ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவை ஏற்பாடு செய்துள்ள மாபெரும் மீலாதுந்நபி விழா கொண்டாட்டங்கள் இன்ஷா அல்லாஹ்  எதிர்வரும்25-01-2013அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கத்தார் நாட்டில் வாழும் எமது நாட்டு சகோதரர்களுக்கு தெரியப்படுத்தும் செய்தியை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.




தங்கள் அன்புள்ள,
M.H முஹம்மத் அஸாஹிம்
செயலாளர்,
ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவை,
தோஹா - கத்தார்

00974 77299898

Sunday, January 20, 2013

மனம் மகிழும் ஈத் மீலாத் நல் வாழ்த்துக்கள்.


மன்னர்க்கு மன்னரான, நீங்களும் நாமும் இவ்வகிலமும் தோன்றக் காரணமான எம் பெருமான் صلى الله عليه وسلم அவர்கள் இப்பூவுலகில் அவதரித்த கண்ணியமிக்க இம்மாதத்தில் மனம் மகிழும் எம் இனிய உறவுகள் அனைவருக்கும் ஈத் மீலாத் நல்வாழ்த்துக்கள்.

இம்மாதத்தை கண்ணியம் செய்வதோடும் பெருமானார் صلى الله عليه وسلم அவர்களின் புகழ் பாடுவதொடும் எம் செயற்பாடுகளை நிறுத்திவிடாமல், அவர்களது வாழ்க்கை முறையினை, அவர்கள் சொன்னவற்றை, அவர்கள் ஏவிய, அங்கீகரித்த விடயங்களை எடுத்து நடப்பதோடு, அவர்கள் தடுத்த விடயங்களிலிருந்து விடுபட்டு எம்மையும் எமது உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு வல்ல நாயனும், கண்மணியாம் செய்யிதுனா முஹம்மதுன் صلى الله عليه وسلم அவர்களும் எமக்கும் அருள் புரிய வேண்டும். ஆமீன்.


Tuesday, January 8, 2013

தத்துவத்தின் முத்துச் சுடரே !

கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பெயரிலான அளவுக்கதிமான புகழ் பாடல்களை தமிழ் மொழியில் பாடி எம் மனங்களில் நீங்க இடம் பிடித்த நாகூர் EM ஹனீபா அவர்களால் பாடப்பட்ட அற்புதமான பாடல் ஒன்றினை இம்மாதத்தின் சிறப்பை கருத்தில் கொண்டு பதிவேற்றம் செய்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்.




Monday, January 7, 2013

கத்தாரில் மனம் கமழும் இரு பெரும் மனாகிப் மஜ்லிஸ்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

கத்தார் நாட்டில் தொழில் ரீதியாக இடம்பெயர்ந்து வாழும் எம் இலங்கை நாட்டைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கால் சகோதரர்கள் ஒன்றிணைந்து மிக சிறப்பாக கடந்த நாட்களாக நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் புகழ் போற்றும் புனித கசீததுல் வித்ரிய்யஹ் ஷரீபினை ஓதி வருகிறார்கள். 

அந்த வரிசையில் பூமான் நபியின் பரம்பரையில் வந்தவர்க்களும் இந்திய நாட்டில் பிறந்து பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய மகான் அஸ் செய்யிதுஸ் ஷேய்க் அப்துர் ரஷீத் தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் நினைவு தின மனாகிப் மஜ்லிஸ் கடந்த 04-01-2013 வெள்ளி இரவு 9.30 மணிக்கு புனித வித்ரிய்யஹ் ஷரீபை தொடர்ந்து நடைபெற்று துஅஹ் பிரார்த்தனை செய்யப்பட்டு இனிதே சலவாத்துடன் நிறைவுற்றது. 

இந்நிகழ்வில் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.








நன்றி.
இப்னு பாறூக்.

Comment.