Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Monday, April 30, 2012

ஷஹீத் என்றால் யார்?

 அஸ்ஸலாமு அலைக்கும்.

உலகமெங்கும் வாழும் சூபிச வழி வாழ் முஸ்லீம்கள் இம்மாதம் கஞ்சே ஷவா ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்களது நினைவு நாளை கொண்டாடி வருகிறார்கள். இவர்களது புனித அடக்கஸ்தலம் இந்தியாவில் தமிழ் நாட்டில் நாகூர் என்ற ஒரு பட்டினத்தில் அமைத்திருக்கிறது.

மகான் உலகிலே வாழ்ந்த காலத்தில் இறைவனுக்காக அவனுடைய மார்கத்துக்காக தனது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளையும் அர்ப்பணித்தார்கள்.

காரணக் கடல் என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படும் மகான் அவர்கள் இன்றும் தான் வாழும் இடத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ * فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ * يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ

Sunday, April 22, 2012

ஷெய்கு தாவூத் வலியுல்லாஹ்.

முத்துப்பேட்டையில் வாழும் மகான் வைத்தியக்கலாநிதி ஷெய்கு தாவூத் வலியுல்லாஹ் அவர்களது நினைவு நாளை கௌரவித்து இலங்கை நாட்டில் வாழும் சங்கைக்குரிய ஷம்சும் உலமா கலாநிதி ஜவ்ஹருள் அமல் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்களால் இயற்றப்பட்ட புனித கசீதாகள் எமது இஸ்லாமிய இலக்கின் அன்பளிப்பாய் உங்களுக்கு வழங்கப்படுகிறது.

மகான் ஷெய்கு தாவூத் வலியுல்லாஹ் அவர்கள் தன்னை நேசிப்போருக்கு பல்வேறு வகைகளிலே உதவிகள் செய்திருக்கிறார்கள்.

Tuesday, April 17, 2012

இறை ஞானப் பாடால்கள் .

மகான் குணங்குடி மஸ்தான் சாஹிப் (குத்திச சிர்ருஹூ) என்று அழைக்கப்படும் இறை காதலரும் சூபிகளில் ஒருவரும் இறைவனில் தன்னை மறந்தவர்க்களுமான மகான் அவர்களால் பாடப்பட்ட இறை ஞானப் பாடால்கள் அடங்கிய வடிவம் ஒன்றை உங்களுக்கு வழங்குகின்றோம்.
Kunangudi Masthan Sahib Oliyullah Padalgal

Sunday, April 15, 2012

கலிமா தரும் போதனை.

இலங்கை நாட்டைச் சேர்ந்த மர்ஹூம் அஷ் ஷஹீத் மௌலவீ MSM பாறூக் காதிரீ அவர்களால் பல வருடங்களுக்கு முன்னாள் புனித சஹீஹுல் புஹாரி மஜ்லிஸ் நிகழ்வில் ஆற்றப்பட்ட ஒலி வடிவை உங்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்வடைகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

Monday, April 9, 2012

நபி மார்கள் சிலர்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் வாசகர்களே. அல்லாஹ் உலகிலே மக்களை நேர்வழிப்படுத்த 124000 நபிமார்களை அனுப்பினான். அவர்கள் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு இடங்களிலும் மார்கத்தை மலரச் செய்தார்கள். அவர்களுக்கு வேதங்களும் சுஹுபுகளும் வழங்கப்பட்டது. 

நபிமார்கள் அனைவருக்கும் முத்திரையாக இறுதியாக உலகில் தோன்றியவர்கள் எம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாவார்கள். 

அவ்வடிப்படையில் அல்குர்ஆனிலே 25  நபிமார்களை பற்றி அல்லாஹ் கூறிக்காட்டி இருக்கிறான். 

எமக்கு கிடைக்கப் பெற்ற நபிமார்களில் ஒரு சிலரின் அடக்கஸ்தலங்களின் புகைப்படங்களை உங்களுக்காய் வழங்குகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

 நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம்

Saturday, April 7, 2012

இஸ்லாமிய கவாலி கீதங்கள்.



Tuesday, April 3, 2012

மீள் வருகை.

எமது இஸ்லாமிய இலக்கானது சில தீய சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து சில காலம் தடைப்பட்டு இருந்ததை தாங்கள் அறிவீர்கள். 

அல்லாஹ்வின் பாதையிலே பயணிக்கும் பொழுது சில துயரங்களும் தடைகளும் ஏற்படுவதே வழக்கம். அப்படி நாமும் சந்தித்த பிரச்சினையினால் எமது வாசகர்களுக்கு நாம் ஆற்றி வந்த ஈமானியப் பணி தடைப்பட்டது. அதற்காக நாம் மனம் வருந்தவோ வேதனைப்படவோ இல்லை. ஏனனில் செயல்கள் அனைத்துமே அல்லாஹ்வுடையதே என்பதே எமது அசைக்க முடியா நம்பிக்கை. எத்தனை தடைகள் பிறந்தாலும் நாம் மீண்டும் மீண்டும் எழுவோம். சத்தியம் அழிவதில்லை. 


அல்ஹம்துலில்லாஹ்.
நிருவாகம்.
இஸ்லாமிய இலக்கு.

Monday, April 2, 2012

இறை அறிவு.

இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அன்னவர்களால் இறை அறிவு என்னும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது. 


Comment.