Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Monday, May 28, 2012

ஜனாஸா அறிவித்தல்...

அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் 

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களின் மனைவியும், மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்களின் தாயாருமான ஸஹ்றா அவர்கள் இன்று   (28.05.2012 திங்கட் கிழமை) இலங்கை நேரப்படி பி.ப 7.05 மணிக்கு காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை இலங்கை நேரப்படி (29.05.2012 செவ்வாய்க்கிழமை) 9.00 மணிக்கு நடைபெறும்.

தகவல் ஷம்ஸ் மீடியா.  

Wednesday, May 23, 2012

ஏகத்துவ ஞானம்.

இன்று உலகம் முழுவதும் பெருமானார் ஸல்-அம் அவர்களது பொன்மொழிப் பேளைகலான புனித ஸஹீஹுல் புகாரி மற்றும் புனித முஸ்லிம் கிரந்தங்கள் வாசிக்கப் படுகிறது. அப்படி வாசிக்கப் படும் புனித சபைகளுக்கு  செல்லும் பாக்கியம் பெற்றவர்களின் மறுமை வாழ்வு அங்கு சென்று பார்த்தால்தான் விளங்கும்.

 அவ்வடிப்படையில் இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜும்அஹ்

Wednesday, May 16, 2012

அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியம் செய்வோம்.

அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்கள் மீது புகழ் பாடப்பட்ட பெயர்பெற்ற அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட இனிய பாடல்கள்.


Sunday, May 13, 2012

சூபிசமும் உண்மை நிலையம்.

சூபிசம் என்ற இஸ்லாமிய இறைஞானக் கொள்கையினை, சமாதன வழியினை இன்று சில குழப்ப வாதிகள் பொய்யாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் காலம் இது.

எனவேதான் நாம் சூபிசம் என்றால் என்ன என்பது பற்றி தெளிவாக அறிந்து வைத்திருத்தல் வேண்டும் இல்லையேல் எம்மையும் வழிகேட்டில் அழைத்து விடுவார்கள். 


ஆகவே இதன் மகத்துவத்தை அறிந்து கொள்ள, நேர்வழியில் சென்று இறைவனை அடைய நாம் இலங்கை நாட்டைச்சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ ஜவ்ஹருல்அமல் கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் ஆற்றிய உரையினை வழங்குகின்றோம்.

காதலில் இறை காதலே சிறந்தது உலகை காதல் கொண்டவனுக்கு இறை காதலின் மகத்துவம் புரியவே புரியாது.

Sunday, May 6, 2012

ஈமானின் எழுச்சியும் வழிகேட்டின் வீழ்ச்சியும்.

அஸ்ஸலாமு அலைக்கும். 

இன்று அவ்லியாக்கள் நபிமார்கள் விடயங்களில் தோற்றுப் போன சிலர் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரங்களை ஆதாரங்களோடு நிரூபிக்கும் இந்திய நாட்டின் சங்கைக்குரிய மௌலவீ நிஜாமுத்தீன் அஹ்ஸனீ அவர்களின் சிறப்புறு உரைகளில் நின்றும் சில பகுதிகள்.



- ஏறும் கொடியும் ஈமான் பலமும் -

ஷம்ஸ் மீடியாவுக்கு எமது நன்றிகள்
ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும் (Click)
என்ற மதியன்பனின் கவிதைக்கு பதிற் கவிதை

ஆழமறியாமல் காலை விட்டதேன்?
மதியன்பன் மதியிழந்ததேன்?
கவித்திலகம்
இவரது கவிதைக் கிறுக்கு
கியாம நாளின் அடையாளங்களில் ஒன்று
“ஜாஹில் மார்க்கம் பேசுவான்“
என்ற நபீ மொழி
இதற்குச் சான்று!

தம்புள்ள சாத்தான்
இவரது இதயத்துள்
புகுந்து கொண்டானோ.....?
அதனாற்றான் –
தர்காக்களை உடைக்க
உலமாக்களை அழைக்கிறார்.


“ஏறும் கொடியால் ஈமான் இறங்குதாம்“
என்னே இவர் கண்டுபிடிப்பு.
நாளை மறுமையில்
இவருக்கு
“லிவாஉல் ஹம்து“ கொடியின்
நிழல் கிடைக்குமோ?

Comment.