தாயத்துக் கட்டுதல் - ஓர் பார்வை.
Posted by islamiyailakku on 8:36 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.
தற்காலத்தில் சில குதர்கவாதிகள் திருமறைக்கும், திரு நபி மொழிக்கும் ஆழமான அறிவு ஞானம் இல்லாமல், வெளி நீச்சல் அடித்து முத்தெடுத்ததாய் எண்ணிக்கொண்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை தீயாக பரப்பி வருகிறார்கள். பாமர மக்கள் இவர்களின் வெளி வேஷத்தை கண்டு ஏமார்ந்து அவர்களுக்கு வழிப்படுகிறார்கள்.
இப்படி இவர்களால் மார்கத்தில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்கள் ஏராளம். எமது சுன்னத் வல் ஜமாஅத் வழி வாழ் அறிஞர்கள் இதற்கு தமது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டும், மார்கத்தில் கூறப்பட்டது எது என்பதையும் தெளிவாக்கி அல்லாஹ் ஹிதாயத்து கொடுத்த மக்களை நேர்வழியின் பால் அழைக்கிறார்கள்.
அந்த வரிசையில் "தாயத்துக் கட்டுதல்" என்பதற்கு அறியாமையின் தலைவர்கள் தமது குறுகிய அறிவின் பிரகாரம் ஆழம் அறியாது தத்தமது இஷ்டத்துக்கு மார்கத்தை பந்தாடுகிறார்கள். தாயத்து கட்டுவது தொடர்பாக பல்வேறு பொய்களை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறார்கள். இதற்கு பதில் கொடுக்கும் முகமாக, இலங்கை நாட்டின் ஆன்மீக மணி மகுடம் ஷம்சுல் உலமா கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் ஆற்றிய தாயத்துக் கட்டுதல் என்ற தலைப்பிலான உரையினை வழங்குவதில் நாம் மகிழ்வடைகிறோம்.
Categories: MP3 Bayan Misbaahee